Saturday, June 8, 2013

மவுனவெளி

 என் ஆகாயத்திளிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக
கருமேகங்கள்  களவாடப்பட்டன.

என் தோட்டத்திலிருந்து
பறித்துவந்த
பச்சையங்க்களை
குரோட்டன்ஸ் இலைகள்
பூசிக்கொண்டன

ஈரம் கசிந்த என் பூமி
வெப்பத்தால் வெடித்து
வாய்ப்பிள ந்து கிடந்தது.

இதழ்கள் உதிர்ந்த
பூவின் காம்புகளாய்
கவிழ்ந்த முலைகள்
தேனீக்களின்
ரீங்க்காரமில்லாத
தோட்டம்.
மவுனத்தால் நிரம்பி
மரணம் தழுவிக்கிடந்தது

நிகழ்காலம் எங்கும்
கடந்த கால நினைவுகள்
வருங்காலத்தை
தனிமைத் தின்று
துப்பிய படுக்கையில்
தூ ளி யென  அசைந்தது
உடல்

காலமெல்லாம்
கனவுகளில் எட்டிப்பார்த்த
பரமாத்மா
மெதுவாக அருகில் வந்து
முத்தமிட்டதோ?
சப்தமின்றி அடங்கிப்போனது
வீடு.




1 comment:

  1. shanthadut​t writer hyderabad 18-06-2013
    To: puthiyamaadhavi sankaran

    அன்பிற்குரிய தோழி..

    நலமா? இவ் வாரத் திண்ணையில் " மாயக்குகை " வாசித்தேன். உண்மையாகவே மாயம் நிறைந்த கவிதைதான். வெகு நேர்த்தியான இறுக்கமான கட்டமைப்பு! மேலோட்ட வாசிப்பில் ஏதும் புரியாமல் மீண்டும் உள்ளார்ந்து சென்றபின் பல விளக்கங்கள் முன் வைக்கும் செறிவார்ந்த இருள் கவிதை!

    வாழ்க்கை என்ன சொல்கிறது? புதிதாய் தகவல்கள் உண்டா பகிர்ந்துகொள்ள?

    ReplyDelete