Monday, June 19, 2017

அம்ச்சி தாராவி

அம்ச்சி தாராவி

Plastic-recycling-factory-roof-Dharavi-slum-Mumbai-India1.jpg (1600×899)

தாராவி ஆசியாவின் குடிசை, உலகின் மிகப்பெரிய குடிசைகள்
 வரிசையில் 3வது இடத்தில் இருக்கிறது 
  தாராவியின் சாக்கடைகளை, சால்களை, குடிசைகளை
 அடிப்படை வசிதிகள் இல்லாத வாழ்விடங்களைக் காட்டுவதில்
 அனைத்து ஊடகங்களும் அன்று முதல் இன்றுவரை
 போட்டிப்போடுகின்றன. ஆஸ்கார் விருது பெற்ற படம் வேறு
 இதில் பெரும்பாங்காற்றி இருக்கிறது.
இதெல்லாம் பொய்யல்ல. ஆனால் இவை மட்டுமல்ல தாராவி.
தாராவிக்கு இன்னொரு முகம் உண்டு.
என்னைப் போல தாராவியில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு 
அந்த முகம் புதிதல்ல.
இந்த தாராவியில் தான்  பெயரில்லாத 20,000 குடிசைத் தொழில் 
யுனிட்டுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 
மிகவும் முக்கியமானது  recycling units 
மறு சுழற்சி முறை தொழிற்கூடங்கள். 
அதுவும் மாராட்டிய மண்ணின் கழிவுப்பொருட்கள் மட்டுமல்ல, பிறநாடுகளின் கழிப்பொருட்களும் வந்து இறங்குகின்றன.
 உடைந்த பொம்மைகள் கூழாகி மீண்டும் பணக்கார குழந்தைகள் விளையாடும் பார்பி டால்களுக்கான 
கச்சாப்பொருளாகின்றன.
மண்ணால் செய்யப்படும் மண்பாண்டங்கள், அகல்விளக்குகள்,
 தண்ணீர் கூஜாக்கள், சமையல் பாண்டங்க்கள் 
என்று மண்பாண்ட தொழில்,
தோல் பதனிடும் தொழிற்சாலையில் வளர்ச்சியில் உருவாகும் 
தோல்பை, பர்ஸ், செருப்பு வகைகள், சூட்கேஷ்கள் இன்னொரு பக்கம்..
இத்தொழில்களின் ஓராண்டு வருமானம் மட்டும்
 665 மில்லியன் டாலர் !
200க்கும் அதிகமான e-commerce விற்பனை தளங்கள்
 இன்றைய தாராவி இளைஞர்கள் கையில்.

அண்மையில் தாராவியில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டேன். இளைஞர்களின் ராக் இசை, , தாராவி கானா பாடல்கள், 
ஹிப்பப் டான்ஸ்.. என்று கலக்குகிறார்கள். இன்னும் அணையாத அக்னிக்குஞ்சுகளாக அவர்கள்
நம்பிக்கை நட்சத்திரமாக தென்பட்டார்கள்.
தாராவியின் எதிர்காலத்தின் குரலாக
முகமாக  முகவரியாக  இவர்கள் அனைவரும் இருப்பார்கள்,




8 comments:

  1. தாராவியின் எதிர்காலத்தின் குரலாக
    முகமாக முகவரியாக இவர்கள் அனைவரும் இருக்கட்டும்

    ReplyDelete
  2. தங்களது வாக்கு பலிக்கட்டும்
    த.ம.1

    ReplyDelete
  3. தாராவி குறித்து இன்னும்
    நிறையத் தெரிந்து கொள்ளும்
    ஆவல் உள்ளது
    நீங்கள் அப்பகுதியின்பால்
    அதிக ஈடுபாடு கொண்டுள்ளவர்
    என்பதால் உங்கள் மூலம் எனில்
    அதன் உண்மை முகம் அறிய முடியும்
    என நினைக்கிறேன்'
    தொடர் பதிவுகளை எதிர்பார்த்து...
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  4. அழிக்க அழிக்க எதிர்த்து மீண்டும் பிறக்கும் ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்த்துடிப்போடு இயங்கும் பகுதி, தாராவி. பம்பாயின் பொருளாதாரத்திற்கு தாராவியின் பங்களிப்பு மிக அதிகம். ஆனால் அதில் பாதிக்கும் மேல் கறுப்புப்பணமாகவே உருவாகிறது என்பதை மறுப்பதற்கில்லை.- இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  5. அழிக்க அழிக்க எதிர்த்து மீண்டும் பிறக்கும் ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்த்துடிப்போடு இயங்கும் பகுதி, தாராவி. பம்பாயின் பொருளாதாரத்திற்கு தாராவியின் பங்களிப்பு மிக அதிகம். ஆனால் அதில் பாதிக்கும் மேல் கறுப்புப்பணமாகவே உருவாகிறது என்பதை மறுப்பதற்கில்லை.- இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  6. எதிர்மறைச் செய்திகளைக் காட்டப் போட்டி போடும் ஊடகங்கள் நல்லனவற்றை வெளிக் கொண்டு வருவதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியே நல்ல செய்திகளைத் தப்பித் தவறிப் பொதிகை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் செய்திகள் காட்டினாலும் அவை நமக்குச் செய்திகளாகவே தென்படுவதில்லை. செய்தி என்றால் அது பரபரப்பாக இருக்க வேண்டும், குருதி தெறிக்க வேண்டும், கண்ணீர் கரிக்க வேண்டும். அப்படியே காட்டிக் காட்டி நம்மைப் பழக்கி விட்டார்கள். அதனால்தான் தாராவியின் ஏழ்மையைக் காட்டும் எந்த ஊடகமும் அங்குள்ள மக்களின் முன்னேற்றத்தைப் பேச முன்வருவதில்லை எனத் தோன்றுகிறது. நீங்கள் சொல்லியிராவிட்டால் என்னைப் போன்றவர்களுக்கு இந்த உண்மை கண்டிப்பாகத் தெரியாது. மிக்க நன்றி!

    ReplyDelete