Thursday, July 26, 2018

இராமன் எத்தனை இராமனடீ..


கேரளாவில் மார்க்சிஸ்டுகளின் இராமாயணமாதம்,
காங்கிரசும் கொண்டாடப்போகிறது இராமாயண மாதத்தை..
என்னடா திடீர்னு இராமாயண கொண்டாட்டங்கள்
என்று கேட்டால்..
எதிரணிக்கு எதிராக என்று சொல்லுகிறார்கள்.
நம்பத்தான் வேண்டும்.  

இராமாயண பண்டிதரான .கே.இராமானுசரின் ஒரு நூலுக்கு 
முன்னூறு இராமயணங்கள்என்று பெயர்
எத்தனை இராமயணங்கள் உள்ளன. முன்னூறா, மூவாயிரமா?’ 
என்ற கேள்வியோடு அந்த நூல் துவங்குகிறது
ஆயிரக்கணக்கான இராமாயணங்கள் உள்ளன.
அவை யாவும் வால்மீகி இராமாயணத்தின் பாடபேதங்கள்
அல்ல என்றும், அவை சுதந்திரமான கதைகள் என்றும் கூறப்படுகிறது.
இராமாயணம் என்பது வால்மீகி, துளசிதாசு, கம்பர், எழுத்தச்சன்
ஆகியோரின் மட்டும் படைப்பல்ல
அது ஆயிரக்கணக்கான பாடங்களின் தொகுப்பு
இராமாயணத்தின் ஒரு நிகழ்வுகூட நிரூபிக்கப்பட்டதல்ல
எல்லாவற்றிலும் பாடபேதங்கள் உள்ளன.
தாய்லாந்தின்இராமகியேனா’(இராமகீர்த்தி) எனும் இராமயணத்தின் 
கதை நடந்தது, தாய்லாந்தில். சீதையும், இராமனும் அங்குள்ளவர்கள்தான்
இராமனும், இராவணனும் சகோதரர்கள்
தாய்லாந்தின் இன்றைய அரசகுலமான சாக்ரி இனத்தின் 
நிறுவனரான ப்ராபுத்த சோட் பாசூலாஉலகமகா மன்னன்’ 
எனும் பெயர் பெற்றவர். அவரது பதவிமுதலாம் இராமன்என்பதாகும்.
இன்றைய இலங்கைக்கு வால்மீகி இராமாயணத்தின் இலங்கையோடு 
தொடர்பில்லை என்றும், வால்மீகி இராமாயணத்தின் இலங்கை 
மத்திய பிரதேசத்தில்தான் என்றும், வால்மீகி விந்திய மலைகளுக்கு
அப்பால் உள்ள தென் இந்தியா குறித்து எதுவும் தெரியாது எனவும் 
வரலாற்று ஆசிரியர் சங்காலியா கூறுகிறார் அசாமீசு, சைனீசு
வங்காளம், கம்போடியன், குசராத்தி, யாவானீசு, கன்னடர், காசுமீரி
கோட்டனீசு, லாவேசியன், மலேசியன், மராத்தி, ஒரியா, சமத்கிருதம்
சிங்களீசு, தமிழ், தெலுங்கு, தாய், திபத்தியன் ஆகிய அநேக மொழிகளில் 
இராமகதை உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மாறுபட்டவை

மும்பை பல்கலை கழகத்தில் பேராசிரியராக இருந்த தோழர் அருண் காம்ப்ளே
எழுதிய இராமாயணம் புத்தகம்  மராத்திய மா நிலத்தில்
மிகவும் முக்கியமானது.
(Ramayanatil Samskrutik Sangharsh"- (Cultural Struggle in Ramayana – 
Critical study of Ramayana)
தமிழர்களுக்கு கம்பராமாயணம் தான்.
இதை இன்றளவும் பாதுகாப்பதில் கம்பன் கழக சொற்பொழிவுகளும்
பட்டிமன்றங்களும் கூட பெரும் பங்காற்றுகின்றன.
இதில் மார்க்சிய இராமாயணம் .. என்னவாக இருக்கும்?
அயோத்தி இராமனுக்கு எதிராக இவர்கள்  முன்வைக்கும் இராமன் யார்?




4 comments:

  1. ஐயோ... இப்படி வேறு ஆரம்பித்து விட்டார்களா...?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. இராமன் இனி சிவப்பு சித்தாந்தம் பேசுவாரானு பார்க்கலாம். நன்றி நட்பே.

      Delete
  2. oh. thanks to your friend and U too.

    ReplyDelete
  3. சிந்திக்கவைக்கிறீர்களே!
    கம்பன் காட்டிய அறம்
    வேறெந்த நூலிலும் கிட்டாதே!

    ReplyDelete