Monday, May 27, 2019

நேருவின் இந்தியா தான்



நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு.
சிலர் அவர் பிம்பத்தை மறைத்துவிடலாம் என்று
 பிரம்ம பிரயத்தனம் செய்து பார்க்கிறார்கள்.
ஆனால் அவருடைய கனவுகள் நனவாகி
அதிலிருந்து விளைந்தப் பயிர்களைத்தான்
இன்றுவரை இந்தியா அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
அவருடைய சில அரசியல் முடிவுகளுடன் 
நாம் மாறுபடலாம். ஆனால் அவை எதுவும் எந்த
கார்ப்பரேட்டுகளுக்கும் அவர் எழுதிக் கொடுத்த
அடிமை சாசனங்கள் அல்ல.
.
Related image

அவர் தான் இன்று உலக நாடுகளில் வாழும் இந்திய
மூளைகளை உருவாக்கிய பல்கலை கழகம்.
அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS), 
இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT), 
இந்திய மேலாண்மைக் கழகம் (IIM), 
தேசிய தொழில் நுட்பக் கழகம் ( NIT) 
போன்ற உயர்கல்வி நிறுவனங்கள்
 நேருவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டவை தான்.. 
இந்திய விடுதலை வீரர்களின் சித்திரவதை முகாமில் தான்
 கரக்பூரின் ஐஐடி யை கட்டி எழுப்பினார்.
அணைகளும் கனரக இரும்பு உருக்கு ஆலைகளும்
அவர் கட்டிய கோவில்கள்.
அவர் காலத்திய BARC அணு ஆராய்ச்சி மையம் தான்
பின்னர் வந்த அப்துல்கலாமுக்கு கிடைத்த அக்னிச்சிறகுகள்.
தமிழகத்தின் பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை,
 ஆவடி பீரங்கி தொழிற்சாலை திருச்சி பாய்லர் தொழிற்காலை 
அவர் காலத்தில் உருவானவை தான்.
உலகத்தலைவர்கள் பலருக்கு அவர் தான் ஆதர்ச சக்தி. 
நெல்சன் மண்டேலா நேருவைத்தான் தனக்கு முன்மாதிரி
 என்று சொல்கிறார்.
இன்றைக்கு விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பி 
இந்தியா வல்லரசாகிவிட்டது என்று மார்தட்டி சொல்லுகிறார்களே.
அவர்களுக்குத் தெரியும் 
1962ல் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழு (INCOSPAR) 
அமைத்தது நேரு என்று.

அதனால் தான் மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத்துறை
 அமைச்சரான வாஜ்பாய் அவரின் அறையில் இருந்த
 நேருவின் படத்தை எடுக்க முயன்ற போது , .
 “இல்லை ! அவரின் படம் அங்கேயே இருக்கட்டும் !” என்றார்.

மக்களவைத் தேர்தலின் போது இந்தியாவெங்கும் பயணித்து
 பிரச்சாரம் செய்த நேரு தான் போட்டியிட்ட தொகுதியில் மட்டும் 
பிரச்சாரம் செய்யவில்லை. காரணம் கேட்கப்பட்ட பொழுது ,
”என்னுடைய திறந்த புத்தகமான நாற்பது ஆண்டுகாலப் 
பொதுவாழ்க்கையைப் பார்த்து மக்கள் எனக்கு ஓட்டுப் போடட்டும் !”
 என்றார்
ராகுல் ...
காங்கிரசும் மறந்துவிட்ட உங்கள் பூட்டனாரின்
பெருமை மிக்க வரலாறு இது.
உங்கள் பயணம் அவரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்.. ராகுல். 

இப்போதும் அந்தப் பாதை உங்களுக்காக
திறந்தே இருக்கிறது...
நடக்கும் துணிவிருந்தால்
எதுவும் வெகுதூரமில்லை.

1 comment:

  1. நேருவுக்கு மறுபக்கம் ஒன்று இருக்கிறது.இந்துத் தத்துவத்தையும்
    இந்தியப்பண்பாடையும் மதிக்காது அதை அவமதித்து இந்து விரோதக்கொள்கையை கடைப்பிடித்தவர்.இன்றைய இந்தியாவின்
    பிரச்சனைகளுக்கு அவரே காரணகர்த்தா என்பது மறுக்க முடியாத
    உண்மை.காங்கிரஸ் அடிமைத்தனத்திலிருந்து வெளிவந்தால் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும்.

    ReplyDelete