Sunday, May 21, 2023

பூக்காலம் தமிழில் இல்லை.

                     பூக்காலம் தமிழில் இல்லை.

இல்லவே இல்லை.
சரவணா..
இங்கே இருப்பதெல்லாம்
கற்பு கற்பு கற்பு.
அப்புறம் கற்பு போயிட்டா
செத்து தொலை.
கற்பு எப்போதாவது
கட்டிய புருஷனின் டார்ச்சர் தாங்காமல்
கழண்டுவிடும்னு
நமக்கு யோசிக்கவே முடியாது..
அய்யய்யோ..
இப்படி யோசிப்பதே பாவம்.
நம்ம்மோட சினிமா கற்பு இருக்கே
அது நிஜக் கற்பை விட வெயிட்டானது.
அதைக் கையை வச்சே, நீ தொலைஞ்சே போ.
அப்படி எல்லாம் நீ கதைக்கு கூட
காட்டிட்டு அப்புறம் தியேட்டரில
படத்தை ஒடவிட முடியுமா என்ன!
அடடா...
இன்னொரு ரொம்ப முக்கியமான மேட்டரு.
கதையில கற்பு போனது யாருக்கு
எதுக்கு என்ன சூழல்
இதெல்லாம் நமக்குத் தேவையில்ல.
நம்ம அதில நோண்டி கண்டுப்பிடிச்சிடுவோம்
இவன் யாரு வீட்டு கதையை காட்டறான்!
அவுக சாதி என்னனு..
ஆமாடே..
சாதி ரொம்ப முக்கியம்..
அதக் கண்டுப்பிடிக்கிறதில நம்ம ஆட்களுக்கு
இருக்கிற கில்லாடித்தனம்
எவனுக்கும் கிடையாதுங்கறேன்.
அப்புறம் என்ன...
ஒரே ரணகளம்தான்.
அந்தச் சாதி பொம்பள எல்லாம்
இப்புடித்தான் போனானு
புரிஞ்சுப்பான்..
இப்படியாக நாம இருக்கிறதால
நம்ம பூக்காலம் கதையில
அந்தக் கிழவிக்கு எப்போதொ எதோ
ஒரு சூழலிலே இன்னொரு ஆணோட
ஏற்பட்ட அந்த உடலுறவும் ஸ் நேகமும்
கதையில ஒரு சஸ்பென்சாகி
க்ளைமாக்ஸில அது அந்தப் பாட்டி இல்ல,
அதே பேர்ல அந்த வீட்டில இருந்தப் பாட்டியோட
உறவுக்காரி
அல்லது பொண்ணு
அல்லது வேலைக்காரி..
யாரோ...ஒருத்தி,,
அப்படின்னு கதை க்ளைமாக்ஸ் வந்துடும்.
தேவைப்பட்டா கதையில கிழவியை
சாகடிச்சிடனும்ம்,
அப்போ தான் நாங்க எல்லோரும்
விக்கிவிக்கி அழுது
எங்கப் பாவத்தை எல்லாம்
கண்ணீரில் கழுவி..
பரலோகம் போகலாம்.
எப்படியோ..
தமிழில் பூக்காலம் இல்லை
இல்லவே இல்லை.
சரவணா
எங்க கிழவிக்கு கற்பு முக்கியம்டே.
பிகு: நேற்று பார்த்த பூக்காலம் மலையாளப்படம்.
கிழவிக்கு கற்பு போயிட்டதால
கிழவன் படற அவஸ்தை இருக்கட்டும்.
தமிழ் மனசு எப்புடி எல்லாம் அவஸ்தைப் படுது
பாருங்க..
May be an image of 6 people, people smiling and text
All reactions:
Balakrishnan R, Rajesh Sankarapillai and 5 others

2 comments:

  1. ஆம் மேடம். நாங்களும் நேற்று பார்த்தோம். நன்றாக இருந்தது.
    பிரணவ விலாசம் என்ற சமீபத்திய மளயாளப் படமும் மிக அருமை. பார்க்கவில்லையெனில் கண்டு ரசியுங்கள். அதுவும் தமிழில் இல்லை. எப்போதாவது டப்பிங் செய்து வரலாம்.
    மற்றொரு சிறப்பான படமான 2018 உம் தமிழில் இல்லை.

    ReplyDelete
  2. பூக்காலம் இப்போது தமிழிலிலும் இருக்கிறது மேடம். நான் இன்று ஓ.டி.டி இல் பார்த்தேன்.

    ReplyDelete