எடப்பாடி ...
தமிழக அரசியலில்
வித்தியாசமானவர்.
அவரை ஜனநாயக அறிவுஜீவிகள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.
அவரை " டயர் நக்கி" என்று அசிங்கப்படுத்திய வர்கள் யார் ? யார்? அவர்கள் எல்லாம் ஒரு ஸ்க்ரூவைக் கூட விட்டுவிடாமல் நக்கிப் பிழைத்தவர்கள் தான்! எடப்பாடியை கிண்டலடித்த வர்களின் கோமாளித்தனங்கள் மறந்து விடவில்லை.
அதிமுக கட்சியில் ஓரே தலைமை பீடமாக திகழ்ந்த அம்மாவின் நியமன முதல்வர் ஓ பி எஸ். அவரை ஓவர்டேக் செய்தார்.
சின்னம்மா , தினகரன் அனைவரையும் களத்திலிருந்து சரியான நேரத்தில் அவுட் ஆக்கினார்.
எடப்பாடிக்கு ஐடி விங் பவர் இல்லை!
பத்திரிகைகள் அவரைக் கொண்டாடவில்லை.
அட.. தமிழ்நாட்டின் எந்த ஒரு பிரபல்யமும் எடப்பாடியைக் கவனிப்பது கூட தங்கள் பெருமைக்கு இழுக்கு என்று நினைத்தார்கள். நினைக்கிறார்கள்! அவர் பின்னால் திரைப்பட நடிகர் நடிகை வெளிச்சங்கள் கிடையாது! சூப்பர் ஸ்டார்களுக்கு அவர் யார் என்றே தெரியாது. 🤫
அவருக்கு போட்டோ இமேஜ் லுக் , கவர்ச்சி எதுவும் இல்லை. அவர் தனக்கென இமேஜ் கிரியேட்டர்ஸ் வைத்துக் கொள்ளவில்லை.
அவர் ஒரு சாதாரணமானவன், மேற்கண்ட எதுவும் இல்லாமல் தமிழக அரசியலில் வரமுடியும் என்ற நம்பிக்கையை முதன்முதலாக கொடுத்தவர்.
அஇஅதிமுக கட்சி திமுகவுக்கு நிகரான தொண்டர்களைக் கொண்ட ஓர் அரசியல் கட்சி.
அவர் தமிழக முதல்வராக இருந்தக் காலத்தில்தான் கொரேனா லாக் டவுண் நேரம். அப்போது நான் தமிழ் நாட்டில் இருந்தேன்.
மிகச் சிறப்பாக அச்சூழலைக் கையாண்டார்.
யூடியூப்பில் சிலர் இப்போதுதான் எடப்பாடி காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை புள்ளிவிவரங்களோடு முன்வைத்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். அதிமுகவுக்கு உண்மையில் அரசியல் களமாட.. எரிகின்ற பந்தைப் பிடித்து வீசக் கூட தெரியவில்லையா!
எப்படியோ காலதாமதமாக சில உண்மைகள் வெளிவரத்தான் செய்கின்றன.
இதுவும் தேவைதான்.
எதிர்க்கட்சி பலமில்லாத ஜனநாயகம் ஒரு கார்ப்ரேட் நிறுவனம் ஆகிவிடும்.
எடப்பாடி போட்டோ.. இதுதான் கொஞ்சம் ஓகே வா இருக்கு! 😏
பிகு😺
நான் அதிமுக அனுதாபியாக கூட இருந்ததில்லை.
யாரும் இதை எல்லாம் எழுதுவதில்லை என்பதால் வழக்கம் போல
நான் எழுத முன் வந்தேன்.
அவ்வளவுதான்.💥🙏
#எடப்பாடி_அதிமுக
#EPS_AIADMK
No comments:
Post a Comment