பங்காரு பட்சிகள் இப்போதும் இருக்கிறார்களா?
தாயே பங்காரு பட்சி....
உன்னோடு கழை மரம் எங்கேடீ இருக்கு..
விராலி வட்டம் ஏடு வாசித்தவர்கள் யாரேனும் உண்டா?
அப்படியே அந்த ஏடு என்னை எடுத்து வாசித்துப்பார் வாசித்துப்பாருனு
நச்சரிக்குமாமே.
நச்சரிப்பு தாங்காமல் புரட்டிப் பார்த்துட்டா ஆம்பிளைக்கு
"பித்து " பிடிச்சி கோட்டியா அலைவாங்களாமே...
அது ஏன் பித்துப் பிடிக்குனு கரிசல்ராஜா
கி.ரா.மாமாகிட்ட தான் கேட்கனும்ம்ம்ம்ம்ம்
(மீள்வாசிப்பில் கி.ரா)
பங்காரு பட்சி : அவள் எந்தப் பெரிய மனிதரோடும் தொட்டு விளையாடுவாள்.
அவளை யாரும் ஒன்னும் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.
அது அவள் இஷ்டம். அவள் யாருக்கும் கட்டுப்பட்டவள் அல்ல. கழை
ஒன்றுக்குத்தான் கட்டுப்பட்டவள். அந்தக் கழை மரம் தான் அவள் புருஷன்.
அதுதான் அவளுக்குத் தாலி கட்டி இருக்கிறது. தேன் கூட்டில் ஒரு ராணி
ஈதான் உண்டு. அவள் கூட்டத்தில் எந்த ஆணோடு வேண்டுமானாலும்
அவள் உறவு கொண்டாடி குடும்பம் நடத்தலாம்...... குறிப்புகளை
கோ.ம. நாவலில் வாசித்து தெரிந்து கொள்க
No comments:
Post a Comment