Wednesday, June 27, 2007

காதலாகிக் கசிந்து கரைந்து...

காதலாகிக் கசிந்து கரைந்து..
.----------------------------
"பாடிக்கலந்திடவே தவம்
பண்ணியதில்லையடி.."
மகாகவி பாரதியின் காதல் வரிகள்.
காதலாகிக் கசிந்து கரைந்து தன்னை மறந்து தன் நாமம் கெட்டு
அவள் அவனில் ஒன்றி அவளை இழத்தல் இனி சாத்தியமா?
அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் மணமுறிவுகள்
இந்தக் கேள்வியை ஒவ்வொரு சமூக அக்கறையுள்ளவர்களிடமும் கேட்கிறது.
என்ன பதில்?யாரிடம் குறைபாடு?
குடும்ப வட்டம் இன்று ஒரு சின்ன ஒற்றைப் புள்ளியாய் மாற்றம் கண்ட பிறகும் எதனால் காதல் கசப்பாகி வழக்கு மன்றங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது?
படித்தப் பெண்கள் அதிகமிருக்கும் கேரளமாநிலத்தில் பெண்களின்
தற்கொலைச் சாவுகளும் அதிகமாக இருப்பதன் காரணம்என்ன?
ஒரு பக்கம் பெண்விடுதலையை நோக்கிய புறவுலகின் பயணம். மறுபக்கம்பெண் குடும்பம் சார்ந்தும் கணவன் துணையுடனும் வாழ்வது மட்டுமே அவளுக்கானசமூக அந்தஸ்த்து என்ற சமூக வாழ்வின் அகநிலை. இந்த இரண்டுக்கும் இடையிலான முரண், இடைவெளியில் இன்றைய பெண்களின் வாழ்க்கை.இந்த இடைவெளி எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. என்னவோ இப்போதோ நேற்று முந்தினமோ தோன்றிய இடைவெளி அல்ல. ஆனால் இந்த இடைவெளிஎவராலும் இட்டு நிரப்பமுடியாத பள்ளத்தாக்காய் அண்மைக்காலங்களில் மாறிப்போனதால் தான் சமரசமும் பெண் தன்னை மறந்து காதலாகிக் கசிந்து கரைந்துபோதலும் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது.அதற்கான காரணங்களைக் கோடிட்டு காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
கல்வியும் கல்வி சார்ந்த வேலை வாய்ப்புகளும் இன்றைய பெண்ணுக்கு அபரிதமானபொருளாதர உரிமையை வழங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் ஆண்களை விடபெண்களே முன்னுரிமைப் பெற்றவர்களாக திகழ்கிறார்கள். பள்ளி இறுதிப் படிப்பு,கணினி மென்பொருள் துறை. வளர்ந்து வரும் BPO, Call centres, வணிக வளாகங்கள்அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குகிறது இன்றைய உலகமயமாதலும் தனியார்மயமாதலும். பெண்களை பணிகளில் அமர்த்துவதன் மூலம் தொழிற்சங்கம், ஊதிய உயர்வு போன்ற போராட்டங்களைத் தவிர்ப்பதும், பதவி உயர்வு, சம்பள உயர்வு என்ற நியாயமானக்கோரிக்கைகளை புறக்கணிப்பதும் பெண்களின் விசயத்தில் எளிது என்பதால்பெண்களுக்கு பணியடங்களில் முன்னுரிமை வழங்கப் படுகிறது என்பது தான் உண்மை. உலக மயமாதலான சந்தையில் அரசும் அரசு சார்ந்த கொள்கைகளும்வலுவிழந்து விட்டதால் படித்தப் பெண்களும் மேற்கத்திய உடையில் வலம்வரும்கொத்தடிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அடிமைத்தனத்திலிருந்துவெளியில் வர முடியாது என்பது பெண்ணிய வளர்ச்சி விடுதலையில் ஏற்பட்டிருக்கும்தீர்க்க முடியாத நோயாகிவிட்டது. இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாகவீடு, குடும்பம், குடும்பம் சார்ந்த கடமை, பாலியல் உறவு, பொறுப்பு இவைகளை முழுமையாகச்செயல் படுத்த முடியாத நிலைமை பெண்களுக்கு. விளைவு.. மணமுறிவுகள்.
மும்பை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வந்திருக்கும் 10 ஆண்டுவழக்குகளில் 1991ல் 1839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2001ல் அதுவே 2877 ஆகஉயர்ந்துள்ளது. (ref: Growing Incidence of Divorce in Indian Cities: A Growing Incidence of Divorce in Indian Cities: A Study of Mumbai Ajay Kumar Singh & Dr. R K SinhaInternational Institute for Population Sciences,Mumbai, India)
வயது வாரியாகப் பார்த்தால்
வயது ஆண் பெண்
15-24 1.7 22.3
25-34 57.3 57.0
35-44 29.0 18.0
44+ 12.0 2.7

