Tuesday, August 15, 2017

இந்தியா வாங்கிய நகைக்கடன்

இந்தியா வாங்கிய நகைக்கடன்
நம்ப சித்தி ராதிகா அடிக்கடி விளம்பரத்தில் வந்து 
அடகுவைத்த நகையை மீட்டு உடனே பணம்பெறும்
 மாயஜாலத்தைப் பற்றி சொல்லும் போது அந்தக் கணக்கு
 எப்படினு தெரியாமல் கணக்குப் போடுவதையே
 நிறுத்திவிட்டேன்.🙄

இந்தியா வாங்கிய உலக வங்கிக்கடன், வட்டிக்கடன் ,
 வட்டியில்லாத கடன் இத்தியாதி
அனைத்து கடன் விவகாரத்திலும் எனக்குப் புரியாத 
இன்னொரு புதிரான கடன் 1980ல் இந்தியா வாங்கிய நகைக்கடன்
. அதாவது சற்றொப்ப அமெரிக்கா டாலர் 450 மில்லியன் 
மதிப்புள்ள தங்கக்கட்டிகளை அடமானம் வைத்த
 வாங்கிய கடன். அப்போது தங்கக்கட்டிகளை 
லண்டனுக்கு இந்தியாவிலிருந்து ரிசர்வ் பேங்க் கையில்
 எடுத்துச் சென்றது.!
(the situation forceed RBI to raise a loan of USD 450 million
 by pledging its gold reserves and physically transferring it to London)

எப்படி அவ்வளவு தங்க கட்டிகளை எடுத்துச் சென்றிருப்பார்கள்? 
விமானத்திலா அல்லது கப்பலிலா..? 
இதுதான் எனக்கு இன்று வரைப் புரியாத புதிராக இருக்கிறது!
கவலையாகவும் இருக்கிறது.. இப்படி அடமானம் வைத்த தங்கக்கட்டிகளை
திருப்பிவிட்டார்களா.. அல்லது கடனில் முங்கிவிட்டதா..!??
யாருக்காவது தெரியுமா நண்பர்களே...

1 comment:

  1. எல்லாத்துக்கும் விடை தெரிஞ்சு போச்சு. இதுக்கு மட்டும் விடை தெரியனுமாக்கும் உங்களுக்கு... போயி புள்ளை குட்டிகளை கவனிங்க சகோ

    ReplyDelete