தளபதி , திமுக செயல் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் பாவ கிரஹமாக
இருந்து தொலைப்பதால் தான் அவருக்கு
கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல்
அல்லாடும் நிலை ஏற்பட்டுவிட்டதாக
கேரளா ஜோதிட சாம்பிராணிகள் சொன்னதை
அப்படியே நம்பி.. நம்பி..
இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று
சொல்கிறார்கள்..
தளபதி.. கோவிலுக்குள் நுழையவில்லை!
ஒரு மரியாதை நிமித்தமாக வழியில் போன காரை
கோவில் யானையுடன் அவர்கள் வழிமறித்ததால்
காரை நிறுத்தி பிரசாதத்தை மட்டும் வாங்கிக்கொண்டு
சர் ரென எங்கள் தளபதியின் கார் சென்றது
என்று சொல்லிப் பார்த்தாகிவிட்டது!!
..
ஶ்ரீரங்கத்திற்கு ஸ்டாலின் செல்வது
இது ஒன்றும் முதல்முறை அல்ல!
அங்கேயே தங்கி அவர் தேர்தல்
பிரச்சாரம் செய்திருக்கிறார்.
அப்போதெல்லாம் அந்தக் கோவில்
வாசல் பக்கம் போவதைக் கூட தவிர்த்தவர் அவர்.
தற்போது
நான்கு நாட்களாக கோயிலுக்குள்
சுக்கிர ப்ரீத்தி யாகம்
நடைபெற்றது. யாகம் முடியும் நாள் சுக்கிரனுக்கு
உகந்த வெள்ளிக்கிழமையாக இருக்கவே,
இன்று காலை ஸ்ரீரங்கத்தில் நடந்த
திருமணத்துக்கு வந்தவர்,
கோயிலுக்குள் வராமல் ரங்கா ரங்கா
கோபுரம் வரைக்கும்
வர்ற மாதிரி வந்திட்டுப் போனதாகவும்
ஸ்ரீரங்கநாதருக்கு வெண்மை நிற வஸ்திரம் அளித்து
இருபத்து ஐந்து பேருக்குத் தானம் கொடுத்ததாகவும்
அவா ஆத்து மாமிகளே சொல்லறா..
இந்தப் பாருங்கோ .. தளபதி..
நீங்களோ நானோ பெரியாரில்லை.
அப்படி இருக்கனும்னு யாரும் கட்டாயப்படுத்தவும்
முடியாது!
ஆனா..
உங்களுடைய சுக்ர தோஷ பரிகாரத்திற்கு
அவாளுக்கு நீங்க தானம் செய்ததுதான்
நேக்குப் பிடிக்கலை..!
இந்த மாதிரி செய்தி எதுவும் என் காதிலே விழுந்து
படுத்தற இம்சையிலிருந்து தப்பிக்கவே
இவ்வளவு தொலைவில் வந்து இருந்தா..
இங்கே வரை உங்க சுக்ர ப்ரீத்தி யாகத்தின்
புகை வர்றது..
இந்தப் பாருங்கோ..அடுத்த தேர்தலில் நீங்க ஜெயிச்சு
அமோகமா வெற்றி பெற்று முதல்வராகனும்னு தான்
நேக்கும் ஆசை. ஆனா பாருங்கோ..
இப்போ இந்த சுக்ர ப்ரீத்தியாகம் செய்ததால் தான்
நீங்க முதல்வராகிட்டேள்னு
நானும் நம்ப வேண்டியது
வந்திடுடு டு டு டும்!! அந்தப் பயம் தான் இப்போ..
சுக்ர மூல மந்திரம்..
ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்ம்யஹ்ம்.
#திமுக_ஸ்டாலின்
#திமுக_ஸ்டாலின்
Not ஹிமிகுந்த - Hima
ReplyDeleteஸுவாஹா...
ReplyDeleteசுக்கிரனுக்கு இவ்வளவு பவர் உள்ளதா? வரும் தேர்தலில் சுக்கிரன் எப்படியெல்லாம் யாருக்கெல்லாம் விமோசனம் அருளப்போகிறாரோ.
ReplyDeleteசுக்கிரமூர்த்தி சுபமிக ஈவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக்கொடுப்பாய் அடியார்க்கருளே.