Friday, June 14, 2019

பொற்காலத்தின் குற்றவாளி பா ரஞ்சித்

Image result for பா ரஞ்சித் தஞ்சை கோவில்கலைத்திறன் உலகமெங்கும் போற்றப்படுகிறது. எகிப்தின் பிரமிடுகளும் சீனாவின் பெரும்சுவரும் ஏன் ஷாஜஹானின் தாஜ்மஹாலும் கூட கலைத்திறனுக்காக போற்றப்படுகின்றன.
 ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் அக்கலைத்திறன் வெளிப்பாடு 
அதற்கும் அப்பால் அந்தக் காலத்தைப் பொற்காலமாக க் கொண்டாடும்
 ஒரு மன நிலையை உருவாக்கி இருக்கிறது.
இந்தப் பொற்கால மன நிலையை உருவாக்கியதில்
 வரலாற்றாசிரியர்கள் மட்டுமல்ல, இன்றைய 
அரசியல் தலைவர்களும் கூட சமதையான பங்களிப்பு
 செய்து நம் பொற்காலத்தை அப்ப டியே தக்கவைத்துவிட்டார்கள்.
அதன் விளைவுகள் தான்… இன்றைய பா ரஞ்சித் அவர்களுக்கு
 கிளம்பி இருக்கும் எதிர்ப்பின் இன்னொரு முகம்.
மகாத்மா காந்தியைக் கூட விவாதப் பொருளாக்கி கோட்சே
 ஏன் கொலைவெறி கொண்டான் என்று யோசிக்க வைக்கும்
 அளவுக்கு ஊடகங்கள் கிளர்ந்து எழுந்துவிட்ட காலத்தில்
 பா. ரஞ்சித் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறார்.
பா ரஞ்சித்தைக் குற்றவாளி ஆக்கியது
 ராஜ ராஜனைக் குற்றம் கண்டுப்பிடித்ததற்காக அல்ல என்பதும்
 அக்குற்றத்தைப் பலர் கண்டுபிடித்து
பலர் புத்தகம் எழுதி அதுவும் கல்வெட்டு ஆதாரங்களோடு
 வெளிவந்தப் பின் அப்படி வெளிவந்த ஒரு கருத்தை
 பா ரஞ்சித் பேசியது தான் மிகப் பெரிய குற்றமாக
 சித்திரிக்கப்படுகிறது என்றால் …உண்மையில் இவர்களுக்கு
இடைஞ்சலாக இருப்பது இதை எல்லாம் 
பா ரஞ்சித் வகையாறாக்கள் பேசக்கூடாது என்ற பொற்கால உளவியல் தான்!
கருங்கற்பாறைகளே இல்லாத காவிரி பாயும் தஞ்சை மண்ணில்
 ஒரு இலட்சத்து முப்பாதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு
 கட்டப்பட்ட கம்பீரமான கோவில் தான் தஞ்சைக்கோவில். 
அதுவும் சாலை வசதியோ நவீன தொழில் நுட்பமோ இல்லாத
 காலத்தில் இதை அவன் செய்து முடித்த து எப்படி???
ராஜ ராஜன் காலத்தில் குடவோலை முறை இருந்த தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அக்குடவோலையில் பங்குபெறும் அதிகாரம்
யாருக்கு கொடுக்கப்பட்டிருந்த து என்ற பொற்காலத்தை நாம் பேசுவதில்லை.
அந்த திருவுளச்சீட்டு வேட்பாளர் வேதம் கற்றிருக்க வேண்டும், 
நில உடமையாளராக இருக்க வேண்டும்.
 இந்த இரண்டு தகுதிகளும் யாருக்கு பொருந்தும்??!!
13 காசுக்கு தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டவர்கள் இருந்தார்கள்.
அப்படி விற்றுக்கொண்டவர்கள் இவன் தேசத்து குடிமக்கள் தான் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
திருமணத்திற்கு வரி விதித்த பொற்காலம் இவன் காலம்.
யாரெல்லாம் இவன் வரிக்கொடுமையை எதிர்த்து கலகம் செய்தார்களொ
அவர்களெல்லாம் “சிவத்துரோகி” என்று குற்றம் சாட்டப்பட்டார்கள்.
உற்பத்தி பெருக்கமும் அதிகாரத்தின் உச்சமும்
 பிரமாண்டங்களை எழுப்புவதன் மூலம் தங்கள் 
அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள
நினைக்கின்றன. “காந்தளூர்ச் சாலை கல மறுத்தருளி” 
என்பது கூட அவன் மெய்க்கீர்த்தியாகத்தான் 
சொல்லப்படுகிறது. தங்கம் வெள்ளி அடிமைப்பெண்கள் 
குழந்தைகள் என்று போரில் கொண்டுவந்துக் குவித்த
அதிகாரத்தின் வடிவம் தான் பெருவுடையார் கோவில்.
இக்கோவில் சைவத்தை மட்டும் வளர்க்கவில்லை.
 இக்கோவில் தான் நிலவுடமையின் அதிகாரத்தையும்
பேணியது. பொற்களஞ்சியமாக இருந்த இக்கோவில் தான் 
மார்வாடியின் ஈட்டி மாதிரி வட்டிக்கு கடன் கொடுத்தும் திருப்பிக் கொடுக்காதவர்களின் நிலத்தை அபகரித்தும்
 தன்னைப் பெருக்கிக் கொண்ட து.
அரசர்களின் வெற்றிகளைக் கொண்டாடும் போது
 அடிமைகளை மறந்துவிடுவது வாடிக்கைதான். 
வரலாறு நெடுக வெற்றி பெற்றவர்களின் கதை மட்டுமே
 எழுதப்பட்டு பொற்காலமாக வலம் வருகிறது.
என்ன… பொற்காலத்தின் ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. பொற்காலத்தின் இன்னொரு முகம்
அவ்வளவு எளிதில் மறுக்க முடியாததாய் அச்சமூட்டுகிறது.
ஆனால் அதை பா ரஞ்சித் வகையாறாக்கள் பேசிவிடக் கூடாது
 என்பது தான் ரொம்பவும் முக்கியம்.
இதுதான் பொற்கால உளவியல். 
பா ரஞ்சித் அந்த ராஜ ராஜன் காலத்தில் பேசி இருந்தால் 
"சிவத்துரோகி" என்று அழைக்கப்பட்டிருப்பார்.
இன்று அவரை தமிழ் இனத்துரோகி, தமிழ்த்தேசிய துரோகி என்று பொற்காலத்தவர் அழைக்கலாம்!

