
முரசொலி பவளவிழா அனைத்து ஊடகங்களிலும் பக்பாஸ் ஆனதாக
பரபரப்பாக செய்திகள், லைவ் பார்க்கவில்லை என்றவுடன் அதை அப்படியே
அனுப்பி வந்த நண்பர்கள்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள்.
* நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரின் ஹேர் ஸ்டைல் கவனித்தீர்களா ?
-அப்படியா.. மிஸ் பண்ணிட்டேனே.. இட்ஸ் ஒகே. எனக்கு இதிலெல்லாம்
உங்க அளவுக்கு டேஸ்ட் கிடையாது -
* கவனித்தீர்களா.. முரசொலி மாறனைப் பற்றி எதுவுமே பேசலையே..
- அப்படி எல்லாம் இருக்காது தோழி, தயாநிதி மாறன் கலந்து கொண்டதாக பத்திரிகையில் வாசித்தேனே.. அவருக்கு நினைவுக் கேடயம் கூட வழங்கி சிறப்பித்தாகிவிட்டதே ..
* எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை எப்படி எல்லாம் திட்டமிட்டு தங்கள் விழாக்கள் நடத்தி மக்களைத் திசைத் திருப்புகிறார்கள், பாருங்கள்..
_ (மனசுக்குள்.. அடப்பாவிகளா.. இதைச் சொல்வதற்கு அதிமுக காரர்களுக்கு அருகதை இருக்கிறதா என்ன? ) ச்சே ச்சே தேவை இல்லாம கற்பனை செய்து கொள்ளாதீர்கள் தோழர்..
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக ஒற்றுமையாக உங்களைக் கொண்டாட வேண்டாம் என்று யார் சொன்னது..?
* முரசொலி பவள விழாவில் முரசொலி பத்திரிகை பற்றி அதில் எழுதப்பட்ட விடயங்கள் பற்றி யாருமே எதுவுமே பேசவில்லையே ... கவனித்தீர்களா..
- (ஆங் .. இது சரியான கேள்வி..) முரசொலி வாசித்தவர்களை அழைத்து பேச வைக்கவில்லையோ என்னவோ.. சரி தோழர்.. உங்களுக்காகவும் உங்களைப் போன்றவர்களுக்காகவும் இதோ என் பதிவு..
ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவு தான்.
முரசொலியில் நான் ரசித்த இதழ்கள்
எமர்ஜென்சி காலத்தில் வெளியான பக்கங்கள்.
ஒவ்வொரு பக்கமும் தணிக்கைக்கு உள்ளாகி
அதன் பின்னரே அச்சுக்கு வரும் நிலை
கலைஞரை மிகவும் எரிச்சலூட்டியது . எனவே அவர்
"விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்"
என்றும்
"அரைமணிநேரத்தில் சென்னையிலிருந்து அமெரிக்கா போகலாம் "
என்றும் எழுதினார். இன்றுவரை என் ரசனைக்குரிய பக்கங்கள் அவை.
ya..yaa... it's true...
ReplyDeleteஹா.... ஹா....
This comment has been removed by the author.
ReplyDeleteபதிவை தமிழ்மணத்தில் இணைத்து வாக்கும் அளித்து விட்டேன்...
Deleteநன்றி....
நன்றி வருகைக்கும் த.ம. பதிவுக்கும்
Deleteநல்ல பதிவு...வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஅலசிய விதம் நன்று.
ReplyDelete