Friday, December 30, 2011

சந்திப்பின் வலி



சந்திப்பின் வலி
---------------------

உன்னைச் சந்திக்கத் துடித்த
கனவு வசப்பட்ட தருணம்.
மவுனம் கனமானது.
என்னை நேசித்த நீயும்
நீயே பிரபஞ்சமாக இருந்த நானும்
நாம் தொலைந்துபோனதை
உணர்ந்து கொண்ட அந்த தருணம்
நம் பிரிவின் வலியைவிட
கொடுமையானது.
நரை விழுந்து
முகம் கருத்து
இளமை விடைபெற்றுக்கொண்டிருக்கும்
இந்த நாட்களில்
சிட்டுக்குருவிகளாய்த் திரிந்த நாட்கள்
நேற்றைய கனவுகளாய்
நம் முன்.
நம் இமைகளை அழுத்தும் பாரமாய்
----


1 comment:

  1. பிரிவின் வலியைப் பற்றி பற்பல கவிதைகளைப்படைத்தும் படித்தும் இருக்கிறேன்.
    இந்த சந்திப்பின் வலி “சுரீர்” என்று எங்கேயோ சுடுகிறதே!
    தன்வலியை என் வலியாக மாற்றுவதுதான் கவிதையா?
    அல்லது -
    தனிவலியைப் பொதுவலியாக
    மாற்றுவதா?
    ஆக வலி வலிமையானதுதான்.
    நா.முத்து நிலவன்,
    புதுக்கோட்டை

    ReplyDelete