------------------------
சஞ்சுபாபாவுக்கு தண்டனை இன்று, நாளை.. !
இப்போது அப்போது என்று தினமும் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்ட வண்ணமிருந்த ஒரு மெகா தொடர் ஒரு வழியாக சஸ்பென்ஸ்முடிந்து முடிவுக்கு வந்துவிட்டது.
முன்னாபாயி எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலமும் மிகவும் பரவலாக அறியப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனைஎன்று நேற்று 31/7/07 தீர்ப்பு வழங்கினார் நீதிபதி பிரமோத் தத்தாரா, கோடே.10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு தடா கோர்ட் நீதிபதியாக பணியாற்றியுள்ள நீதிபதி கோடேவுக்கு 54 வயது. ஒரே கோர்ட்டில் அதிக வருடங்கள் பணிபுரிந்த முதல் நீதிபதி இவர்தான். அதுமட்டுமல்ல,ஒரே வழக்கில் (12 பேருக்கு) அதிகப்பட்ச எண்ணிக்கையிலான குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கியவரும் இவரே., ஜீன் மாதத்தில் கையில் காயமடைந்து ஓய்வில் இருந்த சில தினங்கள் தவிர ஒரு நாள் கூட நீதிமன்றத்திக்கு வராமல் இருந்ததில்லை. தாயார் இறந்த போது கூட வழக்குவிசாரனையை முடித்த பின்னரே இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள புறப்பட்டார். இந்த வழக்கும் இந்த வழக்கின் முக்கியத்துவமும் கருத்தில் கொண்டு இவருக்கு ரூ.25 இலட்சத்திற்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நீதிபதிக்கு தீர்ப்பு வெளிவரும் முன் பாதுகாப்பு கருதி காப்பீடு செய்திருப்பதுஇதுவே முதல் தடவையாகும்.
1994 ஆம் ஆண்டு துவங்கிய குண்டுவெடிப்பு வழக்கின் விசாரனை 31-07-2007ல் முடிவுக்கு வந்துள்ளது. 13000 பக்கங்களில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7000 பக்கங்கள் கொண்ட ஆவண ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலங்கள் 6700 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் வாதிகள், சினிமா மாயைகள், பிரபலங்களின் மாயத்திரைகள்என்று எதுவும் சட்டத்தை தன் விருப்பப்படி வளைத்துவிட முடியாது.சதாரண இந்தியக் குடிமகன் சட்டத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைவற்றிவிடாது.
சஞ்சய் தத் தற்காப்புக்காகவே ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற வாதத்தைநீதிபதி நிராகரித்தார். அநேகமாக எல்லா இந்திய மொழி பத்திரிகைகளும்சஞ்சய் தத் பற்றிய செய்திகளை பக்கம் பக்கமாய் கொடுத்திருப்பார்கள்.சஞ்சய் தத் என்ற நடிகரை நான் உட்பட பலர் விரும்புகிறொம்.அதுவும் 18 மாத சிறைத்தண்டனைக்குப் பின் அவர் நடிப்பில் ஒரு தனித்துவம் இருந்தது. சாதனைகள் புரியும் வேகம் இருந்தது. ஒரு மனிதனாக மகனாக அவர் செய்த தவறுகளுக்கான தண்டனையை அவர் அனுபவித்துவிட்டார். ஆனால் தன் சமூகக் கடமையிலிருந்து தவறிய குற்றத்திற்கான தண்டனை இது.
வாதப் பிரதிவாதங்களைத் தவிர்த்து
சஞ்சய் தத்திற்கு தண்டனை என்றவுடன் சின்னதாக ஒரு வருத்தம் ஏன் வருகிறது பொதுமக்களுக்கு?
இந்த வழக்கில் தண்டனை அடைந்த பலர் மீது ஏற்படாத அனுதாபம் சஞ்சய் தத் மீது மட்டும் ஏன்?
பல மதத்தவர்களும் அவரவர் கடவுள்களிடம் சஞ்சய் தத்திற்கு தண்டனை இருக்கக்கூடாது என்று பிரார்தனைகள் செய்தது ஏன்?
தண்டிக்கப்பட்டவர்கள் கருவிகள் தானே.!!
உண்மையான குற்றவாளிகள் யார்?
நெருப்பின் புகைச்சல் இருக்கிறது என்பதறிந்தும் நீரூற்றி அணைக்காமல்மண்ணென்ணெய் ஊற்றி வளர்த்தவர்கள் யார்?
இப்படி ..கேள்விகள்??????? ஆயிரம்.
ஒரு குண்டுவெடிப்பு வழக்கு முடியும் நேரத்தில் இன்னொரு வழக்கு (தொடர்வண்டியில் குண்டுவெடிப்பு வழக்கு)ஆரம்பமாகும் தொடர்கதையை
யார் எழுதுகிறார்கள்?
--------------------------
நாள்: 01-8-2007
No comments:
Post a Comment