இன்று வெளியுறவு கொள்கையைத் தீர்மானிப்பதில்
பெரும்பங்கு வகிப்பது பூகோள அரசியல்.
அதாவது நம் அண்டை நாடுகள். நாம் எதை வேண்டுமானாலும்மாற்றிக்கொள்ளலாம். ஆனால் நம் அண்டை நாடுகளைபூகோள வரைப்பட த்தில் மாற்றிக்கொள்ள முடியாது!
இந்த மாற்ற முடியாத யதார்த்த நிலை நம் வெளியுறவு கொள்கையில் அதிமுக்கியத்துவம் பெறுகிறது.
நியாயம், தர்ம ம், அரசியல் அறம், மனித நேயம்,
சகோதரத்துவம், இவை எல்லாம் உன்னதமானவை என்றாலும்
நம் வெளியுறவு கொள்கையில் இவை இரண்டாம் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. சில சமயம் காணாமல் கூட போய்விடுகின்றன.
இரண்டாவது உலக மகாயுத்த த்திற்குப் பின் ஆசிய நாடுகளின்சகோதரத்துவத்தை முன்வைத்த பாரதப்பிரதமர் நேருவின் பஞ்ச சீலா
கொள்கையும் அதன் சிதைவுகளும் நம் அறம் சார்ந்த வெளியுறவுகொள்கைக்கு கிடைத்த அடி.
(Realities of power politics) அதிகாரப்போட்டி அரசியலின் யதார்த்தம் என்ன என்பதை நேச நாடுகளாக இருந்து எதிரி நாடுகளாக மாறியவர்கள் தான் இந்தியாவுக்கு கற்றுக்கொடுத்தார்கள.
அதன்பின் 1970வாக்கில் இந்தியா அறம் சார்ந்த வெளியுறவு கொள்கையை கைவிட்டு அதே நேரத்தில் முழுக்கவும் தன் சுயநலம் சார்ந்த வெளியுறவு கொள்கைக்குள் வராமல் ஒரு இடைப்பட்ட நிலையில் இருந்தது எனலாம். இக்காலத்தில் இந்தியா கூட்டுச்சேரா கொள்கையைக் கைவிட்டு சோவிய வல்லரசின் நேச நாடாகிவிட்டது. இராணுவம், தொழில்நுட்பம் வளர்ச்சிகளின் சோவியத்தின் உதவி. சோசலிஷ பொருளாதரக் கொள்கை என்ற அரசின் பிரகடனம். தனியார் நிறுவனங்கள் அரசு மயமாக்கப்பட்ட நிலை.
1971ல் பாகிஸ்தானைப் பிரித்து வங்கதேசத்தை உருவாக்கியதில்இந்தியாவின் பங்கு.
1974ல் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனையில் வெற்றி பெற்று இந்தியா
தன்னை அணுஆயுத நாடாக காட்டிய வல்லரசு முகம்.
1991ல் சோவியத் வல்லரசு உடைந்த தை அடுத்து சோஷலிச கொள்கை
அடிப்படையில் இந்தியாவும் சீனாவும் கை கோர்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் ஆசியாவின் நிலப்பரப்பில் ஒரு வல்லரசு தான் என்ற நிலைப்பாடு.
அது சீனாவா இந்தியா என்ற போட்டி. இந்தியா அமெரிக்காவின் பக்கம்
தலைசாய்க்க வேண்டிய கட்டாயம்.
பிரிவினை நாளிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடுவில்
தொடரும் பனிப்போரும் நிஜப்போர்களும் எல்லைக்கோடுகளின் ஒப்பந்தங்களும்
மீறல்களுமாக தொடரும் பதட்டம்..
இந்திய பாகிஸ்தான் உறவு ஆயுத விற்பனை சந்தையின் ஏஜெண்டுகளுக்குதீனிப்போட்ட து.
உள் நாட்டு அரசியலில் போரும் போரின் வெற்றிகளும் கொடுக்கும் “இமேஜ்” … அதைக் கட்டமைக்கும் இந்திய மக்களின்
உளவியல்… இதை இரு நாடுகளின் ஆட்சி அதிகார அரசியல் பயன்படுத்திக் கொள்ள
தவறவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
உலக அரங்கில் தீவிரவாத த்திற்கு எதிரான போர்… சூழ்ந்திருக்கிறது உண்மை.
ஆனால் யார் இந்த தீவிரவாதிகளை உருவாக்கினார்கள்?
எந்தப் பொருளாதார அடியாளின் முகமூடி இதைச் செய்கிறது?
இந்தக் கேள்வி பல முடிச்சுகளைக் கொண்ட து.
ஒரு முடிச்சை அவிழ்க்கும் போது அதுவே இன்னும் பல முடிச்சுகளைப்போட்டுவிடும்.
