Thursday, August 5, 2010

மும்பையின் டோபி க்காட் (DHOBY GHAT)




இப்போதெல்லாம் நான் இஸ்திரிக்குப் போட்ட காட்டன் புடவை கிழிந்திருந்தால்கோபப்படுவதில்லை. ஏன் ட்ரை க்ளீனிங் போட்ட ஃபேப் இண்டியா காட்டன்சுடிதாரை எங்கள் இஸ்திரி சாச்சா தொலைத்துவிட்டு வந்து நின்றாலும்என் ஃபிரஷர் கூடுவதில்லை! இதற்காக எல்லாம் எந்த தியானமும் நான்செய்யவில்லை. நான் செய்ததெல்லாம் எங்க ஊரு டோபிக்காட் பற்றியஒரு வெளிநாட்டுக்காரர் புத்தகத்தைப் படித்துவிட்டு..'அடடா.. நம்ம மும்பையிலே இருக்கும் இந்த இடத்தைப் பற்றி நாமதெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே' என்று நொந்துப்போய் அந்தஇடத்திற்கே நேரில் சென்று பார்த்ததால் வந்த ஞானோதயம் தான்.( உள்ளே நுழைய முடியவில்லை. மேம்பாலத்திலிருந்து பார்த்தது தான்.ஆ.. ஊ.. என்று வரிந்துக் கட்டிக்கொண்டு உழைப்பாளர்கள் குறித்து பேசும்-எழுதும்- என் முகம் டோபிக்கட்டில் வெளுத்துப் போனது இன்னொருஉண்மை!)
துணி துவைப்பது குறித்து வாஷிங் மெஷின் , சலவைக்கட்டிகள், சலவைத்தூள்கள்என்று நம் வீட்டு தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் விளம்பரங்கள் எல்லாம்துணிதுவைப்பது என்னவொ பூ பறிப்பது மாதிரி காட்டுகின்றன. ஆனால் இவர்களில் யாருமே இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களைப்பற்றி எதுவும் மூச்சு விடுவதில்லை.
உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி துணிச்சலவை இடம் மும்பையின்டோபிக்கட் தான் என்கிறார்கள் வெளிநாட்டு எழுத்தாளர்கள்.பிரிட்டிஷ் ஆட்சியில் படைவீரர்களின் சீருடையை வெளுப்பதற்கு இந்த இடத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். குடிசைப் பகுதியான இந்தகுடியிருப்புகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த தொழிலையேதலைமுறை தலைமுறையாய் செய்து வருகிறார்கள். 700 துணிதுவைக்கும்தொட்டிகளும் துணிகளை அடித்துத் துவைக்கும் கல்மேடைகளும் இருக்கின்றன.ஒரே நேரத்தில் அத்தனைப் பேரும் துணிகளைக் கல்மேடையில் அடித்துத்துவைக்கும் காட்சியும் அந்த ஓசையும் நம்மை என்னவொ செய்யும்!என் அன்புத்தோழி அ.மங்கை இந்த துணிதுவைக்கும் ஓசைகளின்பின்புலத்தில் "வெள்ளாவி" என்ற நாடகத்தை இயக்கி இருக்கிறார்.
மும்பையில் மகாலட்சுமிக்கு அருகில் மேம்பாலத்திலிருந்து பார்த்தால்டோபிக்காட் தெரியும்.பொதுவாக எல்லோருமே அங்கிருந்து தான் பார்த்துவிட்டு வருவார்கள்.மும்பையில் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் ஓரிடம். மும்பை டாக்ஸிடிரைவர் எல்லோருக்கும் டோபிக்கட் என்றால் தெரியும். சரியாயப் பயணிகளைக்கொண்டு விட்டுவிடுவார்கள். நம்மவர்கள்தான் மும்பை வந்தால் கேட் வே ஆஃப் இந்தியாவும் தாஜ் ஹோட்டலும் பார்த்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.
என் வீடு தேடி வந்து துணிகளை வாங்கிச்செல்லும் இஸ்திரி சாச்சாவுக்குப்பின்னால் ஒரு பெரிய குழுவே இருக்கிறது.இஸ்திரி சாச்சா துணி வாங்கிச்செல்வார்.அதன்பின் துணிகளில் சில குறியீடுகள் இடப்படும்.அந்தக் குறியீடுகள் அவர் அனுப்பும் துணிகள் என்பதற்கான "பார்கோட்".டோபிக்காட்டுக்கு துணிகள் அனுப்பப்படும். அங்கே துணிகள் தரத்திற்குஏற்ப பிரிக்கப்பட்டு துவைக்கப்பட்டு, கஞ்சிப் போட்டு காயப்போட்டு இஸ்திரி ஆகியோ/ இஸ்திரி செய்யாமலோ துணிகள் அந்தந்த இடத்திற்குஅனுப்பப்படும். வந்த துணிகளை பில்டிங், வீட்டு எண் அடையாளத்துடன்நம்மிடம் வாங்கிய இஸ்திரி சாச்சா நம் வீட்டில் வந்து கொடுப்பார்.ஒரு நாளைக்கு டோபிக்காட் வெளுக்கும் துணிகள் குறைந்தது5 இலட்சம் இருக்கும்! எம்மாடியோவ்! இந்த 5 இலட்சத்தில் நம் துணி நம்மிடம் வருவது எப்போதாவதுமிஸ் ஆனால் அது ஒன்றும் ஆயுள்தண்டனைக்கான குற்றமில்லையே!துணிதுவைக்கும் இவர்கள் துணிகளில் இடும் அடையாளக்குறிகள்உலகப் புகழ் பெற்றவை. மும்பையின் டோபிக்காட் , டப்பாவாலாஅடையாளக்குறிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும் ஆய்வு செய்வதிலும்வெளிநாட்டு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். வெளிநாட்டுபயணிகளின் பயணக்குறிப்பு புத்தகங்கள்தான் இந்த உலகம் போற்றும்திறமையை வெளிக்கொணர்ந்தன.






