Saturday, October 7, 2017

அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு

கருத்துகளைத் தெரிந்து கொள்வது முதல் நிலை.
அடுத்தது தெரிந்ததைப் புரிந்து கொள்வது.
புரிந்தப் பின் ஏற்றுக்கொள்வதும் கடந்துசெல்வதும்.
ஆனால் வாழ்க்கையில் பெரும்பகுதி
 புரிந்து கொள்வதிலேயே கழிகிறது.

அறிந்து கொண்டதும் புரிந்து கொ ண்டதும் 
காலப்போக்கில் அர்த்தமிழந்துவிடுகின்றன.
"அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு "
இப்படி அறிந்து கொண்டதும் புரிந்து கொண்டதும்
இன்று என்னவாக இருக்கிறது ?!!
இந்த முழக்கம் "ஒரு பயங்கரமான அரசியல் மோசடி"
 என்று திரு. சம்பத் அவர்கள் அன்று  சொன்னபோது
அவரைத் துரோகியாக நினைத்ததும் ஒதுக்கியதும்
 நினைவுக்கு வருகிறது.

தமிழ்நாட்டை விட  சிறிய நாடுகள் எல்லாம்
 இன்று சுதந்திரம் பெற்ற தனிநாடாக இருக்கும் போது
 தனித்தமிழ் நாடு ஏன் சாத்தியப்படாது?
 என்று இன்றைய தமிழ்த்தேசியம் கேட்கிறபோது
அந்தக் கருத்தியல் ரீதியான விளக்கத்தில்
அப்படியே உணர்ச்சிப் பொங்க
 நாடி நரம்பெல்லாம் புடைத்து வீங்கி வெடித்து..
மேடை அதிர கை தட்டல் ..
 பேசியவருக்கும் கேட்டவருக்கும் மகிழ்ச்சி. மகிழ்ச்சி.
தமிழ்தேசியம் வாழ்க வளர்க ..
தமிழினப்பற்றை  உறுதி செய்துவிட்ட பெருமிதத்தில்
அன்றைய தினம் .
ஆனால் அம்மாதிரியான தருணங்களில் எல்லாம்
என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது இந்த வசனம்
"அடைந்தால் திராவிடநாடு. இல்லையேல் சுடுகாடு"



3 comments:

  1. தங்களது ஆதங்கம் புரிகிறது சகோ
    த.,ம.1

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவு. பலர் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் தகவல்கள்.
    //அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு "இந்த முழக்கம் "ஒரு பயங்கரமான அரசியல் மோசடி"என்று திரு. சம்பத் அவர்கள் அன்று சொன்னபோது
    அவரைத் துரோகியாக நினைத்ததும் ஒதுக்கியதும் நினைவுக்கு வருகிறது.அந்தக் கருத்தியல் ரீதியான விளக்கத்தில் அப்படியே உணர்ச்சிப் பொங்க நாடி நரம்பெல்லாம் புடைத்து வீங்கி வெடித்து..அதே தந்திரமே தொடர்ந்து நடைபெறுகிறது//

    ReplyDelete
  3. //தமிழ்நாட்டை விட சிறிய நாடுகள் எல்லாம்
    இன்று சுதந்திரம் பெற்ற தனிநாடாக இருக்கும் போது
    தனித்தமிழ் நாடு ஏன் சாத்தியப்படாது?//
    மிகவும் நியாயங்கள் கொண்ட கேள்வி.
    ஆனால் தாங்கள் செய்ய பயந்த ஒன்றை, பரீட்சித்து பார்ப்பதற்காக பக்கத்தில் சுண்டைகாய் அளவுகொண்ட இலங்கை நாட்டில், அங்கே வாழும் மிகவும் சிறிய ஜனத்தொகை கொண்ட தமிழர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி யுத்தம் செய்ய வைத்து, இப்போது இலங்கையில் எனது இனம் அழிக்கபட்ட போது என்று நாடக வசனம் பேசுவது மிகவும் பெரிய அயோக்கிதனம்.

    ReplyDelete