டிச.1983. தாதாவாக இருந்த வரதாபாய் பம்பாய்த் தமிழர் பேரவை நிறுவி மும்பை அரசியல்வாதிகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருந்த தருணம்.
அதுவே அவருக்கு முடிவுரை எழுதியது என்பது வேறொரு கதை.
இங்கே இந்த அழைப்பிதழில் அவர் இருக்கிறார். (மு. வரதராசனார்/ முனுசாமி வரதராசனார் )ஆனால் நிகழ்வில் அவரில்லை!!!அவர் சம்மத்துடன்தான் அவர் பெயரைச் சேர்த்திருக்க முடியும். ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது ஒரு சுவராஸ்யமான திருப்புமுனை.
கலைஞரிடம் வரதாபாய் நெருங்குவதா..?
விடலாமா!
என்று அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் நினைக்கிறார். ஏன் அப்படி நினைச்சார்னு யாருக்குத் தெரியும்?!🙃
எம்ஜிஆர் அதே நாளில் வரதாபாய்க்கு சிறப்பு செய்ய மாபெரும் நிகழ்வு சேலத்தில் ஏற்பாடு செய்கிறார்.அமைச்சர் ராஜாராம் மூலம் வரதாபாயுடன் பேசுகிறார்கள். எனவே கலைஞரின் நிகழ்வில் வரதாபாய் வரவில்லை.
வரதாபாய் சார்பாக தமிழர் பேரவை செயலாளர் பரமசிவம் அவர்கள் கலைஞருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்கிறார்..கலைஞர் அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு தன் உரையில் குறிப்பிடுகிறார்.
" வரவேண்டிய வரதராசன் வராத ராசன் ஆகிவிட்டார்."
மும்பையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இன்றும் இதைச் சொல்லிச் சொல்லி ரசிக்கிறார்கள்.
நன்றி மும்பை ஜேசுராஜ்.
#கலைஞர்_மும்பை
#கலைஞர்_மும்பைதமிழர்
வருத்தமாக இருக்கிறது இவர்கள் தங்களை பெரிய எழுத்தாளர்களாக காட்டிக்கொள்ள தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா இவர்களை பற்றி விமர்சனம் செய்கிறார்கள்.நீங்கள் கூறுவது போல் உபி கள் வாசிப்பது இல்லை.திக திமுக செய்த சாதனை இவர்களுக்கு மறந்து விட்டது போல் தெரிகிறது
ReplyDeleteதங்கள் பின்னூட்டம் திமுக வரும் புத்தக வாசிப்பும் என்ற பதிவுக்கான பின்னூட்டமாக நினைக்கிறேன். மிக்க நன்றி
ReplyDelete