நேற்று இளையராஜா.
இன்று நீனா சிமோன்"
இது தற்செயலானதுதான்🙏🦋
🙏🙏🙏🙏
" நான் நான் நான்"
நான் என்று தனியாக எதுவுமில்லை!
இருக்கவும் முடியாது 🦋
ஃ
நீனா சிமோன்..
இசை என்பது வெறும் ரசனைக்கானது மட்டும்தானா?!
இசையின் பின்னால் ஜாதி இன மொழி நிற வேறுபாடுகளின் அரசியல் இருக்கிறது.
சிலருடைய இசை தான் சமூகவெளியில் மனித உரிமைக்கான குரலாக எத்தருணத்திலும் ஆதிக்கத்தை எதிர்க்கும் வல்லமையுடன் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க வல்லரசை எதிர்த்து தன் இசை வழியாக தன் கருப்பின மக்களின் விடுதலைக் குரலை எல்லா தருணங்களிலும் இசையாக ஒலித்தவர் நீனா சிமோன்.
" என்னுடைய வரிப்பணத்தில் வியட்நாம் மக்களைக் கொன்று குவிக்கிறாயா?" என்று தன் ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் கொடுக்கும் ஆற்றல் அவருடைய இசை வெளிக்கு இருந்தது.
இசை அவரைப் போன்றவர்களுக்கு ஒரு போராட்ட கருவி. இசை வெறும் ரசனைக்குரியதோ வலி நிவாரணியோ மயக்க மருந்து மட்டும் அல்ல!
இசை ஆதிமனிதனின் முதல் மொழி. எழுத்து மொழி எப்போதுமே அதிகார வர்க்கத்தின் மொழி தான். இசை அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் மனிதனின் குரல்.
நீனா சிமோன்களும்
இசைக்கலைஞர்கள் தான்
என்பதை மறந்துவிடுவது எளிதல்ல.
"எல்லாமும் என் சுயம். நான் அடைந்திருக்கும் அனைத்தும் நான் நான் நான் மட்டுமே! என் வெற்றி சுயம்புவாக நான் அடைந்திருக்கும் என் உழைப்பின் வெற்றி" இப்படியாக யார் நினைத்தாலும் யார் சொன்னாலும் இது எல்லாமே பாதி உண்மை மட்டும் தான். மீதி உண்மையில் முகம் தெரியாத பலருடைய உழைப்பு பலருடைய போராட்டங்கள் இவை அனைத்தும் உருவாக்கிய சமூகவெளி. சுயம்பு துளிர்ப்பதற்கு கூட ஒரு சமூகவெளி அதற்கு தயாராக இருக்கிறதா என்பது தான் முக்கியம்.
மற்றதெல்லாம் வெறும்
" நான் நான்," பிதற்றல்கள்.
நான் -
நான் மட்டும்
என்று எதுவும் இல்லை.
No comments:
Post a Comment