பொற்காலம் இப்படித்தான் பேணிப் பாதுகாக்கப்படுகிறது.
வாழ்க பொற்காலம்.

3 comments:

  1. துணிச்சலாக எழுதியுள்ளீர்கள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.
    வாய்மையே வெல்லும்!

    ReplyDelete
  2. விமர்சனங்களுக்கு அப்பால் பட்டவர் அல்ல ராஜராஜன். அதற்க்காக அவரை அயோக்கியன் என்று விழிக்க வேண்டுமா? மன்னர் காலத்து சமூக மதிபீடுகளை இன்றைய மக்களாட்சி மதிப்பீடுகளுடன் துளியும் ஞாயமில்லை. அதிலும் அருந்ததி சாதியில் பிறந்த ரஞ்சித்துக்கு துளியும் அருகதை இல்லை. இவர்கள் நாயக்கர் காலத்தில் தமிழ்நாட்டில் குடியேறிவர்கள். இவர்களுக்கு ஏது நிலம்.நாயக்கர் காலத்துக்கு பிறகே நில அபகரிப்பு, தேவதாசிகளை பெண்டாலும் முறை கைகொள்ளப்பட்டது. பிராமணர்களுக்கு அமைச்சர் பொறுப்பும் கோயில் பூசகர்களாக இருந்த தமிழ்ச்சதியான பறையர்கள் ஓரங்கட்டப்பட்டதுவும் நாயக்கர்கள் காலத்தில்தான். அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு ராசராசன் மட்டும் குறிவைக்கப்படுவதுதான் அயோக்கியத்தனம். ரஞ்சித் அவரது ஞாயமான கோரிக்கையை ஆந்திரத்தில் வைக்கட்டும். ராசராசன் தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு.

    ReplyDelete