Sunday, March 26, 2017

உன்னை வாசிக்கவில்லை



Image result for why do read

நான் உன்னை வாசிக்கவில்லை.
உன் புத்தகங்கள் தடிமனாக இருக்கின்றன.
அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
உன் விருதுகள் என்னைப் பயமுறுத்துகின்றன
நான் உன்னை வாசிக்கவில்லை.

உன்னை வாசிக்கும் உயரத்தை எட்ட வேண்டும்.
காய்களை நகர்த்துகிறேன்.
ஏணிகளுக்கு அருகில் பாம்பின் வழித்தடம்
நீ  ஏதோ சொல்லுகிறாய் என்னிடம்
எல்லோரும் உன்னை வாழ்த்துகிறார்கள்.
வாழ்த்துக் கூச்சலில் உன் குரல்
காற்றில் கற்பூரமாய் கரைந்துவிடுகிறது.
கழுதைகள் அறியாது கற்பூரவாசனையை என்கிறாய்.
கழுதைகளைப் பற்றி அறியாதவர்கள் 
நீ சொல்வதே சரி என்கிறார்கள்.
கழுதைகளிடம் யாரும் கேட்கவில்லை. 
தாழம்பூ மணக்கும் நதிக்கரையோரம்
என் கழுதைகள் இளைப்பாறுகின்றன.
உன்  அழுக்கடைந்த ஆடைகளை
வெள்ளாவி பானைக்குள் திணித்து தீமூட்டுகிறேன்.
பிரம்மனின் நான்காவது தலை  வெடித்து சிதறுகிறது.
நான் உன்னை வாசிக்கவில்லை.
வாசிக்கப்போவதுமில்லை.


5 comments:

  1. "வாசிக்கப் போவதுமில்லை "
    கவிதையின் உயிர் இருக்குமிடம்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. "நான் உன்னை வாசிக்கவில்லை" என்றால்
    நூல்கள் என்ன குற்றம் செய்தன...
    சற்றுச் சிந்திக்க வேண்டியிருக்கிறதே!

    ReplyDelete
  3. மிகவும் பாராட்டப்படவேண்டிய கவிதை.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete