தமிழ் தேசியமும் திராவிட அரசியலும் என்ற தலைப்பில் எழுதியதை வாசித்த
எனதருமை தோழி சொல்கிறார்:
என்னப்பா இது... திராவிடம் அது இது என்று பேசிக்கொண்டு...
திராவிடம் என்ற சொல்லே இப்போது அருங்காட்சியகத்தில்
வைக்கப்படும் பொருளாகிவிட்டது என்றார்.
அவர் நிறைய படித்தவர். திராவிட அரசியல் தெரிந்தவர்.
ஊடகவியலார்.
அவர் சொன்னதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். இறுதியாக
நான் அவரிடம் ஒரே ஒரு கேள்வியைத் தான் வைத்தேன்.
இருக்கட்டும் நீங்கள் சொல்கிற படியே இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
அப்படியானால் எதுக்காக எங்க தமிழ்நாட்டில் அரசியல் கடை திறக்கறவன்
எல்லாம் திராவிடன்ங்கற சொல்லை வால் மாதிரி ஒட்ட வச்சிக்கிட்டு
கடை விரிக்கிறான்... இந்தக் கடையை ஆந்திராவில், கர்நாடகத்தில்,
ஏன் கேரளாவில் போய் விரிச்சி பார்க்கச் சொல்லுங்க.. அங்கே வாலை
ஒட்ட நறுக்கிடுவான்கிற பயமா? தமிழன்னா என்ன கேணப்பசங்கனு
நினைச்சுங்கீளா?னு ..................(எடிட் எடிட் எடிட் திருநெல்வேலி கெட்ட
வார்த்தைகள்.......!!!!)
அட இதுக்குப் போயி இவ்வளவு ஆத்திரப் படுவீங்கனு நினைக்கலியேனு
சொன்னார்கள்...
ஆமாம்... இதற்கெல்லாம் ஆத்திரப் படாமல் வேறு எதற்கு ஆத்திரப்படுவதாம்?
........................ரவுத்திரம் பழகு...
..உங்களுக்குள்ளும் இந்த கருத்து இல்லையா. இன்றைய சூழலில் திராவிடம் என்றால் என்ன? திராவிடம் ,தமிழிடம் என்ற சொல்லின் மாறிய ஓசை என்றால் இந்த கட்சிகளை ஏற்றுகொள்கிறேன்
ReplyDelete(இன்றைய நிலையில் தமிழ் என்பது வெறும் மொழியை குறிப்பதாக சுருங்கி விட்டது ) .
தமிழிடம் அன்று ஒரே கலாச்சாரத்தை (உணவு பழக்க வழக்கங்கள் , உடை ரீதிகள், ஆச்சாரங்கள் ,நம்பிக்கைகள் ,சமூக நீதியை சார்ந்த வாழ்வமைப்பு வரைக்கும் )பண்பாட்டை குறிக்கும் வார்த்தையாக இருந்தது என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வதை புறகணிக்கவும் முடியவில்லை . அப்படிப்பட்ட ஒரு தமிழிடம் அல்லது ஒரு இனம் தான் திராவிடம் என்ற சொல்லுக்குள் இருந்திருக்கிறது என்றால் திராவிடம் இன்று அருங்காட்சியகத்தில் தானே உள்ளது.. அங்கும் அது உள்ளதா என்ற ஒரு கேள்வி தான் நீங்கள் சொன்ன அரசியல் கட்சி கடை தொடங்கியவர்களின் செயல்களின் வழியாக சந்தேகத்துடன் கேட்க தோன்றுகிறது..
உங்கள கோபம் அதனாலேயே நியாயமாக இல்லை..
இந்த திராவிட இனம் மொழிவாரியாக தந்திரமாக பிரிக்கப்பட்டு யாருக்காகவோ பல சமூகங்களாக மாறி வாழ்கிறார்கள் உலக வியாபர சந்தையில் நடக்கும் போட்டிகளுக்கு எந்த விதமான தடைகளும் இருக்க கூடாது என்று வாதிடுபவர்களுக்கு கிடைத்த மிக பெரிய விஞ்ஞான விளக்கம் தான் "சோஷியல் டார்வினிஸம்" . இந்த விளக்கத்தை டார்வினால் கூட ஏற்றுகொள்ள முடியாதது. இங்கேயும் அதன் பலன் தான் நாம் பார்க்கிறோம். திராவிடம் பொருளற்று ஒரு பழைய பொருளாக
இதில் நான் பெரியார்யிடம் ஒத்துப்போகிறேன்.
ReplyDeleteஎதிரி யார் என தெரிந்து கொண்டு, அவனிடம் இருந்து தனித்து காட்டுவதே திரவிடம்.
பாப்பான் பூரம் ஏன் திராவிடத்துக்கு எதிர நிக்கிறான்ற கேள்வியில இருக்கு திராவிடம்..
இதர மாநிலத்துல இன்னும் எதிரியாருன்னு கூட தெரியல...அதுனால தான் திராவிடம் இல்லை...