தமிழ்நாடு


-------------





தமிழ்நாட்டில் வெள்ளாவி எப்படி இருக்கிறது? சென்னையில் இன்றும் பழையவண்ணாரப்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை என்ற பெயர்கள் சாட்சிகளாகஇருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் வைகை நதிக்கரையில் வாழும்5000 சலவைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் தான் இவர்கள் அதிகம்வாழும் பகுதியாக இருக்கிறது. இவர்கள் குறித்த ஆய்வுகளும் பதிவுச்செய்யப்பட்டுள்ளன.நதிநீரை நம்பி மட்டுமே தங்கள் தொழிலைத் தொடர முடியாததால் வண்டையூரில்இவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் கிணறு வெட்டி வெள்ளாவி அடுப்பு வைத்துதொழில் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் உடல் உழைப்பு சார்ந்த75% வேலைகளைப் பெண்கள் தான் செய்கிறார்கள்.ஆண்கள் இஸ்திரி போடுவதும்துணிகளை வாங்கிவருவதும் கொடுப்பதுமான வேலைகளையே அதிகம் செய்வதாகதெரிகிறது.வெள்ளாவி என்பது உவர்மண்ணுடன் கலந்து துணிகளை நீராவியில் சூடுபண்ணும் முறை. மார்க்கிங் இங்க் பவுடரை க்காஸ்டிக் சோடாவுடம் கலந்துசூடு பண்ணி குளிர வைத்து காற்றுப்புகமுடியாத பாட்டிலில் அடைத்து வைத்துதங்களுக்கான அடையாளக்குறியீடு மையைத் தயாரித்துக் கொள்கிறார்கள்.ஜவ்வரிசையை பவுடராக்கி ஸ்டார்ச் பவுடரையும் தயாரித்துக் கொள்கிறார்கள்.





வரலாறு/புராண செய்திகள்


-----------------------------


*சிதம்பரத்தில் கிடைத்திருக்கும் செப்புத்தகடு தான் இவர்களைப் பற்றியமிகச்சிறந்த வரலாற்று ஆவணமாக இருக்கிறது. கிருஷ்ணதேவராயர்சிதம்பர நடராஜ பகவான் தரிசனத்திற்காக வந்தப் போது இவர்கள் வாழ்க்கையைக் கண்டு இவர்களுக்கு குடியிருப்பு நிலம் வழங்கஆணையிட்டார். இவர்களுக்கு உதவுவது என்பது கங்கையில் புனிதநீராடிய புண்ணியத்தைக் கொடுக்கும் என்கிறது இன்னொரு செப்பேடு.


*சிவபுராணத்தில் தக்கனின் யாகத்தை அழித்த வீரபத்திரனின் ஆடையில் இரத்தக் கறைகள் இருந்ததாம். அதைச் சலவைச் செய்ய தன் மார்பிலிருந்துஉருவாக்கியர்கள் தான் சலவைத் தொழிலாளர்கள் என்கிறது கதை.64 நாயன்மார்களில் ஒருவரான 'திருக்குறிப்பு தொண்டர்' இச்சமூகத்தைச்சார்ந்தவர்.


* மாரியம்மன் விழாக்களிலோ இன்றும் இவர்களிடமிருந்து அரிசி வாங்கித்தான்பிரசாதம் படைக்கிறார்கள். காப்புக்கட்டுவதும் இச்சமூகத்தைச் சார்ந்தவருக்குத்தான்.இவை அனைத்தும் மாரியம்மனிடம் இவர்களுக்கான உரிமையைக் காட்டுவதாகச்சமூகவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.


