“
I was wounded; my honour wasn’t”.
“வாழ்வதற்காகப்
போராடினேன். ஜெயித்துவிட்டேன்”
ஷோகய்லா …
உங்களைப் பற்றிய
நினைவுகள் இன்று மீண்டும்
எனக்குள்..
விரிகின்றன.
1983களில்
உங்களைப் பற்றி நிறைய பேசி இருக்கிறேன்.
உங்களைப் பார்க்கவும்
விரும்பினேன். அப்போது நான்
மும்பை செம்பூர்
பகுதி பன்னாட்டு வங்கி கிளையில்
வேலையில் இருந்தேன்.
1980 அதே செம்பூர் பகுதியில்
உங்களுக்கு
17 வயது.. ஜூலை திங்களில் அக்கொடுமை
நடந்த து.
1983 ஜூலை மாத மனுஷி இதழில்
நீங்கள் சொன்ன
வாசகம் இன்றும் நினைவிருக்கிறது.
“வாழ்வதற்காகப்
போராடினேன். ஜெயித்துவிட்டேன்”
என்று.
இன்று நீங்கள்
அமெரிக்காவில் படித்துப் பட்டம் பெற்று
கல்விப்பணி,
எழுத்துப்பணி, பெண்கள் முன்னேற்றம்,
என்று தொடர்ந்து
சமூகத்தளத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
திருமணமாகி
கணவர் ஒரு பெண் குழந்தை என்று
வாழ்க்கையை
வாழ்ந்துக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
“I was wounded; my honour wasn’t”.
பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு பெண்ணும் எப்படி
வாழ்ந்துக்
காட்ட வேண்டும் என்பதற்கு
உங்கள் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கிறது.
ஷோகய்லா அப்துல்ல
லி…..
உங்களை சரியாக
அறிமுகப்படுத்த நாங்கள் தான்
தவறிவிட்டோமோ
?
என் பெண்வழிபாடு
சிறுகதை தொகுப்பை
ஷோகய்லா அப்துல்
அலிக்கு சமர்ப்பணம்
என்று எழுதித்தான்
இருந்தேன். புத்தகம் அச்சில்
வந்து ஜெயந்தன்
படைப்பிலக்கிய விருதும் பெற்றது.
ஆனால்… ஷோகய்லா
யார் என்று இன்றுவரை
யாருமே என்னிடம்
கேட்கவில்லை…
ஷோகய்லா..
நீ கதையல்ல, நிஜம்..
உன் வாழ்க்கை ..
உனக்கு நேர்ந்த
அவலம்..
உன் பாதிப்புகளை நீ கடந்து வந்தக்
காலமும் அதற்கான முயற்சிகளும்..
அறியப்படாமல் ..
எல்லாமே வெற்றுக் கோஷங்களில்
முடங்கிவிடுகிறது..
No comments:
Post a Comment