Tuesday, September 19, 2017

"நீட் அனிதா" போஸ்டர்களுடன் அலைந்து கொண்டிருக்கிறோம்

"நீட் அனிதா" போஸ்டர்களுடன் அலைந்து கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இரண்டு தமிழ்நாடு இருக்குங்கேன்.
ஒன்று செந்தமிழ்நாடு.. இதில் தமிழ் தவிர மற்றவை அனைத்தும்
சீரும் சிறப்புமாக இருக்கும்.
கட்டணம் கட்டி அனைத்து வசதிகளுடனும் இளைய சமுதாயம்
தன்னை நுழைவு/போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளும்.
இன்னோரு கொடுந்தமிழ் நாடு. இந்த மக்களிடம் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும்.
ஆனால் அவர்கள் செத்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி என்ற பெயரில்
தரமில்லாத கல்வியும் மனப்பாடக் கல்வியும் கற்பிக்கப்படும்.
அவர்களுக்கு நுழைவு/போட்டித் தேர்வுகள் தேவையில்லை
என்று மாநில அரசும் மத்திய அரசும் தீர்மானித்து விட்டது.
நமக்கும் அவர்களைப் பற்றி கவலை இருந்ததே இல்லை.
ஆனால்  நம்ம பிள்ளைக அனைத்து வசதிகளுடன் இருக்கும்
 பள்ளிக்கு பெருந்தொகையை கட்டணமாகக் கட்டி
பொறந்து அம்மானு சொல்றதுக்கு
முன்பே நுழைவு/போட்டித் தேர்வுக்கு தயாராக்கும்
வித்தையை செய்யும் மந்திரக்கோலை எப்படியும்
வாங்கி விடுகிறோம். நமக்கு இதில் வெட்கமில்லை.
இப்போது ... நம்மைப் போராளிகள் என்று காட்டிக் கொள்வதற்காக
"நீட் அனிதா " போஸ்டர்களுடன் அலைகிறோம்.

1976ல் நெருக்கடி நிலைமை காலத்தில் கல்வி
மாநிலப்பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு
வந்தப் போது நமக்கு அதைப் பற்றி கவலைப்பட நேரமில்லை.
மாநில சுயாட்சி பேசிய அரசியல் கட்சிகளுக்கு மாநிலங்களின் இறையாண்மையை, மாநில மக்களின் உரிமையை
மத்திய அரசு தன் அதிகாரத்திற்குள் கொண்டு வருகிறது
என்ற துளி அளவு கூட சலனம் ஏற்படவில்லை!

கல்வியைத் தனியார்வசம் ஒப்படைப்பதை நியாயப்படுத்தும் வகையில்
ராஜீவ் காந்தி அரசு 1986-ல் ‘அரசே கல்விச் சுமையை ஏற்க முடியாது.
தனிநபர்களும் பங்கேற்கும் வண்ணம் உயர்கல்வி நிறுவனங்களை
உருவாக்குவதே அரசின் லட்சியம்’ என்ற புதிய கல்வி கொள்கையைக் கொண்டுவந்தப் போது
நம் பொதுவுடமை தோழர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை!

அரசு நடத்தும் பள்ளிகளில் 1400 பெண்கள் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை.
4000 ஆண்கள் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை.
40% பள்ளிகளில் மேற்கூரை இல்லை
77% பள்ளிகளில் பயிற்சிக்கூடங்கள், அதாவது லேப்ஸ் , மற்றும் கணினி வசதிகள் இல்லை.
2000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 20 மாணவர்களுக்கும் குறைவாகவே இருக்கிறார்கள்.
பல பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் 1600 அரசாங்கப் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.
 இதே வேகத்தில் போனால் வரும் 3 ஆண்டுகளுக்குள்
 2000க்கும் மேற்பட்ட அரசாங்கப் பள்ளிகளுக்கு மூடுவிழா
 நடக்கப்போகிறது.
இவ்வளவும் நடந்தப் போது நம் சமூகத்தில்
 எந்தச் சலனமும் ஏற்படவில்லை.

இப்போது நாம் "நீட் அனிதா" போஸ்டர்களுடன் அலைந்து கொண்டிருக்கிறோம்.




8 comments:

  1. உண்மைதான். குறிக்கோளற்ற, உணர்ச்சி வசப்பட்ட மக்களின் போராட்டங்கள்.

    ReplyDelete
  2. படிச்சிருந்தானே வேல கேட்பாங்க...போஸ்டர்களுடன் அலைவாங்க.... படிக்காம விட்டா வெறுங்ககையும் காலுமாக இருப்பாங்க.....

    ReplyDelete
  3. இந்த அலைச்சல் வீண்ணாகாது!

    ReplyDelete
    Replies
    1. வீணாகவில்லை என்றால் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அரசியல் கட்சிகள் முதல் தனி நபர்கள் வரை இப்பிரச்சனைகள் அவரவர் சுயலாபங்களுக்காவே பேசப்படுகின்றன. வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  4. சரியான பதிவு.
    //கல்வியைத் தனியார்வசம் ஒப்படைப்பதை நியாயப்படுத்தும் வகையில்
    ராஜீவ் காந்தி அரசு 1986-ல் ‘அரசே கல்விச் சுமையை ஏற்க முடியாது.
    தனிநபர்களும் பங்கேற்கும் வண்ணம் உயர்கல்வி நிறுவனங்களை
    உருவாக்குவதே அரசின் லட்சியம்’ என்ற புதிய கல்வி கொள்கையைக் கொண்டுவந்தப் போது
    நம் பொதுவுடமை தோழர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை!//
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete