சகலமும் நொறுங்கிய புள்ளியில்
உன் அவதாரம்
என்னில் ஜனித்தது.
வெறுமையிலிருந்து
நீ வெளியில் வந்தாய்
என்னையும் சேர்த்து
இழுத்துக்கொண்டு.
நான் யாரென்று
அறியாத பயணத்தில்
நீ
வெறும் கற்பனையோ
என் கனவுகளில்
பச்சைப்பாவாடையில்
பக்கத்தில் ஓடிவந்த
அவளோ?
அவள் பிம்பமோ?
யாரென்று
நான் சொல்ல?
விழிகள் திறந்துவிட்டால்
விளையாடும் மேகங்கள்
களைந்துப் போய்விடுமோ?
அச்சத்தில்
கண்மூடிக்கிடக்கின்றன
விடிவெள்ளிகள்.
விழித்திருப்பதாக
இதுவரை ஆடிய
ஆட்டம்
தோற்றுப்போனது.
இரவு விழிகள்
களவாடியக் கனவுகள்
இன்னும் தூங்கவில்லை
விழித்திருக்கின்றன
எனக்காக.
ரசிக்க வைக்கும் கற்பனை...
ReplyDeleteஇரவு விழிகள்
ReplyDeleteகளவாடியக் கனவுகள்
இன்னும் தூங்கவில்லை
விழித்திருக்கின்றன
எனக்காக
இரவு விழிகள் களவாடிய கனவுகள் ..அழகான கவிதை
அழகான கவிதை.படித்து ரசித்தேன். வளரும் கவிதை வலைப்பக்கத்தின் மூலம் எனது முதல் வருகை. இனி தொடர்வேன்.
ReplyDelete