Monday, February 1, 2021

திராவிட இயக்கம் அறிவியக்கம் இல்லையா ?!

 



இன்றிலிருந்து 60 ஆண்டுகளுக்கு முன் சத்தியமங்கலம் போன்ற

ஒரு சிற்றூரில் ‘ரிபப்ளிக்’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருக்கிறார் அண்ணா - ஒன்றரை மணி நேரம்

. எல்லாமே ஆதாரங்களோடு இருக்கின்றன.

எழுபதாண்டு சுதந்திர இந்தியாவில் வாழும் இன்றைய

பெரும்பான்மை பட்டதாரி மாணவர்களுக்குத் தெரியாது

தேசியத்துக்கு என்ன விளக்கம், ஜனநாயகத்துக்கும் குடியரசுக்கும்

என்ன வேறுபாடு என்று!

இன்னும் எவ்வளவு நாள்

‘திராவிட இயக்கம் அறிவியக்கம் எல்லாம் இல்லை’ என்ற

புரட்டை மேலும் மேலும் உருட்டிக்கொண்டிருக்கப்போகிறீர்கள்?

அண்ணா நடத்திய ‘ஹோம்லேண்ட்’, ‘ஹோம்ரூல்’ இரண்டின்
தொகுப்புகளையும் பார்க்க நேர்ந்த என்னுடைய நண்பர்கள்
பலரும் துடித்துப்போனார்கள். காரணம்,
எவ்வளவு பெரிய உழைப்பு இந்தத் தமிழ்ச் சமூகத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது! எவ்வளவு பெரிய தொலைநோக்கு இங்கே செயல்பட்டிருக்கிறது! எங்கே அதன் தொடர்ச்சி அறுபட விட்டோம்?’
என்ற எண்ணம்… (சமஸ் வலைத்தளத்திலிருந்து)
நன்றி சமஸ்..
திராவிட அரசியலை திராவிட அரசியலின் அறிவியக்க எல்லையை
அறிந்து கொள்ள அண்ணாவின் எழுத்துகளை வாசிப்பதும்
அண்ணாவின் எளிய வாழ்க்கையை வாழ்வதும் தான்.
இதை மட்டுமே செய்தால் போதும்..
அண்ணா விட்டுச்சென்றிருக்கும் அவர் எழுத்துகளை மட்டுமாவது
வாசித்து தங்களை அரசியல் படுத்திக்கொள்வார்களா
திராவிட அரசியல்வாதிகள்?!!!



(03FEB அறிஞர் அண்ணாவின் நினைவு நாள்)

No comments:

Post a Comment