Tuesday, April 4, 2017

VOTE FOR THE CROOKS

Image result for when crime pays

vote for the crook, its important
குற்றவாளிக்கு- கிரிமினலுக்கு ஓட்டுப் போடுங்கள்.
அது முக்கியம், இன்றைய தேவை என்றெல்லாம் கூட
 பிரச்சாரமே செய்து தேர்தலை சந்தித்த களங்கள்
உலக நாடுகளில் உண்டு.

ROUBA, MASFAZ
HE ROBS, BUT HE GETS THINGS DONE
ரூஃபா.., மஸ்ப்ஃஷ் என்ற போர்ச்சுக்கிசிய சொற்றொடரின் பொருள்
"அவன் திருடுகிறான். ஆனால் காரியங்களை செய்ய வைக்கிறான்"
அதாவது நமக்குப் புரிகிறமாதிரி சொல்ல வேண்டும் என்றால்
லஞ்சம் ஊழல் செய்யும் திருடன். வாங்குகிற லஞ்சத்திற்கு
 ஏமாற்றாமல் வேலையைச் செய்து முடிப்பவன்...
 இப்படியானவர்களை நாம் திறமைசாலிகள், புத்திசாலிகள், பிழைக்கத்தெரிந்தவன் என்றெல்லாம்
சொல்லி பாராட்டுகிறோம். இதை அறிந்த அந்நாட்டின் மேயர்
பவ்லா மாலுஃப் தன் மின்னஞ்சல் முகவரியைக் கூட maluf@masfaz.com
என்று வைத்திருக்கிறார்.
திருடன், கிரிமினல் , குற்றவாளி, ஊழல் செய்தவன்,
 சாராயம் காய்ச்சுபவன், கள்ளக்கடத்தல்காரன்,
 கொலை செய்தவன், எவனாக இருந்தாலும்
ஓட்டு வேட்டையில் வெற்றி பெற முடியும்.
மக்களும் அரசியல் கட்சிகளும் தேர்தலில் தங்கள் வேட்பாளர்களாக
ஏன் இம்மாதிரி கிரிமினல் குற்றவாளிகளை தேர்வு செய்கிறார்கள்?
அவர்களும் வெற்றி பெறுவது எப்படி?
மக்கள் அவர்களிடன் நவீன ராபின்குட் அவதாரத்தை
 எதிர்பார்க்கிறார்களா? இது என்னமாதிரி உளவியல்..!
புள்ளிவிவரங்களுடன் உண்மையான தேர்தல் களத்தை
வேட்பாளர்களின் குற்றப்பட்டியலுடன் நம் முன் வைக்கும்
இப்புத்தகம் மக்களாட்சியின் மகத்துவத்தைக் கேள்விக்குறியாக்கி
நம்மை கொஞ்சம் பயமுறுத்தி சிந்திக்க வைக்கிறது.
சாராயவியாபாரிகள் எல்லோரும் கல்வித்தந்தைகளான
காலத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.
எனவே நிஜம் நம்மைப் பயமுறுத்துகிறது.
சரி..
இப்படி ஒரு புத்தகத்தை தமிழ்நாட்டு அரசியலை
 மட்டுமே வைத்துக்கொண்டு எழுதினால் ... எப்படி இருக்கும்.?
என்று யோசித்துப் பார்க்கிறேன். ! நீங்களும் கொஞ்சம் கற்பனை
செய்து பாருங்கள்... அடடா...
இனி இறுதியாக ஒரு வரி..
இந்தப் பதிவின் முதல்வரியை ஏடாகூடமா ஆர் கே நகர் தேர்தலோடு
சேர்த்து நீங்கள் வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

2 comments:

  1. இந்தியாவின் பெரும்பாலான வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள்..... வேதனை தான் மிஞ்சுகிறது. நல்லவர்கள் அரசியலுக்கு வர விரும்புவதில்லை. வந்தவர்களையும் அரசியல் சாக்கடை மூழ்கடித்துவிடுகிறது.

    ReplyDelete
  2. குற்றம் என்பதன் வரையறையை தளர்த்திவிடுவதுதான் ஒரே வழி! ஆடையில்லாதவர்கள் மத்தியில் ஆடை அணிந்தவன் தானே முட்டாள்- அது போல.

    ReplyDelete