Saturday, September 23, 2017

உன்னால் முடியும் தம்பி ..ஒரிஜினலும் சினிமாவும்

உன்னால் முடியும் தம்பி தம்பி..
Image result for எம் எஸ் உதயமூர்த்தி
எம்.எஸ். உதயமூர்த்தியின் தாரகமந்திரம்.
தன்முனைப்பு கருத்துகளை உள்ளடக்கிய
அவருடைய கட்டுரைகள் தொடராக வார இதழ்களில் வெளிவந்தன.
இவர் எழுதிய "எண்ணங்கள் " என்ற புத்தகம்
அந்தக் காலத்திலேயே 10 இலட்சம் பிரதிகள்
விற்றது  என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
இவர் கருத்துகளுக்கு அக்காலத்தில்
இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
 நதிகளின் இணைப்பு என்ற குரல் பொதுஜன ஊடகத்தில்
பரவலாக பேசப்பட்டதற்கு  முக்கியமான காரணமாக இருந்தார்.
அரசியல் சாக்கடை அல்ல, நல்லவர்கள் ஒதுங்கி இருப்பதால்
 ஏற்பட்ட அவலம் தான் இன்றைய கேடுகெட்ட அரசியலுக்கு
காரணம் என்று இளைஞர்களிடம் எடுத்துரைத்தார்.
" மக்கள் சக்தி " என்ற இயக்கம் கண்டார்.
மதுரை மத்திய தொகுதியில் தன் இயக்கம் சார்பாக
தேர்தலில் நின்றார். தன் தேர்தல் பிரச்சாரத்தில்
"என்னிடம் நிறைய பணம் இருக்கிறது
ஆகவே மக்கள் பணத்தை தொடமாட்டேன்,
என்னிடம் உள்ள ஆற்றலை, அறிவை உங்களுக்கு
 செலவிட சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரம் தேவை.
 என்னைத் தேர்ந்து எடுப்பதன் மூலம் ஒரு நேர்மையாளனை
 தேர்ந்து எடுக்கிறீர்கள், என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம்
 நதிகளை தேசியமயமாக்கவேண்டும் என்ற குரலை
 வலுப்படுத்துகிறீர்கள், என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம்
 இந்த நாட்டிற்கு நல்ல பல இளைஞர்களை வருவதற்கான
 பாதையை அமைத்து தருகிறீர்கள்" என்று பேசினார்.
வழக்கம் போல நம் வாக்காளர் பெருமக்கள்
அவரைத் தோற்கடித்தார்கள்.
தமிழக அரசியல் தலைவர்களான அறிஞர் அண்ணா,
கலைஞர், எம்ஜிஆர் ஆகியோருடன்
இணக்கமான தொடர்பை வைத்திருந்தார்.
------
என் திடீர்னு எம் எஸ் உதயமூர்த்தி ?
நினைவுக்கு வந்திட்டாருனு கேட்காதீர்கள்.
பெரிசா ஒன்னுமில்ல. நேற்று ராஜ் டிவியில்
கமலஹாசன் உதயமூர்த்தி என்ற பெயரில்
நடித்த பாலசந்தரின்  "உன்னால் முடியும் தம்பி" திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. எப்படியோரிமோட் அதில்
மாட்டிக்கொண்டதால் உதயமூர்த்தி நினைவுக்கு வந்துவிட்டார்.
இப்போ இருக்கிற நிலையில கமலின்
 "உன்னால் முடியும் தம்பி" திரைப்படத்தைக் காட்டுவது
 ஏதேச்சையாக நடந்ததா.. இல்ல ..
வேறு எதுவும் காரணத்தோட நடக்குதா..!
ரஜினி அரசியல் பிரவேசத்தைக் கொண்டாடிய மக்களுக்கும்
கமலின் அரசியல் டுவிட்டர்களைக் கொண்டாடும் கூட்டத்திற்கும்
 நிறைய வேறுபாடு இருக்கிறது  என்பது அடிக்கடி
என் நினைவில் வருகிறது. தவிர்க்க முடியவில்லை.


அண்ணாவின் தம்பிகள்
கலைஞரின் உடன்பிறப்பே
எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களே
இதே வரிசையில் போகிறதா..
உன்னால் முடியும் தம்பி, தம்பி...
கருப்புக்குள் காவியும் அடக்கம் என்று
விளக்கெண்ணெய் அரசியல் பேசும்
உலகநாயகனுக்கு ஊடகங்கள் ஏன் வெண்சாமரம் வீசுகின்றன!?

7 comments:

  1. உன்னால் முடியும் தம்பி... திரு உதயமூர்த்தி தகவல்களுக்கு நன்றி.
    நல்லவற்றை மக்களுக்கு எடுத்துரைத்தார் ஆனால் //வழக்கம் போல நம் வாக்காளர் பெருமக்கள் அவரைத் தோற்கடித்தார்கள்.// மாற்றம் ஒன்றே மாறாதது என்று தமிழ் சினிமாவில் சொல்படும் வசனம் கூட இங்கே பொய்த்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. M S Udayamurthy failed in electoral politics, but he changed many youngsters life through his writing, thanks

      Delete
  2. வரவுக்கு நன்றி

    ReplyDelete
  3. உதயமூர்த்தி என் ஆதர்ச நாயகன் ,எவ்வளவு அருமையான கருத்துக்களைக் கூறினார் ,புஸ்தகங்கள் எழுதினார் ,அவர் தேர்தலில் தோற்று இருக்கலாம் ,பலரின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் !
    கமல்,எதைப் பற்றியும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லவேண்டும் ,கோலும் முறியக் கூடாது ,பாம்பும் சாகணும் என்ற கதையெல்லாம் அரசியலுக்கு ஆகாது :)
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. நானும் அக்காலத்தில் உதயமூர்த்தி கட்டுரைகளை விரும்பி வாசித்திருக்கிறேன்.

      Delete
  4. ஊடகங்களின் இரட்டை வேடத்தால் மக்கள் குழம்பி போயிருக்கிறார்கள் யாரை நம்புவது , யார் பொதுமக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பார் என்பதிலேயே குழப்பம் இதில் நடிகர்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி , தங்களது சொத்து மத்திய அரசால் பறிக்கப் படுமோ என்கிற பயத்தில் அரசியல் செய்கிறார்கள் இதில் எம் எஸ் உதயமூர்த்தி போன்றவர்களின் உயரிய நோக்கம் தவிடு பொடியாக்கப்படுவது இயல்பே அரிதாரம் பூசியவர்களின் வார்த்தைகளுக்கு தமிழக மக்கள் அடிமையாய் இருப்பதே தமிழகத்தின் தலையெழுத்து போலும் .

    ReplyDelete
    Replies
    1. ஊடகங்கள் தங்களின் தார்மீக சமூக அறத்தைக் கைவிட்டுவிட்டன. ரேட்டிங் தான் நோக்கமாக இருக்கிறது. வருகைக்கு நன்றி.

      Delete