Tuesday, August 6, 2019

காஷ்மீர் 370.. எது வரலாற்று பிழை?

Image result for kashmir 370
எது வரலாற்றுப் பிழை?
காலம் தான் பதில் சொல்லும்.
நேருவின் வரலாற்று தவறு நீங்கிவிட்ட து.
பாரத மாதாக்கி ஜே.. என்று இன்றைய பிரதமர் மோதிஜி அவர்கள் மகிழ்ச்சியுடன் ..
காஷ்மீருக்கு 370 கிடையாது.
இனி காஷ்மீர் இந்திய நடுவண் அரசின் நேரடிப்பார்வையில் யுனியன் டெரிடரியாக… என்று அமித்ஷா அறிவிக்கும் போது
என் காலடி நிலம் அதிர்ந்து அடங்கியது.
ஜன நாயகப் படுகொலை .. என்று எதிர்க்கட்சிகளின் குரல்..
வெற்றுக்கோஷமாக முடங்கிப்போனது உண்மை.
370 சட்டவிதிப்படி காஷ்மீருக்கு கொடுத்திருக்கும் தனி அந்தஸ்து இந்திய வரலாற்றில் நீண்ட நெடிய திருப்பங்களைக் கொண்ட து.
370 ஐ சட்டமேதை அம்பேத்கர் ஆதரிக்கவில்லை என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் அம்பேத்கரின் நேரடி எழுத்திலிருந்து கிடைக்கவில்லை.
1991ல் பிஜேபி பத்திரிகை தருண் பாரத் (an editorial in Tarun Bharat, an RSS mouthpiece, dated 1991 citing the verbal account of Balraj Madhok, an RSS veteran, about Ambedkar – four decades after his death!)
அம்பேத்கர் 370 ஐ எதிர்த்தார் என்று சொல்கிறார்கள்.
ஆனால் 370ஐ அம்பேத்கர் எழுதவில்லை என்பதும்
காஷ்மீருடனும் நேருவுடனும் நெருக்கமானவரும்
சட்ட வரைவுக்குழுவில் இருந்தவருமான கோபாலசாமி அய்யங்கர் அவர்கள் தான் எழுதினார் என்பதும் ஆதாரப்பூர்வமானவை. இந்த ஆதாரத்துடன் பார்க்கும் போது காஷ்மீருக்கு கொடுத்த 370 ஐ அம்பேத்கர் வரவேற்கவில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டி இருக்கிறது. அம்பேத்கர் சொன்னதாக சொல்லப்படும் சொற்றொடர்களை விலக்கினாலும் கூட இந்த முடிவுக்கு மட்டுமே வர வேண்டி இருக்கிறது.
காஷ்மீர் விசயத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுடன் சர்தார் வல்லபாய் படேல் ஒரு விலகல் மனப்பான்மையுடன் இருந்த தையும் காஷ்மீர் நேருவுடன் சம்பந்தப்பட்ட நேரடி பிரச்சனையாக உருவகிக்கப்பட்ட தும், காஷ்மீர் ஒரு தலைவலி என்று படேல் சொன்னதும் இப்படியாக பல்வேறு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.
இனி…..
370 .. இல்லை.
காஷ்மீருக்கு என்று இருந்த தனி சட்டங்கள் ( சட்டப்புத்தகம்) இல்லை. காஷ்மீருக்கு தனிக்கொடி இல்லை. இந்திய சட்டங்கள் அனைத்தும் காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து சிறப்பு விதிவிலக்குகளும் விலக்கப்படுகின்றன.
இதனால்.. காஷ்மீர் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
காஷ்மீர் பொருளாதர வளர்ச்சி அடையும்.
என்று பிஜேபி அரசு சொல்கிறது.
ஒகே. நம்புகிறோம்.
காஷ்மீரில் இனி இந்திய இராணுவத்தின் கெடுபிடி
இருக்காதா,,?
370 ஐ நீக்கியதால் காஷ்மீர் தீவிரவாத அச்சுறுத்தலில்
இருந்து தப்பிக்கும் அல்லது குறையும் வாய்ப்புகள்
என்னவெல்லாம் சாத்தியம்?
என்னமாதிரியான பொருளாதர வளத்தை காஷ்மீருக்கு இந்திய அரசு கொடுக்கப்போகிறது?
இந்தக் கேள்விகள் எழுகின்றன.
இது ஜன நாயகப் படுகொலை என்ற ஒற்றை வார்த்தைக்குள் எதிரணி கூச்சலிடுவதில் அர்த்தமில்லை.
உலக நாடுகளின் வரலாற்றில் ஒவ்வொரு வல்லரசும்
இந்த மாதிரி தான் கலக க்குரல்களை அடக்கிவிடுகின்றன.
வளர்ச்சி, பாதுகாப்பு என்ற பெயரில் இந்த அடக்குமுறை தொடர்கிறது. இந்தியாவும் தன்னை வல்லரசு என்று நிரூபித்துவிட்ட து.
கல்வி பொருளாதாரம் நிம்மதியான வாழ்க்கை ..
இதற்காக காஷ்மீர் மக்கள் தங்கள் தனித்துவத்தை
விலையாக கொடுக்கப் போகிறார்கள். இதற்கு அவர்கள் காரணமில்லை என்றாலும் காஷ்மீர் அரசியல் காரணமாகிவிட்ட து.
காஷ்மீரில் இனி நிலம் வாங்கலாம்.!
வீடு கட்டலாம்..!
நட்சத்திர விடுதிகள் கட்டலாம்!!
தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்..!!
காஷ்மீர் ஆப்பிள்களில் சிலர் தங்கள்
பிராண்ட் முத்திரைகளைக் குத்தலாம்.!!!
காஷ்மீரின் இயற்கை அழகுக்கு
வெளி நாட்டு முதலாளிகள் அள்ளிக்கொடுப்பார்கள் தானே!!!
இந்தியாவின் ஜிடிபி கூட இதனால் அதிகரிக்கும் வாய்ப்புண்டு… 
அடேங்க்கப்பா..
மோதிஜி…
வரலாற்றுப்பிழையை நீக்கியதாக சொல்கின்றீர்கள்..
எது வரலாற்றுப்பிழை என்பதை
காலம் தான் பதில் சொல்லும்.

அகண்ட பாரதக் கனவுகளில்
இமயம் கொஞ்சம் நடுங்கத்தான் செய்கிறது.
டியர் மோதிஜி.. & respected Amith Shah 
வரலாறு உங்களை மறக்காது.
 எங்களையும் தான்.!

No comments:

Post a Comment