பொதுஜன உளவியல் பூதம்
"ஜெ" வின் வழக்கின் போது அண்மையில் கணம் நீதிபதியே கேட்கிறார்.
.. "ம்காத்மா காந்தியடிகளும் தண்டனை பெற்றவர்தானே என்று"??!!
முகநூல் / வலைப்பூ பதிவுகளை மட்டுமே கணக்கில் கொண்டு
தமிழ்ச் சமூகத்தின் உளவியலை வாசித்துவிட முடியுமா?
என்ற கேள்வி எப்போதும் எனக்குண்டு.
அதிலும் குறிப்பாக அக்மார்க் அரசியல் பற்றிய பதிவுகளைச்சொல்லியாக
என்ற கேள்வி எப்போதும் எனக்குண்டு.
அதிலும் குறிப்பாக அக்மார்க் அரசியல் பற்றிய பதிவுகளைச்சொல்லியாக
வேண்டும். அரசியல் பதிவுகளை எழுதி பலரின் நட்பை இழந்திருக்கும்
நானும் இதில் அடக்கம்.
அண்மையில் பிரேக் பிரேக் போட்ட தமிழக அரசியல் செய்திகளும்
அண்மையில் பிரேக் பிரேக் போட்ட தமிழக அரசியல் செய்திகளும்
களங்களும் முகநூலில் நக்கலாக நையாண்டியாக
அறச்சீற்றமாக ஏன் நாடக இயக்கத்தின் காட்சிகளாக
இப்படி சகலமாகவும் அனைவரையும் எழுத வைத்துவிட்டது.
ஜெ சட்டப்படி குற்றவாளி என்ற தீர்ப்பு வந்தப்பிறகும்
மக்கள் மன்றத்தில் ஜெ ஒரு குற்றவாளி என்ற பிம்பம்
இன்னும் பதியவே இல்லை. அப்படியானால் அரசியல்
என்றாலே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்
என்பதை மக்கள் எளிதாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்
என்றே எண்ண தோன்றுகிறது.
என்றாலே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்
என்பதை மக்கள் எளிதாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்
என்றே எண்ண தோன்றுகிறது.
லஞ்சம், ஊழல், அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்பது
இன்று ஒவ்வொரு தமிழனின் - இந்தியனின் -
இன்று ஒவ்வொரு தமிழனின் - இந்தியனின் -
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை முறையாக இருக்கிறது.
தன் மகனுக்கோ மகளுக்கோ டாக்டர் /எஞ்சினியர் சீட்டோ
அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையோ
தன் மகனுக்கோ மகளுக்கோ டாக்டர் /எஞ்சினியர் சீட்டோ
அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையோ
இத்தியாதி எதையாவது பெறுவதற்கு மேற்சொன்ன லஞ்சமோ அதிகாரத்தைப் பயன்படுத்தலோ இல்லாத எந்த ஒரு குடும்பமாவது இருக்கிறதா என்று கேட்டால் ஏழரை கோடி தமிழர்கள் வாழும் மண்ணில்
அப்படி வாழும் குடும்பங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
இன்னாரின் சிபாரிசு இருந்ததால் இந்த வேலை சுலபமானது
என்பதைக் கொஞ்சமும் வெட்கமின்றி வெளிப்படையாக
சொல்லிக்கொள்கிறோம். அப்படி எல்லாம் எவராவது
தன் வாழ்க்கையில் ஆதாயம் தேடவில்லை என்றால் அவரை
"சரியான பேக்கு... பிழைக்கத்தெரியாதவன்.உதவாக்கரை
useless... " இப்படி பல அடைமொழிகள் கொடுத்து ஒதுக்கி
வைத்துவிடுகிறோம். எனவே இயல்பாகவே லஞ்சமும்
அதிகாரத்தை தன் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதும்
வாழ்க்கையின் சாதாரண அம்சமாக மாறிவிட்டது

என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.
இந்த உளவியல் மாற்றங்களை மிகவும் குறுகிய காலத்தில்
கொண்டுவந்ததில் நம் கல்விமுறைக்கு பெரும்பங்குண்டு.
முன்னேறு.. என்று மட்டுமே சொல்லிக்கொடுக்கும் நம்
கல்விமுறையில் அடுத்தவனை மிதித்துக் கொண்டு
அடுத்தவனை அழித்துக்கொண்டு அடுத்தவன் தலையில்
ஏறி அடுத்தவன் அழிவில் தன்னை நிலைநிறுத்திகொள்ளும்
முன்னேறு.. என்று மட்டுமே சொல்லிக்கொடுக்கும் நம்
கல்விமுறையில் அடுத்தவனை மிதித்துக் கொண்டு
அடுத்தவனை அழித்துக்கொண்டு அடுத்தவன் தலையில்
ஏறி அடுத்தவன் அழிவில் தன்னை நிலைநிறுத்திகொள்ளும்
உத்திகளை மட்டுமே கற்பிக்கிறது.
இருத்தலியலை மட்டுமே வாழ்க்கையின் வெற்றியாகமாற்றிவிட்டது .
எனவே கடந்துவந்தப் பாதையை விட நிற்கும் இடமே
பிரதானமாகிவிடுகிறது.
