Sunday, August 20, 2017

கருமுகிலின் நர்த்தனம்

Image result for birds on rainy days

ஆகாயப்பெருவெளி எங்கும்
கருமுகில்கள் உடையும் சப்தம்
கண்களில் வெறியுடன்
காளியின் நர்த்தனம் ஆரம்பித்துவிட்டது.
கழுத்து மாலையின்
மண்டையோடுகள் கூச்சலிடுகின்றன
மின்சாரக்கம்பிகள் அறுந்து  தொங்கும்
இருளின் வெளிச்சத்தில்
தண்டவாளங்கள் தடம் புரள்கின்றன.
உடல்களின் பயணம் முடிந்துவிடுகிறது.
மழைத்துளிகளின் பெருமூச்சில்
மரக்கிளைகள் ஒடிந்து சரிகின்றன.
கிளைகளில் கூடுகட்டியிருந்த பறவைகளைக்
காணவில்லை.
எங்காவது பத்திரமாக பறந்துப் போயிருக்கும்.
இருண்ட வானத்திலிருந்து இறங்கிவந்த
மழைத்துளிகள்
என் கூடாரத்தின் இமைகளை எரிக்கிறது.
எங்கோ கண்ணாடிக் கதவுகள்
நொறுங்கி விழும் ஓசை.
பேய்மழை பேரிரைச்சல்
ஊழிக்கூத்துக்கான ஒத்திகை நடக்கிறது.
கம்பளிப்போர்வையை எடுத்து
இழுத்து மூடிக்கொள்கிறேன்.
எப்போதோ நீ புகைத்த பீடி வாசனையும்
உன் வேர்வையின் நெடியும்
போர்வைக்குள்ளிருந்து..
என் மீது கவிகிறது.
வான் மழைப் போற்றுதும்..
வான்மழைப் போற்றுதும்.

3 comments:

  1. மழையின் நர்த்தனத்தை மனத்தால் ரசித்தேன்.

    ReplyDelete
  2. #ஆகாயப்பெருவெளி எங்கும்
    கருமுகில்கள் உடையும் சப்தம் #

    # மழைத்துளிகள்
    என் கூடாரத்தின் இமைகளை எரிக்கிறது #

    # கம்பளிப்போர்வையை எடுத்து
    இழுத்து மூடிக்கொள்கிறேன்,
    எப்போதோ நீ புகைத்த பீடி வாசனையும்
    உன் வேர்வையின் நெடியும்
    போர்வைக்குள்ளிருந்து..
    என் மீது கவிகிறது. #

    நல்ல கற்பனை வளம்.

    உணர்ந்து இரசித்தேன்.

    ஆக்கம் நன்றாக உள்ளது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி புதிய மாதவி.

    ReplyDelete
  3. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete