Friday, September 8, 2017

பா.ரஞ்சித் VS அமீர்

Image result for பா ரஞ்சித் அமீர்

பா. ரஞ்சித் சொன்னதற்கு அக்கூட்டத்தில் இருந்த 
அமீர் சொன்னதை  ஏன் அனைவரும் "மோதல்" என்று சொல்லி 
இருவரையும் எதிரெதிர் திசையில் நிறுத்துகிறார்கள் ? 
அனிதாவை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடையாளமாகவும்
 தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தே 
சமூக நீதிக்கான தற்கொலைகள் தொடர்கின்றன 
என்ற நிதர்சனமான உண்மையை ரஞ்சித் பேசியது நியாயமானது
அவருடைய அனுபவத்திலிருந்தும் காயங்களிலிருந்தும்
 வெளிவந்த வார்த்தைகள் அவை.
 அதே நேரத்தில் அதைக் கேட்டுக்கொண்டிருந்த அமீர்
அனிதா ஒரு சாதியின் அடையாளம் மட்டுமல்ல, 
அவள் தமிழ்ச்சமூகத்தின் அடையாளம் என்று சொன்னது
இன்றைய அரசியல் சூழ்நிலையில் ,  அத்தருணத்தில்
 மிகவும் சரியான பார்வை. 
அப்படி அமீர் சொல்லி இருக்கவில்லை என்றால் தான்
 அது வருத்தத்திற்குரியது. 
தமிழ்ச் சாதி வெட்கப்பட  வேண்டியது.
ரஞ்சித் , அமீர்... இருவேறு துருவங்கள் அல்ல.
உயிருடன் வாழும் போதே அனிதாக்களுக்கு
சாதி அடையாளங்கள் ஒழிந்து 

தமிழச்சி என்ற அடையாளம் கொடுக்கப்பட வேண்டும். 
அதுமட்டுமே
ரஞ்சித் , அமீர் குரலுக்கான பாதையாக இருக்கும்.

 இருக்க வேண்டும் ..

4 comments:

  1. பா.ரஞ்சித் VS அமீர்..மோதலாகத்தான் வெளியே பரவிக் கொண்டு இருக்கிறது...

    ReplyDelete
  2. //..சாதி அடையாளங்கள் ஒழிந்து
    தமிழச்சி என்ற அடையாளம் கொடுக்கப்பட வேண்டும்.//
    மாற்று கருத்து கிடையாது.எங்கே வந்தது ஜாதி? ரஞ்சித் ஒரு ஜாதிபற்றாளராக இருப்பார் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  3. அனிதா ஜாதியினால் பாதிக்கப் படவில்லை ,சமூக அநீதியால் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதுதானே உண்மை ?

    ReplyDelete
  4. நீங்க என்ன ஆளுங்க என்ற கேள்விக்கு, நாங்க தமிழன் என்று பதில் சொல்லும் காலம் உருவாகாத வரை இது மாதிரியான குழப்பங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்.

    ReplyDelete