Thursday, February 9, 2017

இந்துத்துவ பூச்சாண்டி

பன்னீருக்குப் பின்னால் முன்னால் பாரதிய ஜனதா. ஒகே.
சசிக்கு இடப்பக்கம் பிஜேபி
திமுக வுக்கு வலப்பக்கம் பிஜேபி.
இவுங்க எல்லோரையும் சுற்றி காவி ஒளிவட்டம்
சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
இதிலே பன்னீருக்கு மட்டும் ஏன் வறுத்தெடுப்பு?
இதுதான் எனக்குப் புரியலை.
அப்புறம் அது என்ன இந்துத்துவ பூச்சாண்டி..?
எங்கே எப்போ இல்லை இந்துத்துவ..!
நடுவண் அரசில்
காங்கிரசு ஆண்டபோது இந்துத்துவ இல்லையா
இல்லை இருந்ததை மறந்துவிட்டீர்களா.
இன்றைக்கு பிஜேபி வந்துடும் இந்துத்துவ வந்துடும்னு
பூச்சாண்டி காட்டுகிறவர்கள் ..
தமிழகத்தின் சர்வ அரசியல்வாதிகளுக்கும்
பின்னாலும் முன்னாலும் பிஜேபியும் இந்துத்துவமும்
இல்லை என்று சொல்ல வருகிறார்களா?
இல்லை என்று ஆணித்தரமாக 
எந்த ஒரு அரசியல்வாதியோ அரசியல் கட்சியோ
 சொல்லிவிடமுடியுமா?

பின்குறிப்பு: இப்பதிவை வாசித்துவிட்டு சட்டுனு
நான் இந்துதுவவாதி, பிஜேபி சப்போர்ட்னு
முத்திரை குத்திடாதீங்கப்பா.

4 comments:

  1. அதானே....! மதத்தையும், ஜாதியையும் வைச்சு அரசியல்வாதிகள்தான் அரசியல் செய்வார்கள்.

    ReplyDelete
  2. DMK - AIADMK இரண்டு கடசிகளும் பிஜேபி யை தூக்கி சுமந்துள்ளன ஆனால் பிஜேபியின் விளையாட்டு இவர்களிடம் நடக்காது இப்போ திரு . ஒபிஸ் அவர்களை பிஜேபி ஆட்டிப்படைக்கும் . இப்போ பார்தோம்மில்ல நீட்டா - உதய் - ரேஷன் தடை இதில் எல்லாம் மறுபேசில்லமல் கையெழுத்து போட்டுவிட்டவர் தான் நம்ம ஒபிஸ். மெரினாவில் தடியடி அசம்பெளில் ஒசாமா போட்டோ இங்கே தான் இவர்மேல் பயம் அல்லது பிஜேபி மேல் அல்ல பயம் . பிஜேபி தமிழ்நாட்டில் காலுன்ற தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்க்கின்றது நடக்கவில்லை நம்ம ஒபிஸ் அதற்க்கு துணை போகக்கூடாது என்பது தான் எங்களது ஆசை .

    M. செய்யது
    Dubai

    ReplyDelete
  3. சிறப்பாக அலசியுள்ளீர்கள்
    தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    ReplyDelete
  4. பூச்சாண்டிகாட்டுகிறார்கள்.

    ReplyDelete