நாற்பதுகளைத் தவறவிட்டவர்கள் அறுபதுகளில் நிம்மதி இழக்கிறார்கள். என்னைப் போல.
ஒவ்வொரு பெண்ணுக்கும் நாற்பது முதல் 50 வரை முக்கியமான பருவம். அதை என்ன காரணம் கொண்டும் யாருக்கும் தியாகம் செய்து விடாதீர்கள். கொஞ்சம் தன்னலத்துடன் இருங்கள், ஆம்.. அதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது.
இங்கே குடும்பம் என்பதும் உடன்பிறப்புகள் உறவுகள் என்பதும் எம் தந்தையர் காலத்தின் வாழ்வியல் விழுமியங்களக் கைவிட்டு வெகுதூரம் வந்துவிட்ட து. பாசம், அரவணைப்பு, எல்லோரையும் சேர்த்திழுத்துக்கொண்டு பயணிக்க நினைத்த விழுமியங்கள் எல்லாமே அர்த்தமிழந்துவிட்டன. திரும்பிப்பார்க்கும் போது நம்மை இன்று அவமதிக்கும் அவர்கள் புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கடமை பாசம் என்பதெல்லாம் ரொம்பவும் கேலிக்கூத்தாகிவிட்டது,, ......
நாற்பதுகளில் விழித்துக்கொள்ளுங்கள். உங்களை , நீங்கள் திருமணம் ஆனவர் என்றால் உங்கள் பிள்ளைகள் உங்கள் கணவர் இந்த முதல் வட்ட த்திற்கு மட்டும் அதிக நேரம் ஒதுக்குங்கள் .
உங்கள் பணம் மட்டுமல்ல,
உங்கள் நேரம் விலைமதிப்பில்லாதது.
உங்கள் உழைப்பு விலை மதிப்பில்லாதது. அதை யாரும் சுரண்டுவதற்கு நீங்களே காரணமாக இருக்காதீர்கள்.
பாசம் கடமை என்ற பெயரில் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்!
உங்கள் சுயம் காயப்படாமல் காலமெல்லாம் நீங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதை உங்கள் நாற்பதுகள் தான் தீர்மானிக்கின்றன.
நாற்பதுகளைத் தவறவிட்டு என்னைப் போலவும் என் எழுத்துகளைப் போலவும் அனாதையாகிவிடாதீர்கள்.
என் பிள்ளைகளுக்கும் இதையே என் அனுபவப் பாடமாக விட்டுச் செல்கிறேன். எல்லாம் மாறுகிறது. நாமும் மாற வேண்டும்.
அருமை...நாற்பதுவரை கொண்ட அனுபவங்களைக் கொண்டு அறுபதுக்குள் அடைய வேண்டியவைகளை அடையாதவன் நிச்சயம் அறுபதுகளில் அவதியடையவே அதிகச் சாத்திய்ம்..
ReplyDeleteExperience speaks.
ReplyDeleteநீங்கள் திருமணம் ஆனவர் என்றால் உங்கள் பிள்ளைகள் உங்கள் கணவர் இந்த முதல் வட்ட த்திற்கு மட்டும் அதிக நேரம் ஒதுக்குங்கள் .
ReplyDeleteஇவர்களால்தான் தியாகம் என்ற பெயரில் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள்