பெண்களும் சொத்துரிமையும்.
இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டப்பின் இதனால் பயனடைந்த பெண்கள் எத்தனைப் பேர்?
சொத்துரிமை கேட்டால் பாசமலர் கருகிவிடும் என்பதால் சொத்தா? அண்ணன் தம்பியா?
என்ற மன உளைச்சலில் பெண் தள்ளப்படுகிறாள்.
பெரும்பாலான பெண்கள் பிறந்த வீட்டு உறவு நல்லது கெட்டதுக்கு வேணும், ஊரும் உறவும் மதிக்க தாய்மாமன் சடங்குகள் /கட்டுகள் செய்ய வந்து நிற்கணும் அதுதான் முக்கியம் என்றே முடிவெடுக்கிறார்கள்!
நடைமுறையில் இதுதான் பெண்களின் நிலை.
தற்போதுள்ள ஆணாதிக்க சமூக அமைப்பில், தன் திருமணத்திற்குப் பின் பெண் தன் பெற்றோர்களைப் பிரிந்து கணவனுடம் செல்கிறாள். அவள் வாழ்விடம் மாறுகிறது. அப்பெண் ‘’பெண்களுக்கு சொத்துரிமை’ சட்டத்தின் படி பெறுகின்ற நிலத்தை அவள் தொலைதூரத்திலிருந்துகொண்டு எவ்வாறு பயிரிட முடியும்?
நிலத்தை விற்பது, சகோதரன் /உறவினரிடம் பராமரிக்க விடுவது, மூன்றாவதாக நிலத்தை குத்தகை முறையில் பயிரிட எழுதிக்கொடுப்பது, இந்த மூன்று வழிகள் தான் அவளுக்கு இருக்கின்றன.
இந்த சமூக அமைப்புமுறை பெண்களுக்கு சொத்துரிமையில்
வினையாற்றுகிறது.
சீர் , சடங்கு , தாய்மாமன் முறை என்று எதோ ஒரு வகையில் பெண் தன் பிறந்த வீட்டு சொத்துரிமையை பெற்றிருக்கிறார் என்பதும் உண்மைதான்.
நிலம்தான் பெண்.
பூமாதேவி.
எத்தனை பிம்பங்கள் நிலத்தின் மீது பெண்ணுக்கு இருந்தாலும்
அவை அனைத்தும் நிழல்கள் தான்.
நிஜங்கள் அல்ல.
நிஜ வாழ்வில் சாத்தியப்படாதவை
கற்பனை உலகில் பிம்பங்களைக் கட்டமைத்து உலவ விடுகின்றன.
நிலம்.. பெண் ..
பெண் ..நிலம் ..
எப்படி சொல்லிப் பார்த்தாலும் அதன் உரிமை
அவளுக்கு இல்லை.
நிலம் தான் அதிகாரம்.
இன்றைய முதலாளித்துவ கார்ப்பரேட் ஜனநாயகத்தின் வர்த்தக உலகிலும் சரி
ஆட்சி அதிகார அரசியலிலும் சரி..
பெண் எப்போதும் எவ்வளவு
திறமைகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.
ஆண்வாரிசு இல்லாத இடத்தில் பெண் வரமுடிகிறது என்ற நிஜம்
அதிகாரத்தில் பெண் இடம் என்னவாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
#பெண்களும்_சொத்துரிமையும்
#women_landrightsact
No comments:
Post a Comment