குரூட் ஆயில் ஒப்பந்தம் முதல் பருத்தி ஒப்பந்தம் வரை
அதற்கு அரசு தீர்மானிக்கும் ஏற்றுமதி இறக்குமதி வரி விகிதம்..
இத்தியாதி பல காரணங்கள் இன்றைய சூழலில் எல்லையில்குண்டுவெடிப்புகளுக்கான காரணங்களில் ஒன்றாகிவிடுகின்றன..
இவை அனைத்தையும் தாண்டி.. எந்த அரசு ஆட்சி செய்தாலும்வெளியில் சொல்ல முடியாத காரணங்கள், அரசியல் நெருக்கடிகள்
வெளி நாட்டு அரசியல் என்று வாசிக்கவும் இருக்கின்றன.
எனவே…..
பதட்டமான சூழல் நிலவும் போது எடுத்தேன் கவிழ்த்தேன்
என்று வீர வசனம் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை.
(அப்படியான நிறைய முக நூல் பதிவுகளை வாசித்து
இது அவர்களின் புரிதலா அல்லது இம்மாதிரியான
எதிர்வினைகளுக்கே நாம் பழகிவிட்டோமா ..
என்ற அச்சம் வந்த து.)
மேலும் லோக்கல் அரசியல் களத்தை மாம்பழம்,
பம்பரம், உதிர்ந்த இலை, அஸ்தமிக்கும் /ஆஸ்தமிக்காத சூரியன்
என்று நையாண்டி அரசியல் செய்வது போல் அல்ல வெளியுறவு பன்னாட்டு அரசியல் தளமும் களமும்.
இந்தியா பாகிஸ்தானுக்கிடையே யுத்தம் வரக்கூடாது என்றுகராச்சியிலிருந்து பத்திரிகையாளர்களின் குரல் மும்பைப்பத்திரிகையாளர்களின் குரலுடன் சேர்ந்து ஒலித்த து
பாகிஸ்தானில் நிலையான ஆட்சி இருந்தால் தான் இந்தியாவின்எதிர்காலத்திற்கும் வளர்ச்சிக்கும் நல்லது என்பதையும்
பாகிஸ்தான் என்ற தேசம் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும்
நடுவில் இருக்கும் பூகோள அமைப்பை இந்திய அரசு பல்வேறுகோணங்களில் அணுகும் நிலையில் இருக்கிறது...
இப்படி பல கோணங்களில் நாம் அணுக வேண்டியதிருக்கிறது.
இராணுவ இரகசியங்கள் எப்போதுமே
‘இராணுவ இரகசியங்கள் தான்.
அவை ரகசியமாகவே இருக்கட்டும், இருக்க வேண்டும்.
எந்த ஒரு கட்சியும் தங்கள் லோக்கல் அரசியலுக்கு/ஓட்டு அரசியலுக்கு
நம் இராணுவ வீர்ர்களின் தியாகத்தை விலையாக்கினால்
அதை தடுப்பதிலும் அதற்கு எதிராக குரல் கொடுப்பதிலும்
மட்டுமே நம் கவனம் இருப்பது இத்தருணத்தில் நல்லது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் லட்சணத்திற்கு இலங்கை மிக சிறந்த எடுத்துக்காட்டு. இங்குள்ள சிங்களவர்கள் மிக மிக வெறுக்கும் நாடு இந்தியாவும் இந்தியமக்களும் தான். இந்தியர்களை சல்லிக்காசுக்கும் மதித்து பேச மாட்டார்கள். அதாவது போரின் போது அவர்கள் புலிகளுக்கு அதாவது பிரிவினைவாத தமிழர்களுக்கு சார்பாக நடந்து கொண்டார்கள் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. அதே போல இலங்கை தமிழர்கள் மிகவும் வெறுக்கும் நாடு இந்தியாதான். அதாவது இந்தியா எப்போதும் இலங்கை அரசுக்கு அதாவது சிங்களவர்களுக்கு சார்பாக நடந்து கொண்டது/கொள்கிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு. ஆக மொத்தம் ஏதோ தான் தந்திரமாக நடந்துகொள்வதாக நினைத்து எல்லோரிடமும் வெறுப்பையே சம்பாதித்து வைத்திருக்கிறது இந்தியா.
ReplyDeleteஅமெரிக்காவின் மிகப்பெரிய சந்தை இந்தியா. அதனால் சுற்றியுள்ள குட்டி நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக இந்தியாவோடு சற்று இணக்கமாக நடந்து கொள்வது போல் பாவலா காட்டுகிறதே தவிர இந்தியாவுக்கு நற்பு நாடு என்று எதுவும் பிராந்தியத்தில் இல்லை என்பது கசப்பான உண்மை.