இந்திய மனசாட்சியின்
ராஜினாமா
இந்திய அரசாட்சியில்
நீதிமன்றம், தேர்தல் ஆணையம்,
ரிசர்வ் வங்கி
ஆகியவை தன்னாட்சி அந்தஸ்து கொண்டவை.
நேற்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன்.
இன்று அவருக்குப்
பின் வந்த கவர்னர் உர்ஜித் பட்டேல்..
என்ன நடக்கிறது…?
என்ன நடந்தது !
அக் 26
.. ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா சொன்னார்..
அரசு தொலை
நோக்குத் திட்டமில்லை.
இன்றைய வெற்றி
மட்டுமே குறிக்கோள்.
அவர்கள் T20 கிரிக்கெட் விளையாட நினைக்கிறார்கள்.
நாங்கள் டெஸ்ட் மேட்ச் விளையாட நினைக்கிறோம்
என்றார்.
அவர் சொல்ல வந் த து புரிந்த து.
மோதி என்ன கேட்டார் , இவர்கள் வளைந்து கொடுக்க
மறுக்கிறார்கள்
என்ற கவலை ஆரம்பித்த து.
இரண்டொரு நாளில் ரிசர்வ் வங்கியின் யுனியன்
வெளிப்படையாக
தங்கள் தன்னாட்சி அதிகாரத்தில்
அத்துமீறி நுழையும் அரசு எந்திரத்தைக் கண்டித்த
து.
அக் 31ல் ரிசர்வ் வங்கி கவர்னர் “போங்கடா..
“ னு
சொல்லிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ..
நவ 09 கவர்னரும் மோதியும் சந்தித்து பேசிக்கொண்ட
தில்
சமரசம் வரும் என்ற ஊகம் வந்த து..
மோதி அரசு… கேட்க கூடாததை,
கை வைக்க கூடாததை..
கேட்கிறது..
கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்கிறார்.
இது ஒரு அரசு அதிகாரியின் ராஜினாமா மட்டுமல்ல..
மோதியிடம் தன் மனசாட்சியை விற்க முடியாத
இந்திய மனசாட்சியின் ராஜினாமா..
அவ்வளவுதான்…
No comments:
Post a Comment