*மாரியம்மன் கதைப்படி பரசுராமனின் அப்பா கவுசிக முனி தன் மனைவிக்குகொடுத்த தண்டனை இது. பரசுராமனின் தாய் ஆற்றுமணலில் குடம் செய்துமுனிவரின் பூசைக்கு நீரெடுத்து வருவாராம். ஒருநாள் அப்படி நீரெடுக்கும் போதுசூரியனின் அழகில் கொஞ்சம் மயங்கிவிட குடம் உடைகிறது. பெண்ணின் கற்புபுனிதம் சிதைந்துவிடுகிறதாம்!! கவுசிக முனி இதை அறிந்தவுடன் கோபத்தில்மகனுக்கு ஆணையிடுகிறார். தாயின் தலையைச் சீவ. அந்தத் தாய் ஓடுகிறாள்.ஒரு துணிவெளுப்பவரின் இல்லத்தில் ஒளிந்து கொள்கிறாள். அதை அறியாதஅவன் மனைவி பரசுராமனிடம் அவள் தன் வீட்டில் இல்லை என்கிறாள்.கோபத்தில் வாளை எடுத்து மிரட்டுகிறான். ஒளிந்திருக்கும் தாய் ஓடி வருகிறாள்.இருவரின் தலையையும் வாளால் சீவி வீசுகிறான். மகன் தன் ஆணையை நிறைவேற்றியதால் மகிழ்ந்த கவுசிக முனி மகனுக்குஎன்ன வரம் வேண்டும் என்று கேட்ட 'பெற்ற தாய்க்கு உயிர்ப்பிச்சைக் கேட்கிறான்மகன்." கவுசிக முனி வரம் வழங்க ஓடிப் போய் தலையை ஓட்ட வைக்கும் போதுபதற்றத்தில் தலைகளை மாற்றி வைத்துவிட... விளைவு..?பரசுராமனின் மனைவி தலை + துணிவெளுக்கும் பெண்ணின் உடல் =மாரியம்மன்


* ரங்கநாதப்பெருமாளைத் தேடிக்கொடுத்தவர்கள் இவர்கள் என்ற வரலாற்று/புராணமும் உண்டு. திப்புசுல்தான் திருச்சியில் ரங்கநாதப் பெருமாள் சிலையைஎடுத்துச் செல்ல பக்தர்கள் கவலைத் தீர்க்க முன்வந்த சலவைத் தொழிலாளிதிப்புவின் அந்தப்புரத்தில் திப்புவின் மகள் ரெங்கநாதப்பெருமாள் சிலையைபொம்மையாக்கி விளையாண்டுக்கொண்டிருப்பதை அந்தப்புரத்திலிருந்துசலவைக்கு வந்த துணியின் சுகந்த நறுமணத்தின் மூலம் கண்டறிந்துபின் மீட்டார்களாம்!
இந்தக் கதைகள் செய்திகள் ஒரு தகவலுக்குத்தான்.


.சலவைத்தொழிலாளர்களிடம் இருக்கும் டீம் ஓர்க், டைம் மேனேஜ்மெண்ட்,கஸ்டமர் சர்வீஸ், சங்கிலித் தொடர்புகள் இவைகளுக்கெல்லாம் ஆதரமாய்அவர்களே உருவாக்கி வழக்கில் இன்றுவரை மிகவும் திறமையுடன்கையாளும் குறியீட்டு முறை! இதைப் பற்றி எல்லாம் என்றைக்காவதுநாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமோ?உடல் சார்ந்த உழைப்பும் அந்த உழைப்பில் புதைந்திருக்கும் அறிவுக்கொடையும்நமக்கு ஏன் தீண்டாமையாக அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது?
இப்போதெல்லாம் எனக்கு எங்கள் இஸ்திரி மீசைக்கார சாச்சாஒரு கணினி ப்ரோகிராமருக்கு ஒப்பானவராக தெரிகிறார்.....உங்களுக்கு?


7 comments:

  1. பிரமிப்பை தரும் விசயங்கள்... பதிவாக்கித் தந்த உங்கள் உழைப்பிற்கும், அவர்களைப் பற்றிய கரிசனத்திற்கும் எனது வந்தனங்கள்.

    ReplyDelete
  2. மும்பை உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினரின் வாழ்க்கை சித்திரத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. டப்பாவாலாக்களைப்பத்தி டீவியில் காமிக்கிறதுபாத்தேன் ஆச்சரியமான விசயம்.. வெளியூரிலிருந்து ப்ரப்லங்கள் வந்தா டப்பாவாலாக்களைப் பாக்கறாங்கன்னா ..என்ன ஒரு டீம் ஒர்க் ..பாராட்டப்படவேண்டியவங்க.. அதே மாதிரி இந்த விசயமும் .. நல்லா சொல்லி இருக்கீங்க.. அவங்களோட அந்த திறமையை அறிவுக்கொடை ந்னு சொன்னீங்க அருமை.. மாதவி

    ReplyDelete
  4. தெகாவின் வார்த்தைகளை வழிமொழிகிறேன்.வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
  5. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் நான் என்னுடைய கிராமத்தில் துணிகளை சலவைக்குப்போட்டுவிட்டு அவர்களுடைய இல்லத்திற்குச்சென்று கேட்டபோது எங்கள் வீட்டுத்துணிகளை அவ்வளவு பெரியக்குவியலில் ஒரு குறியீடை வைத்து எடுத்துக்கொடுத்தார்கள். அப்பபோது நான் வியந்திருக்கிறேன் சுமார் ஆயிரம் குடும்பங்கள் உள்ள ஊரில் எப்படி ஒவ்வொரு குடும்பக்குறியீடையும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள் என்று!
    அதனை பார்கோடுடன் ஒப்பிட்டக்கூறியிருப்பது உண்மைதான்.

    ReplyDelete
  6. தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete