இவர்கள் இருந்தார்கள்!!!
நேற்று எதையோ தேடும்போது
மகாத்மா காந்தியின் குடும்ப உறவுகள் கிளை பரப்பி.. Gandhi's Family tree!
பார்க்க பார்க்க பெருமித உணர்வு.
வாழ்ந்து காட்டிருக்கான்யா இந்தக் கிழவன்! ( காந்தி)
இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்ற நிஜம் எனக்கும் அதிசயமாகத்தான் இருக்கு.!
அந்த அதிசயத்தை இன்னும் பிரமாண்டமாக்கியது இந்தப் பெரிசும் !( ராஜாஜி)
இரு மாபெரும் தலைவர்களின் வாரிசுகள்
திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இன்றைக்கு நடக்கிற அதிகாரப் பகிர்வு திருமண ஒப்பந்தம் அல்ல.
இது அசல் காதல் திருமணம்.
5 ஆண்டுகள் இருவரும் சந்திக்க கூடாது என்று இந்தப் பெரிசுகள் இரண்டும் ஒரு கட்டுப்பாடு விதிக்கிறார்கள். 5 ஆண்டுகளை சந்திக்காமல் காதலோடு வாழ்ந்துக் காட்டி வாழ்க்கையில் இணைந்தவர்கள் இருவரும்.
அந்த ஆண்.. தேசப்பிதா மகாத்மா காந்தியின் கடைசிப் புதல்வன் தேவதாஸ் காந்தி.
அவள்.. வேறு யாருமல்ல.. ராஜாஜியின் மகள் லஷ்மி.
ஆனால் பாருங்கள்..
அந்த வாரிசுகள் இருவரும்
தங்கள் பேராளுமை மிக்க " தந்தையின்" அடையாள அட்டையைக் காட்டியதாக தெரியவில்லை.
இரு தலைவர்களும் கூட அப்படி நினைக்கவில்லை.
(பொழைக்கத் தெரியாத பிள்ளைங்க!)
ஆனா பாருங்க
இதெல்லாம் இந்திய ஜனநாயக மரபில் இருந்திருக்கிறது என்பது மட்டுமே ! அதிசயமாக பெருமிதமாக இருக்கிறது.
எனக்கு காந்தியை விட ராஜாஜி மீது சில ஒவ்வாமைகள் உண்டுதான்.
அதெல்லாம் இருக்கட்டும்டே சரவணா..
ஆனா.. இப்படியும் வாழ்ந்துக் காட்டிய பெரிசுகள் டே... இந்த இரண்டும்.
அவர்கள் இருவரின் மரபுவழி கிளை பரப்பி நிற்கும் முகமும் முகவரியும் தெரியாத அவர்கள் அனைவருக்கும் கோடானக்கோடி வாழ்த்துகள்.
வாழ்தல் இனிது.
இவர்கள் வாழ்ந்த நினைவுகளுடன்
வாழ்தல் இனிது.
புகைப்படம் 1)காந்தி தன் மகன் தேவதாசுடனும் பேரனுடனும். 2) ராஜாஜி தன் மருமகன் தேவதாஸ் & பேரனுடன். நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
#mahatmaGandhi_familytree
No comments:
Post a Comment