Tuesday, February 2, 2021

மும்பையில் அண்ணாவின் தம்பியர்

 


அறிஞர் அண்ணா ஒரு கூட்டத்தில் பேசும்போது,

"சிவாஜிகணேசனைப் போல் இன்னொருவர் நடிப்பது

சிரமம். ஒருவேளை மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால்,

சிவாஜிக்கு இணையாக நடிக்கக்கூடும்"

என்று குறிப்பிட்டிருந்தார்.

யார் இந்த மார்லன் பிராண்டோ..?
இவர் நடித்தப் திரைப்படங்களை தம்பிகள் யாரும்
பார்த்திருக்கவில்லை!
ஆனால்… அண்ணாவோ மார்லன் பிராண்டோ பற்றிப்
பேசிவிட்டார்.
மார்லன் பிராண்டோ பற்றி எழுதவும் செய்திருக்கிறார்.
( தம்பிக்கு கடிதம் அல்லது அவர் நட த்திய ஆங்கில இதழ்கள்.. )
இதனால் என்ன நடந்த து என்றால் அண்ணாவின் தம்பியர்
மார்லன் பிராண்டோ திரைப்படம் மும்பையில்
ஸ்டேர்லிங்க் தியேட்டரில் திரையிடப்பட்ட போது
அனைவரும் கூட்டாக டிக்கெட் முன்பதிவு செய்து
மார்லன் பிராண்டோவை திரையில் பார்த்துவிட்டு
வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு திரைப்படம் புரிந்ததா
என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள் !
அவர்கள் அனைவரையும் தியேட்டருக்கு அழைத்துச்
சென்றவர் என் தந்தையார் திரு. பி.எஸ். வள்ளி நாயகம்
அவர்கள்.
திரைப்படங்களுக்கு அக்காலத்தில் டப்பிங்க் இல்லை.
காட்சிகள் ஓடும்போது வசனம் நமக்குத் தெரிந்த மொழியில்
திரையில் வரும் வசதிகள் இல்லை. என்றாலும் கூட,
ஆங்கிலம் அதிகமாக அறியாதவர்களும் அன்று
அண்ணா பேசிய மார்லன் பிராண்டோ திரைப்பட த்தைப் போய்ப் பார்த்திருக்கிறார்கள்..!
அண்ணா தன் எழுத்துகளில் தொடர்ந்து
தன் தம்பிகளுக்கு புதிது புதிதாக கற்பித்துக்கொண்டே
இருந்தார். கலை இலக்கியம் உலக அரசியல் என்று அவர்
ஒரு பரந்துப்பட்ட உலகத்தைக் காட்டினார்.
அவருக்குள்ளும் அறிவுப்பசி கடைசி நிமிடம் வரை இருந்தது.
இன்னும் சொல்லப்போனால் அவர் வாசித்தப்
புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும்
அவரைச் சுற்றி அவருக்கு இணையாகவோ அல்லது
அவர் அளவுக்கு வாசிப்பு உள்ளவர்களோ யாருமே இல்லை.
அவர் காலமெல்லாம் தனித்தே பயணித்தார்.
தனித்துவமானவாராக இருந்தார்.
(வழக்கம்போல) நான் அவருடன் சிலப் புள்ளிகளில்
முரண்படுவதுண்டு) அவர் எளிமையும் அவர் பண்பும
அவர் மும்பைத் தம்பிகளிடம் நடந்து கொண்டவிதமும்..
அதைப் பலர் சொல்லக் கேட்டு வளர்ந்த நானும்…
அவர் நினைவுகளைப் போற்றுகிறோம்.
(புகைப்படம் மும்பை நிகழ்வில் அண்ணாவும் அப்பாவும்)

(03 பிப்ரவரி அண்ணாவின் நினைவு நாள்)

1 comment:

  1. அறிஞர் அண்ணாவின் நினைவலைகள் படிக்கும் போது சிலிர்க்கவே செய்கிறது
    தங்கள் தந்தை அண்ணாவோடு நட்பில் இருந்த பதிவைத்தாண்டி திராவிட உணர்வாளர்களை பேரன்பால் ஏந்தி நின்ற பாங்கு நூல்களில் எழுதத் தகுந்த செய்தி அம்மாவுக்கு வணக்கம்

    ReplyDelete