Saturday, July 28, 2018

கேன்சர் டிரெயின் ..


IRADA … ECO THRILLER மட்டுமல்ல.
இது கேன்சர் டிரெயின் கதை,
நாம் வாழும் காலத்தில் நாம் திரும்பிப் பார்க்காத
நிஜம். இவர்கள் நம் தேசத்தில் தான் வசிக்கிறார்கள்.
இன்று பஞ்சாப்.
நாளை தமிழகமும் இருக்கலாம்.
கேன்சர் டிரெயின் இமயம் முதல் குமரி வரை
ஓடி ..
இந்திய இறையாண்மையைக் காப்பாற்றிவிடலாம்.
நசுரூதின் ஷா (நான் விரும்பும் நடிகர்)
நடித்தப் படம் என்பதால் பார்த்தேன்.
ஒரு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து.
அதைப் பற்றி ஆய்வு செய்வதற்கு வருகிறார்
அர்ஷர் வர்சி. இருவரின் நடிப்பும் அபாரம்.
இராசயணக் கழிவுகளை நிலத்தடியில் விடுகிறது
தொழிற்சாலை. பூமியின் மடியே நச்சாகிவிடுகிறது.
விளைவு.. இன்று அந்த மக்கள் கேன்சர் டிரெயினின்
பயணிகள்..
…..
இப்படம் பார்த்தவுடன் சினிமா என்று எண்ணி கடந்து
வந்துவிட முடியவில்லை. காரணம் இத்திரைப்படம்
உண்மையான கதைகளின் சாரம் என்று இத்திரைப்படம்
வெளிவந்தவுடன் வாசித்தது இரவெல்லாம் என்னைத் தொந்தரவு
செய்தது. அதிகாலையில் (இந்தியாவில் இப்போது இரவு8.30)
எழுந்தவுடன் இந்தியாவில் எதுவும் கேன்சர் டிரெயின் ஓடிக்
கொண்டிருக்கிறதா அல்லது இக்கதையில் அப்படியான ஓர்
ஆபத்து வந்துவிடும் என்று காட்டுகிறார்களா என்று அறிவதற்காக
கூகுள் அகராதியில் தேடினேன். கேன்சர் டிரெயின் கதையல்ல.
நிஜம். பஞ்சாப் மா நிலம் பசுமைக்கும் அம்மக்களின் உழைப்புக்கும்
பெயர்போனது. அந்த பூமி இன்று நோயாளிகளின் கல்லறையாகி
விட்டது. நாம் வாழும் காலத்தில் நம் தேசத்தில் தான் இதுவும்
நடந்து கொண்டிருக்கிறது. எவனும் இதைப் பற்றிப் பேசுவதில்லை.
எந்தக் கட்சிக்கும் இதைப் பற்றி பேச நேரமில்லை.
கேன்சர் நோயாளிகள் இந்த டிரெயினில் இலவசமாகப்
பயணம் செய்யலாம் என்ற சலுகையை வழங்கிவிட்டதுடன்
அரசியல்வாதிகளின் கடமை முடிந்துவிட்டது.



No comments:

Post a Comment