Tuesday, April 19, 2022

சோட்டா மோதி..

 


சின்னக்கவுண்டர் வந்தாரா வரலையா தெரியாது.

ஆனால்

சின்ன மோதி – சோட்டா மோதி வந்துவிட்டார் , வந்துவிட்டார்.

மனோஜ் சோனி – UPSC New Chairperson. ஆக நியமனம்.

மோதிஜி குஜராத்தின் முதல்வராக இருந்தப்போது

அவருடைய உரைகளை தயாரித்துக்கொண்டுத்தவர்.

அதாவது மோதிஜி பேசியதெல்லாம்

சோட்டா மோதி எழுதிக்கொடுத்தது என்ற வகையில்

அப்போதே செல்வாக்கு மிக்கவர்.

2002 குஜராத் கலவரத்தை “In search of a third space’ என்ற புத்தகம்

எழுதி இந்துத்துவ பார்வையை முன்வைத்தவர்.

பொதுவாக அதிகாரமிக்க IAS , IPS பதவிகள் ..

அதைத் தீர்மானிக்கும் அதிகாரமிக்க பதவி UPSC Chariperson.

இப்பதவியில் அரசியல் கட்சி சார்பில்லாதவர்களை

நியமிப்பது வழக்கம். அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு

சோட்டா மோதி வருகிறார். வருகிறார்.

இந்தியாவின் IAS IPS அனைவருமே இவர் வசமானால்

என்று கல்வியாளர்கள் மட்டுமல்ல

அரசியல்வாதிகளும் அச்சம் கலந்த கவலையுடன்

இந்த நியமனத்தைப் பார்க்கிறார்கள்.

தமிழ் நாட்டில் ..?

நமக்கென்ன  சரவணா..

இப்போதைக்கு இளையராஜா பஞ்சாயத்தே முடியவில்லை.

பிறகுதானே மற்றதை எல்லாம் பார்க்க முடியும். ..!

 

 

 

2 comments:

  1. பெருங் கொடுமை... மாணவர்கள் போட்டித்தேர்வுகளின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்

    ReplyDelete
  2. கவலையாக இருக்கிறது. இருந்தாலும் போராடிக் கொண்டே இருப்போம். நன்றி சார் 🙏

    ReplyDelete