நான் நாடகம் எழுதினேன்
ரசித்தவர்கள் என்னை நடிக்க வைத்தார்கள்
நடிப்பு ஒரு அற்புதமான கலை
ஒப்புக்கொண்டேன்.
வசனங்கள் மனப்பாடம் ஆனது.
ஒத்திகைகள் தேவையில்லை
மேடை ஏறிய தருணங்களில்
நாக்குகள் கீரிடங்களாக
ஒளிவட்டங்களாக
தலையைச் சுற்றி
ஓடிக்கொண்டிருந்தன.
திரைவிலகிய நேரம்
ஒப்பனைகள்
கர்த்தாக்களைக் கொலை செய்தன.
நிஜங்கள் நிழல்களின் ராஜ்யத்தில்
அடிமைகளாக இருந்ததை
உணர்ந்த தருணம் அது.
சாத்தான்கள் வேதம் ஓதலாம்
வேதங்களே சாத்தான் ஆகலாமா?
சிலுவையைச் சுமந்தபடி
ரத்தக்கறையுடன்
தொடரும் பயணத்தில்
பாவமன்னிப்புகள்
மறுக்கப்பட்டன.
சுயம் காயடிக்கப்பட்டது.
இந்தக் கல்லறையிலிருந்து
மீண்டும் விழித்தெழ
அந்த தேவனின் ராஜ்யம்
"பரிசுத்தப்படுவதாக"
ஆமென்.
true feeling ...
ReplyDeleteI too experienced the same several times...
nothing to do ..
just watch and allow it to
go from our conscience..
Now "feminism" also in the hands of the society makers..
we have to be cautious ..
feminism should not be an other man made disaster..
Meera Neem
நல்ல சிந்தனை .வாழ்த்துக்கள்.விஜய் டிவி யில்பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை பதிவு செய்த விதம் அருமையாக இருந்தது.நன்றி.
ReplyDeleteஒத்திகைகள் தேவையில்லை
ReplyDeleteமேடை ஏறிய தருணங்களில்
நாக்குகள் கீரிடங்களாக
ஒளிவட்டங்களாக
தலையைச் சுற்றி
ஓடிக்கொண்டிருந்த
வேதங்கள் பல நேரங்களில் சாத்தான்கள் தானே ?