அமெரிக்க அதிபர் ஓபாமாவின் ஜப்பான் ஹிரோசிமா பயணம்
உலக அரங்கில் அதிர்ச்சி கலந்த ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டது.
71 வருடங்களுக்கு முன் இரண்டாம் உலகப்போரின் எந்த மண்ணில்
அமெரிக்க போர்விமானம் அணுகுண்டு போட்டு (ஆக 6, 1945 காலை 8.30
மணியளவில்) இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்ததோ
அந்த மண்ணில் அதே நினைவிடத்தில் ஓபாமா பேசினார்.
அதிலும் குறிப்பாக அணுகுண்டு வீசியதில் தப்பித்து இன்று
உயிருடன் வாழும் ஜப்பானியர்களையும் (மே, 27)சந்தித்தார்.
நெகிழ்வாக இருந்தது அக்காட்சிகள்.
வருத்தப்பட்டாரே தவிர தங்கள் போர்விமான தாக்குதலுக்காக
ஒபாமா மன்னிப்பு கேட்கவில்லை! அதை ஜப்பானியர்கள் எதிர்பார்க்கவும்
இல்லை என்பது கூடுதல் தகவல்.
At Hiroshima Memorial, Obama Says Nuclear Arms Require ‘Moral Revolution’
Obama in Hiroshima calls for 'world without nuclear weapons'
ஓபாமா ஜப்பான் மண்ணில் "அணு ஆயுதங்களில்லாத
உலகம் " பற்றி பேசியது கேட்க நன்றாக இருந்தாலும்
பெரிய அண்ணன் , ஆயுத விற்பனை அதிகாரி,
அமெரிக்க அதிபர் அதைப் பற்றி பேசும்போது
நெருடலாக இருக்கிறது.
No comments:
Post a Comment