காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் கடந்த மார்ச் 14-ம் தேதி உலக நன்மை வேண்டி தச மஹா வித்யா ஹோமம் தொடங்கியது. மார்ச் 23-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. பராசக்தி 10தேவியரின் உருவங்களில்
தரிசனம் தந்திருக்கிறாளாம்.
மாதங்கி, புவனேஸ்வரி, பகளாமுகி, திரிபுரசுந்தரி, தாரா, மாகாளி, மகாலட்சுமி, சின்னமஸ்தா, தூமாவதி, பைரவி என்பது தான் அந்த 10 தேவியரின் திருநாமங்கள்.இவர்களுக்கான சிறப்பு வழிபாடுதான் தச மஹா வித்யா ஹோமம்.
இந்தப் பத்து தேவியரும் சேர்ந்து ஜசோதா பென் நரேந்திர மோதிக்கு
தங்கள் ஆசிர்வாதத்துடன் ஒரு புடவையை அனுப்பி வைத்துவிட்டார்கள்.
யாகம் முடிந்தப் பி ன் அந்தப் புடவையை எடுத்துக் கொண்டு பிரதான அட்சகர்
நடராஜ சாஸ்திரி மார்ச் 26ல் டில்லி போய் நரேந்திர மோதியை சந்தித்து
பிரசாதம் கொடுத்து அப்படியே அம்மன் அனுப்பிய புடவையையும்
கொடுத்து உங்கள் மனைவியிடம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டாராம்!
நம் மோதி அவர்கள் தேவி பக்தராமே! சாஸ்திரி சொன்னதை அப்படியே
செய்திருப்பார்... அதன் பிறகு தான் நரேந்திர மோதிக்கு மனமாற்றம் ஏற்பட்டு
தன் தேர்தல் விண்ணப்ப படிவத்தில் மனைவியின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார் சாஸ்திரி.
உண்மை இப்படி தச மஹா வித்யா அவதாரமாக இருக்க
நம் அம் ஆத்மி ஆட்கள்
அவர்களின் மிரட்டலுக்குப் பய்ந்து போய்த்தான் மோதி தன் மனைவியின்
பெயரைக் குறிப்பிட்டார் என்று சொல்லிக் கொண்டு அலைகிறார்கள்.
சரி அவர்களை விடுங்கள், நான் கூட என்னவோ என் வலைத்தளத்தில்
எழுதியதால் தான் மோதி உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார்
என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு இருந்தேன். எல்லாம் போச்சு..
(http://puthiyamaadhavi.blogspot.in/2013/12/blog-post.html)
எப்படியோ... சகோதரி ஜசோதா பென் அவர்களுக்கு நல்லதாக ஒரு புடவை
கிடைத்திருக்கிறதே என்று சந்தோஷமாக இருக்கிறது.
(செய்தி ஆதாரம் :தமிழ் ஒன் இண்டியா டாட் காம்)
No comments:
Post a Comment