Monday, December 17, 2018

சிலை அரசியல்

சிலை அரசியல்
அதிகாரக் கட்டமைப்பில் சிலைகளின் பங்கு என்ன?
கோட்பாடு சித்தாந்தம் என்ற சூத்திரங்களை
நினைவுப்படுத்தும் அடையாளமாக இருந்த
சிலைகள் ....
கோட்பாடாவது கொள்கையாவது
என்று புறம் தள்ளி ,
பிம்ப அரசியலைக் கட்டமைப்பதில்
வெற்றி பெற்றுவிட்டனவா?
கீழை நாடுகளில் ..
நம் உளவியலில் சிலைகளின் அரசாட்சி
இன்றும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறதே?
ஏன்?
சிலைகள் இல்லை என்றால் எதிர்காலம்
அத்தலைவர்களை மறந்துவிடும் என்ற
அச்சம் தான் சிலைகளைக் காலம் காலமாக
எடுத்துச் செல்லும் நம் உளவியலுக்கு காரணமா?
கண்ணால் காணாத திருவள்ளுவருக்கு கூட
சிலை எழுப்பி ஒரு பிம்ப கட்டமைப்பில்
திருக்குறளை எழுப்புவது என்பது உண்மையில்
வெற்றி பெற்றிருக்கிறதா..?
சந்துகளிலும் சாலைகளிலும் திடீர் திடீரென
உருவாகும் தெய்வங்கள்.. நமக்குத் தேவையில்லை.
என்று பேசிவிடுகிறோம்.
ஆனால் சிலைகள் வைக்கிறோம்.
சிலைகளுக்கு மாலை மரியாதை அணிவகுப்பு..
இதுவே பழகிவிட்ட து நமக்கு.
கணினி சமூக வலைத்தளம் கூகுள் ஆண்டவர்
என்று எதுவுமில்லாத காலத்தில்..உருவாக்கப்பட்ட
சிலை அரசியல் .. காலப்போக்கில்
சாமிகளாக தேவிகளாக மாறி
அருள்பாலித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இன்னும் தலைவர்களை சிலையாக்குவது என்பது
எளிது. சிலை இல்லை என்றால் எப்படித்தான்
கொண்டாடுவது? போற்றுவது.!
தலைவர் சொன்னதை எல்லாம் மறப்பதற்கு கூட
சிலைகள் தான் தேவையாகவும் இருக்கின்றன.
இதை எழுதும் போது ஒரு பெயர் நினைவுக்கு
வருகிறது.
ஃபிடல் காஸ்ட்ரோ..

Image result for ஃபிடல் காஸ்ட்ரோ

உளிகள் செதுக்காத தலைவன் !
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
ஆனால் அவர் க்யூபாவில் பிறந்துவிட்டார்.
அது கூட பரவாயில்லை..
அவருக்கு சிலை வைக்க க் கூடாது,
மணிமண்டபம் கட்டக் கூடாது
சாலைகளுக்கு அவர் பெயரை வைக்க க் கூடாதுனு
சொல்லிட்டுப் போனாராம். அது… அது ஒன்னுதான்
எனக்கு அவரிடம் பிடிக்கலை.
பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை,
அண்ணாசிலை, அம்மா சிலை,
கண்ணகி சிலை, கடவுள் சிலை.. கலைஞர் சிலை..
ஏன் மயாவதி அவரோட கட்சி சின்னமான ஆனைகளுக்கு
கூட சிலைகள் வைத்து எப்புடி அசத்தினார்!
எங்க போனாலும் நகரத்தைச் சுற்றி
ஒரு மகாத்மா காந்தி ரோடு ( எம்.ஜி.ரோட்),
மும்பையில்.. ரயில்வே ஸ்டேஷனுக்கும் சத்ரபதி
சிவாஜி தான். ஏர்போர்ட்டுக்கும் அதே சத்ரபதி தான்..
இப்படியாக சிலைகளும் ரோடுகளும் பழகிப்போன
எனக்கு ஃபிடல் காஸ்ட்ரோ வின் இந்த லாஜிக்
புரியல. பிடிக்கவும் இல்ல.
பயம்மா இருக்கு.. ஃபிடல் காஸ்ட்ரோவை
க்யூபா மக்கள் மறந்துவிடுவார்களோ னு

1 comment:

  1. திராவிட பகுத்தறிவாளர் தொடங்கி ஆன்மிகவாதிகள் வரை இந்தியா,அதிலும் தமிழகம் முதலிடம் சிலை வழிபாட்டுக்காக அலைகிறார்கள்.
    சிலையை பார்த்து தான் சிலையில் உள்ளவர் யார்? அவரின் கொள்கை என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை எதிர்கால சந்ததியினர் பின்பற்றி நடப்பார்களாம் என்று ஒரு அறிவார்ந்த விளக்கம் வேறு.
    //கீழை நாடுகளில் ..
    நம் உளவியலில் சிலைகளின் அரசாட்சி
    இன்றும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறதே?
    ஏன்?//
    கீழை நாடுகளில் என்று ஏன் குற்றம் சொல்ல வேண்டும், தமிழகம் இந்தியா போன்று இவ்வளவு மோசமான சிலை வழிபாடுகள் அங்கே இல்லை. கீழை நாடுகளில் சிலை வழிபாட்டுகளில் ஆர்வமாக உள்ளவர்களின் பின்னணியை பார்த்தீர்களானால் தமிழகம், இந்தியாவிலிருந்து சென்றவர்களாகவே இருப்பார்கள்.

    ReplyDelete