இந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் மும்பை, சென்னை நகரங்களில் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ,மேலும் விவாகரத்துக்கானகாரணங்களில் தற்காலிகமான வேறுபாடுகள் காரணமாக விவாகரத்துக்கு வந்துவழக்குகள் 18.7. ஆணின் வன்கொடுமைக் காரணமாக வந்தவை 33.7.பொய், பித்தலாட்டம், பாலியல் உறவில் நிறைவின்மை காரணங்கள் எல்லாம் முறையே 1.3, 5.7 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இந்தப் பத்து வருட உண்மையான பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் ஆண்- பெண் உறவில் ஏற்பட்டிருக்கும் உளவியல் சார்ந்த புள்ளியைச்சுற்றி எழுந்திருக்கும் அலைகள்.

கல்வி, வேலை காரணமாக பெண்களின் திருமண வயது 25ஐத் தாண்டிவிட்டது.25 வயதுக்குள் ஒரு பெண்ணோ ஆணோ தன் ஆளுமையை வளர்த்துக் கொள்கிறார்கள். அப்படி தன் ஆளுமையை வளர்த்துக் கொண்டபின் ஒருவருக்காகஒருவர் தன்னை மறப்பதும் தன்னை இழப்பதும் எப்போதும் எல்லா இடங்களிலும்சாத்தியமாவதில்லை.
புடவையா.. அவருக்குப் பிடித்தது..
சமையலா.. அவருக்குப் பிடித்தது
சங்கீதமா.. அவருக்குப் ப்டித்தது
சினிமா அவருக்குப் பிடித்தது
இப்படி எல்லாம் அவருக்குப் ப்டித்ததாகவே இயங்கிய நம் அம்மாக்களின் பெண்களாகநாமில்லை. ஆனால் மரபணு சார்ந்து தனக்குப் ப்டித்தது மட்டுமே அவளுக்குப் ப்டித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே ஆணும் அவன் சார்ந்த சமூகமும்இருக்கிறது.
குறைந்தப் பட்சம் தனக்குப் பிடித்தது அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிற இடங்களில் வேறுபாடுகள் குறைகிறது. அதாவது தன் விருப்பம் அவள் விருப்பமாக இருப்பதுடன் அவளுக்கு என்று தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அந்த விருப்பங்கள்தானும் விரும்புவதாக இருக்கலாம் அல்லது விரும்பாததாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு ஆண்-பெண் உறவில்ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்குள் ஒவ்வொரு ஆணும்சற்று திக்கு முக்காடி மூச்சுத் திணறித்தான் தவிக்கிறான். இந்த மூச்சுத் திணறலைவிட்டு வெளியில் வந்து பெண், மனைவி, அவளுக்கான ஆளுமைகளை ஏற்றுக்கொள்வதில் ஆண் காலம் காலமாய் போற்றி வளர்த்திருக்கும் ஆண்மை காயப்படத்தான் செய்கிறது. " உலகத்தில் 'ஆண்மை' நிற்கும்வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் 'ஆண்மை' என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ஆண்மையால் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று தந்தை பெரியார்சொல்வதும் இதனால் தான்.
இந்த முரண்களின் இராட்சத பல்லிடுக்குகளில் சிக்கி வதைபடுகிறதுஆண்- பெண் உறவும் ஆண்-பெண் உறவு சார்ந்த குடும்பமும். சமூக மாற்றத்தைநோக்கிய பயணத்தில் இவை எல்லாம் தவிர்க்க முடியாதவை.உளவியல் சார்ந்த இப்பிரச்சனைகளையும் தன் நுண்ணிய அறிவு திறத்தால்ஆணும் பெண்ணும் வெற்றி கொள்ளும் நாள் விரைவில் வரும்.

1 comment:

  1. வலைப்பதிவுகளில் உங்களை இன்று கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    படைப்புகள் ஆறாய்ப் பெருக
    வாழ்த்துகள்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete