சின்னம்மா…. திரும்புகிறார்…
சின்னம்மாவின் வருகை அதிமுக கரைவேட்டிகளுக்கு
கஷ்டகாலம்தான். கடந்தக்காலத்தை அவ்வளவு எளிதில்
மறந்துவிடமுடியாமல் அவஸ்தைப்படலாம்.
அரசியல்வாதிகளும் மனிதர்கள் தானே!
அதிமுகவில் சின்னம்மாவின் அருள்வாக்கு வேண்டி
நிற்காதவர்கள் வெகுசிலர். சின்னம்மாவின் சிஎம் கனவுகளை
சிறைவாசம் தின்று ஏப்பம் விட்டிருந்தால் நல்லது.
அவரை ஒரு ராஜமாதாவாக ஏற்று அடிபணிய
எப்போதும் அதிமுக தயார் தான்.அதை அவர் ஆரம்பத்திலேயே தெளிவாக்கிவிடுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல,
திமுகவுக்கும் நல்லது!
அரசியலில் எதுவும் நடக்கும்.
சின்னம்மா சிறைதண்டனை முடிந்து வெளியில் வருவதால்
அவர் குற்றவாளி இல்லை என்றாகிவிடுமா?
இந்தக் கேள்வி அரசியலில் அர்த்தமில்லாத து.
உயிருடன் இருந்திருந்தால் ஜெயல ிதாவும்
சசிகலாவுடன் சேர்ந்து விடுதலையாகி வரும் நாளாகத்தானே
இருந்திருக்கும்.
ஜெயலலிதாவின் கல்லறையை கட்டி வழிபடுகின்ற அரசுக்கு,
அதை ஏற்றுக்கொண்டிருக்கும் தமிழக அரசியல்
மற்றும் தமிழக மக்களுக்கும்
சசிகலாவை மட்டும் குற்றவாளி என்று சொல்லும் தகுதி
இருக்கிறதா என்ன?
எடப்பாடி தனிமைப்படுத்தப்படலாம்.
மீண்டும் ஓபிஎஸ் சின் மனசாட்சி ிழித்துக்கொள்ளலாம்.
மெரினா கடல் அலைகளுக்கு இன்னும் சில
சத்தியங்களைக் காணும் அபாக்கியம் நேரலாம்..
பாவம் அதிமுக தொண்டர்கள் தான். அதைவிட பாவம் திமுக.
தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் காங்கிரசு
திமுகவின் கிளையாகி, இருக்கிறதா இல்லையா
என்ற நிலையில் இருக்கிறது.
அதிமுக அரசியலில் ஒரு பேட்டரி போடாத ரிமோட்டாக
சின்னம்மா இருக்கலாம். அதைத்தாண்டினால்
அது அதிமுக என்ற அரசியல்கட்சியை மலை உச்சியிலிருந்து
உருட்டிவிட்ட கதைதான்!
பலனடையப்போவது பிஜேபி. எப்படி என்றால்
திமுக வின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக
இருந்த நிலை மாறி அந்த இட த்தில் பிஜேபி வந்துவிடும்.
இது பிஜேபி புறவாசல் வழியாக நுழையும் அரசியல்.
இதை மிகவும் சரியாக கணக்கிட்டு பிஜேபி
ஆட்ட த்தை ஆடுகிறது.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பிஜேபி மாறுவது …
திமுக வுக்கும் பெரிய தலைவலிதான்.
இதை எதிர்க்கொள்ளும் அளவுக்கு
அரசியல்வித்தகர்கள் திமுகவில் இருக்கிறார்களா என்ன?!
போகப்போகத் தெரியும்.
அற்புதமான அலசல்
ReplyDeleteநன்று.
ReplyDeleteநலமா?
நா. கணேசன்
http://nganesan.blogspot.com