புத்தகவரிசையில்…
1) *சங்கமி
இப்புத்தகம்
எல்லோருக்குமானதல்ல. ஆம். ஆனால் கல்லூரி மாணவர்கள், பெண்ணியம் சார்ந்த ஆய்வாளர்கள்
அனைவருக்கும்
மிகவும்
உதவியாக இருக்கும். சங்கமி புத்தகம் இந்தியா மற்றும்
உலக
நாடுகளின் பெண் எழுத்தாளர்கள் / களப்பணியாளர்களின்
நேர்காணல்களைத்
தொகுத்து ஊடறு வெளியிட்டிருக்கும் புத்தகம்.
காவ்யா
பதிப்பகம் வெளியீடு.
இப்புத்தகத்தை
தொகுத்தப்போது இன்னும் சிலரின் நேர்காணல்களை
அவர்களின்
வெளிப்படையான மதம் சார்ந்த சில கருத்தியல் காரணமாக தொகுப்பிலிருந்து எடுத்துவிட்டோம்.
அப்பகுதியை மட்டும்
நீக்கிவிட்டு
வெளியிடுவது அவருடைய உரிமையில் நாங்கள் தலையிடுவதாக அமையும். எனவே காட்டமான சிலரில்
நேர்காணல்களை இணைக்க முடியவில்லை. பிரபலமானவர்கள் மட்டுமல்ல, ஊடகங்கள் வெளிச்சப்படுத்தாத
களப்பணியாளர்களையும்
கலைஞர்களையும்
இணைத்திருக்கிறோம்.
ஒரு
தொகுப்பாசிரியராக எனக்கு மிகுந்த மன நிறைவைக்
கொடுத்த
புத்தகம் “சங்கமி”
ஊடறு றஞ்சிக்கு நன்றியுடன்.
*மாபெரும்
தமிழ்க்கனவு.
அறுவடை.
உ.பிக்களும் ர.ர.க்களும் வாங்கியிருப்பார்கள்.
அவர்களில்
யாராவது புத்தகத்தைப் புரட்டினார்களா?
இதுதான்
இப்போது மில்லியன் டாலர் கேள்வி!
ஆனால்
வளரும் இளம் அரசியல்வாதிகளுக்கு
அண்ணாவின்
நாடாளுமன்ற உரைகள்.. இந்திய கூட்டாட்சி
அரசியலமைப்பையும்
அரசியலையும் புரிந்து கொள்ள
வழிகாட்டும்.
நான் மிகவும் விரும்பி வாசித்தப் புத்தகம்.
*அயோத்திதாசர்
தொடங்கிவைத்த அறப்போராட்டம்:
பிரேம்
அவர்களின் கட்டுரைத்தொகுப்பு.
கலை இலக்கிய தளத்தில் போற்றப்படும்
புனிதங்களையும்
தூய்மைகளையும் கட்டுடைத்து
மாற்று அரசியலுக்கான பாதையை,
ஒடுக்கப்பட்ட மக்களும் ஒடுக்கும்
மக்களும் இணையும் புள்ளியாக
நிகழ வேண்டிய அறப்போராட்டங்களை அயோத்திதாசரின்
எழுத்துகளின் ஊடாக கண்டடைகிறார் பிரேம்.
*காலம்தோறும் பிராமணீயம் – அருணன்.
7 பாகங்களாக வந்திருக்கும் இந்திய சமூக வரலாற்றின் பக்கங்கள்.
தேச முன்னேற்றத்தை மதமும் கலாச்சாரமும் எப்படி சீரழித்துக்
கொண்டிருக்கின்றன என்பதை வரலாறு இலக்கியம் கலைகளின் ஊடாக
கண்டு கட்டுடைத்து விடை தேடும் நூல்.
*இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்
அழிந்தனவும்
ஆசிரியர்: தேவிபிரசாத்
சட்டோபாத்தியாயா (விடியல் பதிப்பகம்)
இந்தியத் தத்துவப் பரம்பரையைப்
பற்றிய ஒரு மதிப்பீடு
இன்று தேவைப்படுகிறது. எனவே இப்புத்தகம் மீள்வாசிப்புக்குரியது.
#Chennai_bookfair2021
#myreadings_puthiyamaadhavi
No comments:
Post a Comment