Wednesday, January 11, 2017

பொங்கல் ஆன்லைனில்

பொங்கல் ஆன்லைனில் டும் டும் டும்



இனிமேல் எவரும் வயலுக்குப் போய் உழைக்க வேண்டியதில்லை. பச்சரிசி, பனங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு, பூசணி, தடியங்காய், புடலை, முருங்கைக்காய், கத்தரிக்காய், தக்காளி, புளி, தேங்காய்,
வெல்லம், நெய் , வெற்றிலைப்பாக்கு, வாழை இலை
கரும்பு, மஞ்சல் குலை. இஞ்சி, இத்தியாதி சகலமும்
அமேசான் புண்ணியத்தில் ஆன்லைனில்...
டும் டும் டும் ஆனலைனில் பொங்கல்
ட்டும் டும் ட்டும்.
இன்னொரு மகிழ்ச்சியான செய்தி... பொங்கல் கொண்டாட
தேவையான பொருட்கள் மட்டுமல்ல, பொங்கலுடன் சம்பந்தப்பட்ட சகலலும் அதாவது ஜல்லிக்கட்டு உட்பட
இனி ஆன்லைனில்...
இது என்ன புதுச் செய்தியா இருக்கேனு என் தமிழினப் பற்றாளர்கள் என் மீது ஐயம் கொள்ளற்க.
அமேசான் பொங்கல் கொண்டாட மாட்டுச் சாணியை நூறு
ரூபாய்க்கு விற்பனை செய்யும் போது அந்த சாணி போடும்
மாட்டைக் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்திவிடாதா என்ன..?
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
ஆன்லைனில் ஜல்லிக்கட்டு.. டும் டும் ட்டும்.

3 comments:

  1. பொங்கலுக்குப் பிள்ளையார் பிடிக்க என்று
    மாட்டுச் சாணியை நூறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறாங்களா?
    பிள்ளையார் தான் பதில் தரணும்

    ReplyDelete