Monday, January 20, 2025

திமுகவும் புத்தகவாசிப்பும்

திமுக உபிக்கள் புத்தகம் வாசிப்பதில்லை.

அது கலைஞருடன்

முடிந்துப் போனதாகவே நினைக்கிறேன்.

காரணம் சோ. தர்மன் அய்யா அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி விருது பெற்ற சூல் நாவலில் தந்தை பெரியாரை நாயக்கர் என்றும் நாயக்கர் கட்சி என்றும் விமர்சனம் படுத்தி இருப்பார். 

எந்த ஒரு தலைவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.

பெரியாருக்கு குழந்தை இல்லை என்ற அவர் தனிப்பட்ட வாழ்க்கையை

கதை மாந்தர்களின் உரையாடல் வழி நக்கல் அடித்திருப்பார்.

பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கதையில் காலவழுவாக சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசு ஆண்டதை மறந்து அதை 1967க்குப் பிறகான கதைக்களம் ஆக்கி இருப்பார்.

சூல் வாசித்தவர்கள் யாருக்கும்

இது புரியவில்லையா?

அல்லது சூல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதும்

தர்மன் அய்யாவுக்கு திராவிட மாடல் கனவு இல்லம் வழங்கி கெளரவித்ததும் கூட

இதற்காக தானா!!!

யாருக்குத் தெரியும்.

ஆ ஓ என்றால் எழுத்தாளர் ஜெயமோகனை வரிந்துக் கட்டிக்கொண்டு விமர்சிக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் இதை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை!???

மில்லியன் டாலர் கேள்வி இது.

பெரியார் அண்ணா கலைஞர் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அவர்களின் கருத்துகளுடன் முரண்பட லாம். ஆனால் ஒரு நாலாந்தரமான அருவெறுப்பு தரும் வகையில் மஞ்சள் பத்திரிகை தரத்தில் புனைவுகளில் ஊடாக..

எழுதி ...அதையும் இவர்கள் எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து அதையும் சாதித்துக் காட்டி...

இதெல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது???

காரணம் திமுக உபிக்கள் புத்தகம் வாசிப்பதில்லை!

அவ்வளவுதான்!

#திமுக_புத்தகவாசிப்பு

#DMK_dravidamodel

#DMK_Lit

4 comments:

  1. சோ.தர்மனுக்கு மட்டுமல்ல நம் நாஞ்சில் நாடனுக்கும் , இன்னும் பல கலை, இலக்கிய படைப்பாளர்களுக்கு
    திராவிட ஒவ்வாமை உண்டு. ஆனால், நாஞ்சில் நாடன் , மற்ற பலரோ புனைவு என்ற பெயரில் இவ்வளவு கீழிறங்கி சிலாகித்தது இல்லை. சோ.தர்மன் இலக்கியம் படைப்பதற்கு பதில் மஞ்சள் பத்திரிக்கை நடத்தலாம். நல்ல வியாபாரமாகும்.
    "கனவு இல்லம்" சாகித்ய அகாதமி விருதாளர்களுக்கானது. சாகியத்த அகதாமி விருது தேர்வாளர்கள் "நாயக்கர் கட்சி" என எழுதியது போதுமென புளங்காகிதம் அடைந்திருக்கலாம். சாகித்ய அகாதமி விருது கிடைத்தாலேயே
    கனவு இல்லமும் தர வேண்டியதாயிற்று. அரசு அதை தவிர்க்க இயலாதது தானே?

    ReplyDelete
  2. சோ.தர்மனுக்கு மட்டுமல்ல நம் நாஞ்சில் நாடனுக்கும் , இன்னும் பல கலை, இலக்கிய படைப்பாளர்களுக்கு
    திராவிட ஒவ்வாமை உண்டு. ஆனால், நாஞ்சில் நாடன் , மற்ற பலரோ புனைவு என்ற பெயரில் இவ்வளவு கீழிறங்கி சிலாகித்தது இல்லை. சோ.தர்மன் இலக்கியம் படைப்பதற்கு பதில் மஞ்சள் பத்திரிக்கை நடத்தலாம். நல்ல வியாபாரமாகும்.
    "கனவு இல்லம்" சாகித்ய அகாதமி விருதாளர்களுக்கானது. சாகியத்த அகதாமி விருது தேர்வாளர்கள் "நாயக்கர் கட்சி" என எழுதியது போதுமென புளங்காகிதம் அடைந்திருக்கலாம். சாகித்ய அகாதமி விருது கிடைத்தாலேயே
    கனவு இல்லமும் தர வேண்டியதாயிற்று. அரசு அதை தவிர்க்க இயலாதது தானே?

    ReplyDelete
  3. ஆம் பேருண்மை அம்மா....

    துணைச் செய்தி என்னவென்றால்... திராவிட இயக்கத்தைக் கிண்டல் செய்பவர்களுக்கும்... கிருத்துவ மத எதிர்ப்பை உள்ளடக்கமாக எழுதுபவர்களுக்கும் மட்டுமே அண்மைக் காலங்களில் சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன...

    ReplyDelete
    Replies
    1. தமிழ் இயலன்

      Delete