Thursday, November 28, 2019

WIN WIN POLICY in politics ..

Image result for uddav takre"
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே”
சரவணா.. எங்க ஊரு அப்படியே குஷியில
மிதக்குதுடே.. ஒரு வாராமா இழவு வீடு மாதிரி
கம்முனு இருந்தோமில்ல.
 இதெல்லாம் மும்பைவாசிகளுக்கு
 ஒத்துவராத விஷயம்.. நல்லதா போச்சுய்யா.
.சட்டுப்புட்டுனு ஒரு முடிவுக்கு வந்தாச்சு.
எல்லார் முகத்திலேயும் அம்புட்டு சிரிப்பாணி..
வழிஞ்சி வழிஞ்சி ஊரெல்லாம் மிதந்து
என்னையும் தொத்திக்கிட்டுப் போ..
1)“ பிஜேபி இரண்டாவது முறையும் ஆட்சி அமைக்கும்னு
 சொன்னபடி ஆட்சி அமைச்சாங்க தானே.
 3 நாள்னா என்ன
3 மணி நேரம்னா என்ன.. நடந்திச்சா இல்லையா..
அதனாலே அமித்ஷா ஜி & மோதி ஜி .. எல்லா ஜி
கம்பேனிகளும் குஷி.
2) எப்படியும் சிவசேனாவுக்குத் தான் முதல் மந்திரி
பதவினு சொல்லிட்டேஇருந்தோமில்ல.
இப்போ சிங்கத்தின் கனவு நிறைவேறியாச்சு.
சிங்கமும் சிங்கத்தின் கூட்டமும் ரொம்ப குஷி.
3) நான் தான்யா கிங்க் மேக்கர்.. அப்ப்படினு
சொன்னாரில்ல சரத்பவார் ஜி. அவரும் இந்த
வயசிலேயும் நல்லாதான்யா விளையாண்டிருக்காரு.
அவரும் அவரோட பினாமிகளும் ரொம்ப குஷி.
4) அரசியல் துரோகம். கட்சி உடைந்த து, 
குடும்பமும் உடைஞ்சிப் போச்சு .. 
“யாரைத் தான் நம்புவதோ பேதையின் நெஞ்சம்..”
 என்று சோகப்பாட்டு பாடிக்கொண்டிருந்த தங்கச்சி
சுப்ரிய சுலே வும் அஜித் பவார் போனக் கையோட 
திருப்பி வந்திட்ட தில ரொம்ப குஷி..
சிரிச்ச முகமா ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த
 ஒரு செல்பி போட்டிருந்தாக. அக்கா தங்கைகளும்
குஷி.

5) ப்ரேக் நியுஷ் ப்ரேக் பிரேக் பிரேக் என்று 
காமிராவுடன் ஓடி ஓடி எம்புட்டு பிரேக் நியுஷ்.. 
மீடியாக்காரங்க ரொம்ப
குஷியாத்தான் இருந்தாங்களா இல்லையா..!

6) அவுங்க அவுங்க ஆட்களை 5 ஸ்டார் 7ஸ்டார் 
ஹோட்டலில் தங்கவச்சி அவுங்களை குஷிப் படுத்தி 
தங்கள் தங்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொண்ட தில் 
எல்லா கட்சி தலைவர்களும்
குஷியாயிட்டாங்க. கட்சி எம் எல் ஏக்களும் குஷி..
அவுங்க மட்டுமா..
 ஹோட்டல் காரங்களுக்கும் நல்ல புக்கிங்க். 
ரொம்ப குஷி தான்.

7) காங்கிரசு கை … சத்தமில்லாம .. கெலிச்சிட்டோம்னு
ராகுல்காந்தி குஷியாயிட்டாரு…
(சரவணா.. இதுக்காக அவரு மோதியை கட்டிப்பிடிச்சி 
முத்தம் கொடுத்தாலும் கொடுக்கலாம்! 
அரசியல் முத்தங்களுக்கும் குஷி தான் !)

8) எட்டு எட்டு .. எட்டு.. நம்பர் 8..
அஜித் பவாருக்கு பொங்கு சனிய்யா.. 
சின்ன ஒரு ஆட்டம் ஆடி.. வழக்கில ஜெயிச்சாடிரில்லா. 
ஊழலாவது நீதியாவது ..
சனீஷ்வரா… எங்களைக் காப்பாற்று...
அடடே.. இது யாரு...
ஓட்டுப் போட்ட இளிச்சவாயுனுங்க...

ஒரு சின்ன வேண்டுகோள்..
சிவசேனாவின் தலைவரும் மராட்டிய மா நில
முதல்வரும் மேடையில் பேசும் போது கையை
விரிச்சி விரித்து .. ஒரு போஸ் கொடுப்பார்.
பெரிய தாக்கரேவுக்கு அந்த போஸ் பொருத்தமா
இருந்திச்சி.. இப்ப தான் இந்த மா நிலமே உங்க
கையில வந்தாச்சு..
எதுக்கு அந்தப் பழைய போஸ்ஸுங்கிறேன்!

1 comment:

  1. நல்லா ரசித்து படித்தேன்...

    ReplyDelete