Thursday, February 2, 2017

பச்சைக்கிளி


எப்படி இருக்கும் என் பச்சைக்கிளி..
என்ன பேசுவேன் என் பச்சைக்கிளியிடம்
கடந்துபோன 38 ஆண்டுகளையும் விட
காத்திருந்த அந்த சில நிமிடங்கள்
நீண்டுக்கொண்டே இருந்தது.
பச்சைக்கிளி ... என் பச்சைக்கிளி...
பேசும் மொழி மறந்த பச்சைக்கிளி
காற்றில் கரைந்துப்போனது பெருமூச்சு.
எலிபெண்டா குகை சிற்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
அவளையே நானும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அழகான சிற்பங்கள் ...
சிற்பத்தை சிதைத்தவர்கள் யார்?
கைகாலை உடைத்தவர்கள் யார்?
அவள் கேட்டுக்கொண்டே இருந்தாள்..
கடல் காற்று வீசியது..
குகையில் பார்த்த அதே சிற்பம்
என் பச்சைக்கிளியாக மாறியது அறியாமல்
படகு கடலலையில் தள்ளாடி தள்ளாடி
மதுரை மீனாட்சியின்
நினைவுகளைச் சுமந்துக்கொண்ட

2 comments:

  1. ஓவியம் கலைந்த்தென்று ஓவியர்கள் வெறுப்பதில்லை். உருக்குலைந்த கோட்டையினை சரித்திரம் மறப்பதில்லை-கண்ணதாசன்.
    - இராய செல்லப்பா

    ReplyDelete