கலை இலக்கியம் சினிமா என்று சமூக மாற்றத்திற்கான
தளங்களும் இதில் அடக்கம்.
கலை இலக்கியம் சினிமா என்று சமூக மாற்றத்திற்கான
தளங்களும் இதில் அடக்கம்.
எனவே அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்பதை
பொதுஜனம் சாதாரணமாக ஏற்றுக்கொள்கிறார்.
இவை அனைத்தையும் விட முக்கியமானது...
அரசியல் தளத்தில் கட்சி கொள்கை கோட்பாடு பேசுவதற்கோ
லஞ்சம் ஊழல் சொத்துக்குவிப்பு பற்றி அறச்சீற்றம் கொள்வதற்கோ
தகுதி உடைய தலைவரோ கட்சியோ
மக்கள் மத்தியில் இல்லை.
அதனால் தான் "ஜெ" குற்றவாளி என்று தீர்ப்பு வந்தப் பிறகும்
அவரைக் குற்றவாளி என்று சொல்கிற தகுதி
இங்கே எவருக்கு இருக்கிறது? என்ற கேள்வியை
போகிற போக்கில் கேட்கிறார் பொதுஜனம்.
குற்றம் சொல்ற இவன் பெரிய யோக்கியனா..?
சொல்ல வந்துட்டான் ! இம்மாதிரி வசனங்களை
உரையாடல்களை நாம் எல்லா தரப்பு மக்களிடமும்
கேட்கலாம்.
("நீங்கள் அத்தனைப் பேரும் உத்தமர் தானா ..? சொல்லுங்கள்..." பாட்டு )

1000 குற்றவாளிகள் இருக்கிறார்கள்
. அதில் ஒரு குற்றவாளியைக் கண்டுபிடித்து
தண்டனைக் கொடுக்கும் போது மீதி 999 குற்றவாளிக்கும்
தண்டனைக் கொடுத்து விட்டு இந்த ஆயிரமாவது
குற்றவாளிக்குத் தண்டனைக் கொடுங்கள் என்பது லாஜிக்காக
ரொம்பவும் சரியானது போல தோன்றும்.
ஆனால் சமூக நீதியை நிலைநாட்ட
விரும்பும் போது யதார்த்த நிலையில்
விரும்பும் போது யதார்த்த நிலையில்
நிருபணமாகிவிட்ட குற்றவாளியைத் தண்டிக்காமல்
இருப்பதற்கு எந்தக் காரணமும் காரணங்களில்லை
. எழுதப்பட்ட சட்டப்படியும் சரி,
எழுதப்படாத தர்ம நியாயங்களின் படியும். சரி.
ஆனால் இந்த சரியான லாஜிக் எல்லாம்
எழுதப்படாத தர்ம நியாயங்களின் படியும். சரி.
ஆனால் இந்த சரியான லாஜிக் எல்லாம்
நம்ம கணம் பொதுஜனத்தாரிடம் எடுபட மாட்டேங்குதே!!
இப்படி ஒரு பொதுஜன உளவியல் பூதகாரமாக..
எல்லாத்தையும் "ஜீ பூம்பா" மந்திரம் சொல்லி
நம்மை இந்த நிலைக்குக் கொண்டு தள்ளி இருக்கிறது.
அதனால் தான் நீதிமன்றத்தில் மகாத்மா காந்தியடிகளின்
இப்படி ஒரு பொதுஜன உளவியல் பூதகாரமாக..
எல்லாத்தையும் "ஜீ பூம்பா" மந்திரம் சொல்லி
நம்மை இந்த நிலைக்குக் கொண்டு தள்ளி இருக்கிறது.
அதனால் தான் நீதிமன்றத்தில் மகாத்மா காந்தியடிகளின்
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான சிறைவாசத்தையும்
"ஜெ" வின் சிறைத்தண்டனையையும் ஒப்பிட்டு
அண்மையில் தலைமை நீதிபதி வழக்குரைஞர்களின்
வாதங்களின் போது கேட்கிறார்..
"மகாத்மா காந்தியடிகள் கூட தண்டனை பெற்றவர் தானே?" என்று.
.
கணம் நீதிபதியே இப்படி கேட்டால் அப்புறம்
பொதுஜனங்கள் என்ன செய்வார்கள்!
"மகாத்மா காந்தியடிகள் கூட தண்டனை பெற்றவர் தானே?" என்று.
.
கணம் நீதிபதியே இப்படி கேட்டால் அப்புறம்
பொதுஜனங்கள் என்ன செய்வார்கள்!
ஒப்பிட்டு ஒப்பிட்டு அனைத்தும் நாசம்...
ReplyDeleteஅதிமுக ஜல்ரா அமைச்சர் ஒருவர், தனது கடமைக்காக காந்தியும், சுபாஷ் சந்திர போசும் பெற்ற தண்டணையை ஊழல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியதாக செய்திகளில் அறிந்தேன். இப்போ ஒரு நீதிபதியும் அப்படி பேசியுள்ளாரா ! நாடு நன்றாகவே விளங்கும் :(
ReplyDeleteஅருமை சகோதரி...
ReplyDelete