Sunday, March 18, 2018

வரும், ஆனா வராது.. திராவிடநாடு

Image result for ஸ்டாலின் திராவிடம்
திராவிட நாடு வரும் , ஆனா வ்ராது..
திராவிட நாடு கேட்கவோ குரல் கொடுக்கவோ இல்லை!’ - 
ஸ்டாலின் பளீச் பளீச் பதில்.
இந்த பளீச் பளீச் டுயூப் லைட் வெளிச்சத்தில் கொஞ்சம்
 கண்ணு வலி வந்து சிவந்து வீங்கிப் போயிடுச்சி.
கண் மருத்துவர் இப்படியான ஒரு டுயூப் லைட் 
வெளிச்சத்திற்குள் வருவது எதிர்காலத்தில்
 பார்வையைப் பாதிக்கும்னு ரொம்ப பயம் காட்டுகிறார்.

சரி அதெல்லாம் விட்டுத்தள்ளுங்க.. பாஸ்..
தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து திராவிட நாடு
 அமைய வேண்டும் என்ற கோரிக்கை
வலுப்பதாகத் தெரிகிறதே என்ற கேள்விக்கு,
''வந்தால் வரவேற்கப்படும். வரும் என்ற நம்பிக்கையில், நான் இருக்கிறேன்''
என்று சொன்னீர்கள் பாருங்கள் .. எம்மாடியோவ்..
இது மட்டும் ஏன்னு புரியல தலைவரே.
ஆமா.. எப்படி திராவிட நாடு வரும், அப்படி வந்து அதை நீங்க வரவேற்கும் கண்கொள்ளா காட்சியை எப்போ நம்ம உ.பிக்கள் பார்க்கப் போகிறார்கள்..?
ப்ளீஸ் பாஸ்.. திராவிடநாடு கொண்டுவரப்போவது
 யாருனு சொல்லிடுங்க பாஸ்..
கமலின் தென்மாநிலங்களின் கைகள் ஒன்றுசேர்ந்திருக்கும்
 காப்பி ரைட் வாங்கிவிட்ட கைகள் கொடியை வச்சிக்கிட்டு 
மையம் வாங்கப்போவதுனு மட்டும்
சொல்லிடாதீங்க தலைவரே..
பாவம் அண்ணா அவர்கள். இப்படி எல்லாம் எதிர்காலத்தில்
 நடக்கலாம்னு தெரிந்திருந்தால்
இதையே காரணமா சொல்லி இருக்கலாம். எதுக்கு
காரணம் சொல்வதற்கு அவர் கஷ்டப்பட்டிருக்க
 வேண்டும்னு தோணுது. சரி விடுங்க.
 யாரு அண்ணானு கேட்கிற காலம் !
அப்புறம் திராவிடநாடு வராதுனு சொன்ன உங்கள் துணிச்சலும்
அப்படியே யாராவது கொண்டுவந்துட்டா வரவேற்போம்யா"நு
மார்தட்டி சொல்கிற தலைமைத்துவமும் 
ரொம்ப ரொம்ப ப்டிச்சிருக்கு பாஸ்..
வரும் ஆனா வராது.. ! 
வசனம் இப்போ டைமீங்க் பார்த்து சிரிப்பொலியில் போடுகிறார்கள்.
ஊடகங்கள் இப்படித்தான்
உங்களுக்கு எதிராகவே இருக்கின்றன !

"திராவிட நாடு, மாநில சுயாட்சி இதெல்லாம் அரசியலில்
ஊறுகாய் மாதிரி.
தொட்டுக்கலாம் தேவைப்படும் போது.
அதுவே உணவாகிவிட முடியாது. "

4 comments:

  1. தலையெழுத்து கேட்போம் வேறுவழி ???

    ReplyDelete
  2. நீங்க ஸ்டாலின் திராவிட நாடு கேட்டு இதுவரை எதுவும் செய்யவில்லையே என்று ஆதாங்கபடுவதாக தெரிகிறது.
    எனது கருத்து பயனற்ற திராவிட நாடு கோரிக்கைகாக ஸ்டாலின் இதுவரை எதுவும் செய்யாதது மிகவும் நல்லது. ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காக திராவிட நாடு வந்தால் வரவேற்பேன் என்றது பொறுப்புள்ள தலைவருக்கான பதிலே அல்ல.
    திராவிட நாட்டின் பிரதமர் யார்? காவிரி தண்ணீர் வருமோ?

    ReplyDelete
  3. திராவிட நாடு வந்தால் ஒரு வேளை நதிநீர் பிரச்சினை தீரும் என்று நம்புகிறாரோ என்னவோ!

    ReplyDelete